அருகி வரும் மனித வளம்

நாம் முன்பே பார்த்தபடி ஒரு மாணவன் 8 மணிநேரம் பள்ளியிலும் அதை அடுத்த நான்கு மணிநேரம் ஏதாவது ஒரு பயிற்சி வகுப்பிலும் ஈடுபடுகின்றார். ஒரு நாளைக்கு 12 மணி நேரம் என்றால் ஒரு கல்வி ஆண்டில் அவர்

220லிருந்து 230 நாட்களை முறையான பயிற்சி பெற்று தன் அறிவை விருத்தி செய்ய உழைக்கின்றார் அதாவது ஒரு ஆண்டில் சுமார் 2640 மணிநேரம் முதல் 2760 மணிநேரம் அவர் கடினமாக உழைக்கின்றார். ஆக மொத்தம் பன்னிரெண்டு ஆண்டுகளில் 31680அணி நேரங்களிலிருந்து ,33120 மணிநேரம் வரை ஒரு மாணவரின் கடின உழைப்பு எத்தனை விதமான புத்தாக்க சிந்தனைகளைக் கொன்டு இருக்க வேண்டும்? எத்தனை நூதனமான கண்டு பிடிப்புக்கள் இருக்க வேண்டும்?

ஏன் இல்லை?

future of education iஎன்ற நூலின் ஆசிரியர் Hexki Aril தன் நூலின் அறிமுகப்பகுதியில் “கல்விநிலையங்கள் மட்டுமே இன்னும் பழமை மாறாமல் இக்கணினியுகத்தில் இயங்கி வருகின்றது இறந்த காலத்தில் நமக்கு பயன்பட்ட எந்தக் கல்வியும், நிகழ்காலத்தில் பொருந்திப் போகவில்லை. நாம் தொழிற்புரட்சியின் போது சாதகமாகக் கருதிய அனைத்தும் இன்றைய அறிவு வளர்ச்சிக்குப் பாதகமாக உள்ளன” என்று கூறுகின்றார் உண்மை தானே.

கல்விநிலையங்கள் மாணவர்களின் விருப்பப்பட்ட யதார்த்தத்தை நோக்கியக் குறிக்கோள்களைக் கொண்டு இருக்க வேண்டுமே தவிர தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கின்ற யதார்த்தத்தை நாம் யோசிக்க முடியுமா? என்று Hexki Aril தன் நுலில் கூறுகிறார். எதிர்காலத் தேவைகளுக்கு இன்றைய நிகழ்காலம் எவ்வாறு வழிகாட்டும் என்ற கேள்வியை அவரது கூற்று தாங்கி இருக்கிறது தானே?

இன்றைய யதார்த்தம் தான் என்ன?

இன்றைய மானவர்களின் தனிப்பட்ட நோக்கம் என்று இருக்கின்றதா என்றால், மருத்துவராக வேண்டும் சட்ட வல்லுனராக இருக்க வேண்டும், பொறியாளரால் ஆக வேண்டும் ஆசைப்பட்டால் அதற்குத் தகுந்த கல்வி கிடைக்கின்றதா என்றால் இல்லை. ஏதோ ஒரு சிறப்புத் தேர்வில் மதிப்பெண் பெற்றால் மட்டுமே அவர்களால் சிறப்புப் பயிற்சிக்கென்று பள்ளியிலிருந்து கல்லூரிக்குத் தேர்வு செய்யப்படுகின்றனர். பொதுக்கல்வியையும் கற்று பின் அதற்கென்று சிறப்பு பயிற்சி

இதே ஒரு கணினியை எடுத்துக் கொள்ளுங்கள். மருத்துவத் துறை என்றால் அது சார்ந்த வேலைகளை மட்டுமே செய்கின்றது. சட்டத்துறை என்றால் அதற்கென ஒரு குறிப்பிட்ட மென்பொருட்கள் ஓவ்வோரு துறைக்கும் இன்று கணினி பென்பொருக்லளும் கணினி வேலைப்பாடுகளும் வந்துவிட்டன. எந்தத் துறையில் வேலை செய்யும் கணினி என்றாலும் அது தனக்குக் கொடுக்கப்பட்டத் தரவுகளையும் கணக்கீடுகளையும் கொண்டு செயல்படுகின்றது. ஒரு மனிதர்கள் செய்வதை விட குறைந்த நேரத்தில் அச்செயலைப் பழுதின்றி செய்து முடிப்பதால் பல நிறுவனங்கள் கணினிகளை நாடுகின்றன. உலகின் கணினி நிறுவனங்களும் மனித செயல்களுக்கு இணையாகக் கணினி செயல்படும் வகையில் அதற்கான ஆராய்ச்சிகளிலும் நடவடிக்கைகளையும் செய்கின்றன. அதாவது ஒரு கணினிக்குத் தருவதைப் போல ஒரு சில குறிப்பிட்ட தரவுகளைக் கொடுத்து ஒரு குறிப்பிட்ட செயலை மட்டும் மீண்டும் மீண்டும் செய்ய வைக்கும் போது கணினியை விட சிறப்பாகச் செய்ய இயலும். ஆனால் ஒரு கல்வியாளர்களாக நாம் கையாண்டு வரும் பாடத்திட்டங்கள் அந்த முறையில் அமைக்கப்படவில்லை. பொதுக்கல்வி என்று கற்றூக் கொடுக்கப்படும் கல்வி குறைந்தது எட்டு ஆண்டுகளுக்காவது மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகின்றது. இதே பாடத்தரவுகளைக் கணினிக்கு என்று எடுத்துக் கொண்டாலும் கடந்த இருபது ஆண்டுகளில் கணினியில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் தகவலுக்கு மாறாகவோ அதிகமாகவோ வேறு எந்தத் தகவல்களும் நம் பள்ளிப்பாடத்தில் இல்லை அப்படி இருக்க நவீன சிந்தனைகளும் செயல்பாடுகளும் நம் மாணவரிடத்தில் எப்படி வரும்? ஒரே பாதையில் சென்று பழகிய செக்கு மாடுகளின் பயணமாய் நம் கல்வி இருக்கின்றது.

கணினிகளைச்சார்ந்தே நம் நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்று கணினி நிறுவனங்களும் நம்மைப் பழக்கிவிட்டன அதனால் தான் எந்த ஒரு புது கண்டுபிடிப்புக்களும், அதிகமாக இல்லை கணினி சார்ந்த அனைத்துமே நவீனம் புதிய தொழில்நுட்பம் என்று நாம் எண்ணிச் செயல்பட்டுக் கொன்டு இருக்கின்றோம்.

Microsoft Viva Google Primer போன்ற கனினிச்சேவைகள் தாங்கள் சேகரிக்கும் தகவல்களைக் கொண்டு செயற்கை அறிவுத் திறன் கணக்கீடுகளைக் கொண்டு தேர்ந்தெடுக்கும் செய்திகளை அறிவு பூர்வமாக, தனக்குக் கல்வியாக அளிப்பதாக தங்களை முன்னிலைப் படுத்தி வருகின்றன. Microsoft Viva பணி இடங்களுக்கு என்றால் Google Primer பொதுமக்களுக்கான ஒரு சாதனமாக மனித வளம் இங்கே கணினியிடம் கையேந்தும் நிலையில் இருக்கின்றது.

இந்தக் கணினிச்செயலிகள் நமக்கு அருகிவருவது நம் எதிர்கால மனித வளத்தைச் சுட்டிக் காட்டுகின்றன. கணினி வழிகாட்டி ஒருவர் தன்னுடைய அறைவைப் பெற வேண்டுமானால் , அப்படிப் பெற்ற அறிவை தன் அன்றாட வாழ்வில் பயன்படுத்த வேண்டும் என்றால் இன்றைய மனித வளத்தின் நிலை என்ன? கல்வியின் நிலை என்ன?

கல்வியும் மனிதவளமும் சிதைந்து கொண்டு இருக்கின்றது என்றுதானே பொருள். அது மட்டுமல்ல, தான் அன்மையில் மதுரை உலகத்தமிழ் சங்கத்தில்ஜீலை 8ம் தேதி நடந்த பன்னாட்டுக் கருத்தரங்கில் அனுவிருத்தக்கல்வி என்ற தலைப்பில் நான் கூறியது போல்

உலகமயப் பொருளாதாரத்தின் விளைவாக ஒவ்வோரு தேசமும் அதனுடைய தனித் தன்மையை இழந்து அமெரிக்க, சீன நாட்டின் கணினி நிறுவனங்களுக்கு அடிமையாகி விட்டன. கணினியுகத்தில் கணினி கற்றல் கற்பித்தலில் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்று இருக்கின்ற இந்தக் காலகட்டத்தில் எதிர்கால உத்தியோகம் எப்படிப்பட்ட நிலையில் இருக்கும் என்று யோசித்தால் தொடர் வளர்ச்சிக்கான கல்வியின் அவசரம் புரியும். இந்நிலையில் கொரானா தொற்றின் பாதிப்பும் உக்ரேன் ரஷ்ய போரினாலும் தன்னிறைவு பெற்ற நாடாகத் திகழ வேண்டிய அத்தியாவசியத்தை ஒவ்வோரு நாடும் உணர்ந்து உள்ளன. ஒரு நாடு சுய சார்பு நிறுவனமாக இருக்க வேண்டுமேயானால் அதன் மனிதவளமும் இயற்கை வளமும் செழிப்பாக இருக்க வேண்டும். ஒரு நாட்டின் தனிப்பட்ட கலாச்சார, பண்பாட்டு அடையாளங்கள் உடனடியாக மெருகேற்ற வேண்டிய நிலையில் உள்ளன. ஒரு நாடு மெருகேற்ற வேன்டிய முக்கியமான வளம் அதனுடைய மாணவச் செல்வங்கள் என்றால் மிகையாகாது.

மாணவச் செல்வங்களை இன்றைய யதார்த்தத்திலிருந்து ஃஆளைய பிரச்சனைகளைக் கணித்து தீர்வு சொல்லக் கூடிய வகையில் உருவாக்குவதே கல்வி 4.0 ன் அடிப்படை வேலையாகும். இந்த அடிப்படையை வேலையைச் சரியாகச் செய்யவே கடந்த சில வாரங்களாக நம் பாடத்திட்டங்கள் ஆராயப்பட்டன.

அடுத்து என்ன செய்ய வேண்டும்?

மாணவர்கள் செயல்முறை மூலமாகத் தங்களுடைய நோக்கங்களை, யதார்த்தங்களைச் செய்து பார்க்கும் ஒரு பாதுகாப்பான சோதனைக் கூடமாகப் பள்ளிக் கூடங்கள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *