சொன்னதே சொல்லும் கிளிப்பிள்ளை கணினி
சொன்னதே சொல்லும் கிளிப்பிள்ளை கணினி
சொன்னதைச் செய்யும் சுப்பாண்டியும்
கணினி தான். நம் மாணவர்களின் மூளைக்கும் மனித மூளையைப் போலவே செயல்பட விழியும் நம் கணினிக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. பாடநூல்களின் பொருண்மைகளின் வழி நாம் இப்போது இவை இரண்டையும் ஒப்புமைப்படுத்திப் பார்த்து வருகின்றோம்.
நம் மாணவர்களும் நம் பாடநூல்களில் உள்ள பொருண்மைகளில் எவ்வாறு தேறுவர் என்பதை பாடங்களிலுள்ள மதிப்பீட்டு வினாக்களின் அடிப்படையில் பார்த்து வருகின்றோம்.
அடுத்து சமூகவியலில் குடிமையியல் அலகு 2 குடிமக்களும் குடிஉரிமையும் என்ற பாடத்தைப் பார்ப்போம் இப்பாடத்தின் கற்றல் நோக்கங்களாக குடிமக்கள் குடியுரிமைக்கான பொருளையும் வரையறையும் அறிதல் இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் இந்தியக் குடியுரிமை பெறுதலும் நீக்குதலும் வெளிநாட்டுக் குடியுரிமைத் தன்மை குடி மக்களின் உரிமைகளும் பொறுப்புக்களும் என்று பாட விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இப்பாடத்தின் விவரங்கள், ஒருவர் இன்று இணையத்தில் படித்துத் தெரிந்து கொள்ளும் அடிப்படை விவரங்களைக் கொண்டுள்ளன/ செயல் முறைப் பயிற்சிகள் குறைவே
செயல்பாடு % | இவற்றை முயலுக % | உங்களுக்குத் தெரியுமா? % | பல்வகை திறநெறி வினாக்கள் % | இணைய செயல்பாடு % | குறிப்பு % | சிந்திக்க % | |
---|---|---|---|---|---|---|---|
கணினி | 100 | 100 | 100 | 90-100 | 100 | 100 | 90-100 |
ஆசிரியர் | 90-100 | 90-100 | 90-100 | 80-100 | 90-100 | 90-100 | 90-100 |
மாணவர் | 35-100 | 35-100 | 35-100 | 35-100 | 15-100 | 35- 100 | 35- 100 |
இப்படி ஒவ்வோரு பாடமாகப் பார்த்து வரும் போது சென்ற வாரம் நாம் பகுத்தாய்வு செய்த பாட விவரங்களில், கணக்குப் பாட விவரம் மட்டுமே கணினிக்கு ஏற்ற பாடமாக தெரிந்தது.
பாடநூலில் உள்ள விவரங்களை விட இன்னும் அதிகமாகவே இன்றையக் கணினி விவரங்களைத் திரட்டி வைத்துள்ளது. ஒரு மொழியில் மட்டுமல்ல, உலகில் உள்ள பல மொழிகளில் இத்தகையத் தகவல்கள் கிடைக்கின்றன உங்களுக்கு நான் சொல்வதில் சந்தேகம் இருந்தால் விக்கிப்பீடியாவை சென்று பாருங்கள், அதன் விவரங்கள் எத்தனை மொழிகளில் இருக்கின்ற்ன என்று.எனவே மற்றப்பாடங்களின் விவரங்கள் அனைத்தும் கணினிக்கு ஏற்கனவேத் தெரிந்து இருக்கக் கூடும், கணக்குப் பாடத்தில் உள்ள பயிற்சிகள் கணினியின் முடிவெடுக்கும் திறனை சோதிப்பதால் கணினியின் அடிப்படை செயல்பாடுகளை செய்ய கணக்குப் பாடம் ஓரளவு உதவி செய்யலாம். நான் என்ன சொல்ல வருகின்றேன் என்று உங்களுக்குப் புரியும் என்று நினைக்கின்றேன்.
இன்று நடமாடும் கலைக்களஞ்சியமாக நம் கணினி திகழ்கிறது, அதில் நம் பாடப்புத்தகத்தில் வரும் விவரங்கள் மட்டுமல்ல்ல,பாடநூலில் வரும் விவரங்களுக்கு எதிரான கருத்துக்களும் உள்ளன அறிவியல் சமூகவியல் வரலாறு புவியியல் என்று எடுத்துக் கொண்டால். இறந்தகால நிகழ்கால விவரங்கள் மட்டுமின்றி, நாளைய நிகழ்வுகள் பற்றிய கணிப்புக்களும் கணினி வாயிலாக நமக்குக் கிடைக்கின்றது.
நம்முடைய பகுத்தாய்வில் நாம் கண்ட பாடங்களின் சாராம்சத்தை நாம் இப்போது ஆராயாலாம்.
இன்று நாம் கணினி என்று பார்க்கும் போது, தகவல்கள் வெறும் உரை வடிவில் மட்டுமா இருக்கின்றது.? இப்பாடங்களில் பொதுவாக கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் எழுத்து வடிவில் உள்ள தரவுகள் கணினிக்கு கற்பிக்க போதுமா?
பாடப்புத்தகங்களில் வண்ண வண்ண படங்கள் இருக்கின்றது தான். கற்றலின் குறிக்கோளோடு ஒத்துப் போவதற்கான பிரிவுகளாக பாடப்பகுதி பிரிக்கப் பட்டு இருக்கின்றது தான். ஆனால் கணினியும் நாமும் கைகோர்த்து பயணம் செய்யும் இந்தக் காலக்கட்டத்தில், கணினிக்கு உரை வழியாக செய்தி மட்டும் கொடுத்தால் போதுமா?
ஏற்கனவே கவனச்சிதறலில் தங்கள் நேரத்தை விரயம் செய்யும் மாணவர்களுக்கு, உரையைத் தாண்டி எந்தந்த விதமாக நாம் பாடங்களைக் கொண்டு போகலாம் என்று யோசிக்க வேண்டி இருக்கிறோம்.
இணையம் வழி காணோலி மட்டும் இட்டு விட்டால் போதுமா? சில பொருத்தமான இணையச் சுட்டிகளைக் கொடுத்தால் போதுமா?
https://www.christophtrappe.com/alexa-podcasts/ என்ற தளத்தில் சென்று பாருங்கள்? ஒரே செய்தியை எத்தனை விதங்களில் ஒரு தகவலைக் கொடுக்கின்றனர். நாம் கொடுக்கப்பட்டுள்ள தகவலை மேலோட்டமாக வாசிக்க எவ்வளவு நேரம் ஆகும் என்று கூட கணக்கிட்டுச் சொல்கின்றனர். ஏன் வாசகர்களின் கவனச் சிதறலை கணக்கில் கொண்டு, அவர்களின் வாசிப்புத் தன்மையை ஊக்குவிக்கும் விதமாக ஒருவர் இணையத்தில் உள்ள செய்தியை வாசிக்கத் தோராயமாக எவ்வளவு நேரம் ஆகும் என்று கூடச் சொல்லி ஒருவரை இணைய தளத்திற்கு வருகை புரிய ஊக்குவிக்கின்றனர்.
ஒரு தளத்தில் கொடுக்கபடும் செய்திகள் மெய்யோ, பொய்யோ செய்திகளை உடனுக்குடன் மாற்றுவது மிக எளிது. ஆனால் பல துறை வல்லுனர்களின் ஆராய்ச்சியில் உருவாக்கப் படும் பாடநூல் மாணவரின் பயன் பாட்டிற்கு ஏற்ப, தேவைக்கு ஏற்ப உடனடியாக மாற்ற இயலாது.புதிய செய்திகளை உடனுக்குடன் இட இயலாது. ஒரு தனி மாணவத் தேவைக்கு ஏற்ப பயிற்சிகளை வேறுவிதமாக மாற்றி அமைக்க இயலாது.பாடப்புத்தகம் என்பது அச்சுவடிவில் இருக்கும் போது அது மாற்ற இயலாததாகத் தானே இருக்கின்றது.
புதிய தகவல்களை சேர்க்க ஏதுவாக பாடங்கள் இருக்க வேண்டாமா? புதிய புதிய பாடங்களை திட்டமிட்டு ஒவ்வோரு முறை உருவாக்கி அதற்கேற்றவாறு ஆசிரியர்களைப் பயிற்சிக் கொடுப்பதற்கு எவ்வளவு பொருள் செலவு? எத்தனை பேருடைய உழைப்பும் நேரமும் இங்கு முதலீடு செய்யப்படுகின்றது, இந்த மூன்று முதலீடுகளும் விழலுக்கு இறைத்த நீராக வீணாகலாமா? இல்லை களர் நிலத்தில்விழும் விதைகளாகாலகலாமா?
விவரங்கள் அனைத்தையும் பள்ளிக்கு வந்து கற்றுக் கொள்ளும் மனித மாணவர்களுக்கான சிக்கல்களையே இத்தனை இருக்கும் போது, நம் பாடநூலில் உள்ள அடிப்படை அறிவுகளை ஏற்கனவே தாங்கி வரும்
கணினிகளுக்கு நாம் இன்னும் எத்தனைத் தடைகளைத் தாண்டி வர வேண்டும்?
மனித மாணவனாக இருந்தாலும் சரி, கணினியே நம் வகுப்பில் மாணவராக இருந்தாலும் சரி பாட விவரத்தரவுகள் பன்முகத் தன்மை கொண்டவையாகவும், தொழில்நுட்பமாற்றங்களுங்களுக்கு இணக்கமாக மாறும் தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டுமல்லவா?
நம்முடைய பாடநூலில் சாராம்சம் ஏற்கனவே கணினிக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் போது, ஏன் இன்னும் விவரம் கொடுக்க வேண்டும் என்று நாம் யோசிக்கலாம்? ஏற்கனவே வெறும் விவரங்கள் தரவுகளாக கொண்டு செயல்படும் கணினி அனைத்திலும் 100% என்பது நம் யூகம். ஏன் எனில் கணினியின் பல செயல்பாடுகளும் சரி நம்முடைய செயல்பாடுகளும் சரி ஆங்கிலத்தில் இருக்கின்றன்.
பொதுவாச் செயற்கை அறிவுத் திறன் கொண்ட ஒரு கணினிக்கு இந்த விவரங்கள் பெரும்பாலும் ஆங்கில மொழியிலேயே இருக்கின்றன. அதனால் விவரங்களும் அதை சார்ந்த கணினியின் செயல்களும், செயல்களுக்கு அடிப்படையான முடிவுகளையும் எடுக்க ஆங்கில மொழியில் தான் அதிகம் இருக்கின்றது. இன்று செயற்கை அறிவுத் தொழில்நுட்பத்தின் முன்னனியில் இருப்பது சீனாவும் அமெரிக்காவும் தான். அதிலும் செயற்கை அறிவுத் திறன் சார்ந்த தொழில்நுட்பங்களும் அதற்கான ஆராய்ச்சிகளும் அமெரிக்காவில் தான் நடந்து கொண்டு இருக்கின்றன.
இந்நிலையில் நம் பாடங்களில் உள்ள கேள்விகளை அப்படியேத் தமிழ் மொழியில் கேள்வியாகக் கேட்டால் கணினி சரியான பதில் சொல்லுமா? சந்தேகம் தான். ஏன் எனில் பாடங்கள் அனைத்தும் இன்று அச்சு வடிவிலேயே இருக்கின்றன.
இணையத்தில் தமிழ் மொழியில் கிடைக்கும் சொற்பத் தகவல்களும் நம் பாடப்பொருண்மையைச் சார்ந்ததாக இல்லை. அப்படியே பாடப் பொருண்மைகள் கொடுக்கப்பட்டு இருந்தாலும் அதற்கான விடைகளை தமிழில் கணிக்கும் கணக்கீட்டு முறைகளை நாம் இன்னும் தமிழில் ஆழமாக ஆராய்ச்சி செய்யவில்லை.
தமிழ் மொழியில் செயற்கை அறிவுத் திறன் கண்டிப்பாக வளர வேண்டும்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.