இன்றைய நூதன இராணவக் கருவிகள்? நாளைய நிதர்சனம்?

நம் வாழ்வில் அன்றாடம் நடக்கும் செய்திகள், கல்வி 4.0க்கான நம்முடைய இந்த ஆய்வின் பயனாளிகளை அடையாளம் காண உதவுகின்றது மெலோட்டமாக . நம்முடைய ஆய்வின்
பயனாளிகளாக , கணினி, மனிதர்கள் என்று இருபிரிவு இருக்கின்றது. முதலில் கணினியை முக்கியப் பயனாளாராக காட்டக் கூடிய செய்திகள் இரண்டு. Associated Press செய்தி தளத்தில் இன்றைய முக்கியமான போர் செய்தி எவ்வாறு இணைய போர் முறை வலிமை மிக்கதாக இருக்கிறது என்று தெரிவிக்கின்றது. வ்யாசட்(viasat) என்ற அமெரிக்க நிறுவனம், ஐரோப்பிய நாடுகளுக்கு விண்கோள் வழிஐரோப்பிய கண்டத்து நாடுகளுக்குத் தொலைத் தொடர்பையும், இணைய வழி தொடர்பையும் ஏற்படுத்திக் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. அந்த நிறுவனத்தின் மோடம் அனைத்தும் இணையவழி தாக்குதலால் சிதைந்து உள்ளன, இத்தகையத் தாக்குதலை இரஷ்யா ஏவி விட்டு இருப்பதாக உக்ரேன் அதிகாரிகள் தெரிவிக்கின்றன.
ஆனால் இந்தத் தாக்குதலின் பாதிப்பு உக்கரைனுக்கு அடுத்து ஜெர்மனி,போலந்து, பிராண்ச் நாடுகளின் முக்கிய தொலைத் தொடர்பு, இணைய வழித் தொடர்பு முடக்கப்பட்ட்தோடு அந்நாடுகளின் கட்டுப்பாட்டிலிருந்த காற்றாலைகளை இயங்க விடாமல் செய்து விட்டன.

அடுத்த செய்தியாக ஏப்ரல் ஐந்தாம் தேதி 2022ம் ஆண்டு இரஷ்ய அலுவலர்கள் வெளியிட்ட செய்தியில் விக்கிப்பீடியாதளத்தில் உள்ள உக்க்ரேன் நாட்டில் இரஷ்ய நாடுகளின் இராணுவ நடவடிக்கைகலைப் பற்றிய பல தவறான தகவல்கள் அழிக்க்ப்பட வேண்டும் என்றும் இல்லையெனில் அத்தளத்திற்கு ஏறத்தாள 48 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு அபராதத் தொகை செலுத்த வேண்டும் என்று அந்த அரசு அறிவித்து உள்ளது.

இரஷ்ய நாட்டின் சமீபத்திய இராணுவ நடவடிக்கைகளில் தாங்கள் தலலையிட்டால் அது ஒருமூன்றாம் உலகப்போராக மாறிவிடக்கூடிய ஒரு பேராபத்து ஏற்படும் என்று உலக நாடுகள் அஞ்சுகின்றன. எனவே தான் பொருளாதாரத் தடைகள் மூலம் இராஷ்யாவின் இராணூவ பலத்தைக் குறைக்கப் பார்க்கின்றனர். உக்ரேனுக்கு பொருளுதவி மட்டும் செய்கின்றனர்.

இதே நிலைமை இன்னும் ஐந்தாறு ஆண்டுகளில் வந்திருந்தால் ஒரு உலகப்போர் தொடங்கி விட்டதாகவே நாம் அனைவரும் எடுத்துக் கொள்வோம்.

ஏன்?

சங்க காலத் தமிழகத்தில் நடக்கும் போர்களின் ஒரு அங்கமாக ஆடுமாடுகளைக் கைப்பற்றிச் செல்வார்களாம், அது போல இன்னும் ஐந்து ஆண்டுகளில் ஒரு நாட்டின் தரவுகளும்,
தரவுத் தளங்களுமே, தாக்கப்பட்டு கைப்பற்றப்படும். ஆனால் என்ன ஒரே நேரத்தில் பல நாடுகளைத் தாக்க முடியும்.

இரஷ்யாவின் இணையத் தாக்குதலாம் பாதிக்கப் பட்டது உக்ரேன் மட்டுமல்ல பிரான்ஸ், ஜெர்மனி போலந்து நாடுகளின் காற்றாலைகள் முடிக்கப்பட்டு விட்டன. ஒரே நாடு நான்கு நாடுகளின் மேல் ஒரே நேரத்தில் அதிக செலவின்றி தாக்குதாலை நடத்தியுள்ளது.

அமெரிக்க மண்ணில் இருக்கும் ஒரு அமெரிக்க நிறுவனத்தை இரஷ்ய அரசு எல்லை கடந்து தாக்கி இருக்கிறது என்றால் அந்தத் தாக்குதலை இன்னோரு அமெரிக்க நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (spaceX0) மீட்டுக் கொடுத்து இருக்கிறது என்றால் இரஷ்யா அமெரிக்காவைத் தாக்கியதாகவும் நாம் எடுத்துக் கொள்ளலாம்.

இரண்டாவது சொல்லப்பட்ட விக்கிப்பீடியா செய்தியில் ஒரு அரசாங்கம், பொதுமக்களால் நடத்தப்படும் விக்கிப் பீடியா நிறுவனத்தை தண்டிக்கின்றது என்றால் போர் என்ற பொருண்மை இராஜாங்கத்தின் எல்லையை கடந்து இருக்குமோ?

இன்றைய நூதனப் போர்க்கருவிகளில் நூதன அறிவியல் என்று பார்க்கும் போது இஸ்ரேல் நாட்டின் புதிய கண்டுபிடிப்பான என்ற ஆயுதம் அமெரிக்க $3.50 செலவில் உருவாக்கப்பட்டுளது.
(ஏறத்தாழ ரூ 400) இக்கருவியின் சக்தி லேசர் கதிர்களால் ஆனது. இக்கருவி பற்றிய ஒரு காணோளியை இஸ்ரேல் அதிபர், இஸ்ரேலின் நட்பு நாடுகளுக்கும், அண்டை நாடுகளுக்கும்
அனுப்பி உள்ளார். இந்த கருவி இஸ்ரேல் நாட்டின் எல்லைகளை சிறப்பாகப் பாதுகாக்கும் என்றும் இந்த ஒரு கருவியால் எந்த ஒரு ஆயுதத்தையும் சிதற வைக்க முடியும் என்பதால் இக்கருவி தன் நாட்டின் நில நீர் வான் எல்லைகளைப் பாதுகாப்பதற்கு என்று வைக்கப்படும் என்றும் இவர் இக்காணோலியில் கூறியுள்ளார்.

(உலகப் போர் வரும் என்று சொல்லவில்லை, அப்படிப்பட்ட சூழலில் கல்வி 4.0ன் விதிகளின்படி நம் பாடத்திட்டம் எப்படி இருக்க வேண்டும் என்று தான் ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம். பல அறிவியல் சோதனைகள், அறிவியியல் கண்டுபிடிப்புக்கள் இராணுவத் தேவைக்கான ஆராய்ச்சியில் உருவாக்கப்பட்டவையே

இந்த ஒரு சூழ்நிலையில் நம் கல்வி 4.0 ஆராய்ச்சியின் சார்பற்ற மாறியான கணினியை ஒரு பக்கமும் ஆசிரியர்கள் மாணவர்களை ஆகியன்சார்பு நிலை மாறிகளையும்
ஆராய்வோம்.

ஒரு உலகப் போர் போன்ற ஒரு சூழ்நிலையில் கணினி முதலில் எவ்வாறு செயல் படும் என்று பார்ப்போம். முதலில் கூறிய இரு போர் செய்திகள் முதன்மையாக கணினி சார்ந்தவை என்பது நமக்குப் படித்தவுடனேயே புரிந்து விட்டது. ஒரு போர் என்னும் போது நாட்டின் எல்லைகளுக்கு மட்டும் பாதிப்பு வராமல், நாடு முழுவதற்கும் ஏன் உலகம் முழுவதுமே பாதிப்பு வரும் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

இந்த கணினி சார், இணையம் சார் ஆயுதங்கள் கணினிகளாகல் மட்டும் இல்லாமல் இந்த ஆராய்ச்சிக்கு இணையத்தில் இருந்து தமிழ்நாடு எட்டாம் வகுப்பு ஆங்கில வழி பொது அறிவுப் பாடப்புத்தகத்தை தரமிறக்கி ஆராய்ச்சி செய்யலாம்

முந்தைய தொடர்களை வாசிக்க:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 78(அது என்ன  மக்களைச்சார்ந்த முதலாளித்துவம்?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 79(மாணவர்களின் வல்லமை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 80(தறி கெட்டு ஓடும் ரெயில்களும் சர்வ வல்லமையும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 81 – சுகந்தி நாடார்



 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *