யுரேகா என குதிக்கனுமா, யாஹூ என கூவனுமா என தெரியலை. அட, இப்படி ஒரு புத்தகமா என சொல்லி ரொம்ப நாளாச்சு. நேற்று அப்படி ஒரு சம்பவம். ஆமாங்க, பாரதி புத்தகாலயம் – ஆதி வள்ளியப்பன் சூப்பர் கூட்டணி மீண்டும் ஹிட் அடிச்சுடுச்சு. புக்ஸ் பார் சில்ரனின் அடுத்த சூப்பர் டூப்பர் படைப்பு.
“எத்தனைக் காலம் தான் ஏமாற்ற முடியும்? – டாக்டர் சூஸ் அவர்களின் ஸ்ணூப்பிஸ் மொழிபெயர்ப்பு. “கரடி என என்னை யார் சொன்னது?” என்னும் சூப்பர் படைப்பு போலவே இதுவும் சூப்பர் வகையறா. ஆதி வள்ளியப்பன் நூல் தேர்வு கவனித்தக்கது.
ஒரு கற்பனை கதையாடல் மூலமாக சமூக அவலங்களை சொல்வது என்பதும் அது சுவையாக சொல்வது என்பதும் அவசியம். டாக்டர் சூஸ் அவர்களின் கதை பலர் படித்திருக்கலாம். நான் இப்போதுதான் படிக்கிறேன். ஒரே உயிரின வகைகளின் இரு வகைகளும், அதன் வகைப்படுத்துதல் காரணமும், அதனால் எழும் உயர்வு தாழ்வும், அந்த வேறுபாட்டை தனது லாபத்திற்கு பயன்படுத்தும் ஒருவரும் என அட கிட்டத்தட்ட கதையவே சொல்லிட்டேனே. இனி, நீங்க அவசியம் வாங்கி படித்துக் கொள்ளுங்க.
முதல் முறையா அப்படியே அந்தப் புத்தகத்தை படித்து காண்பித்தேன் என் குழந்தைகளிடம். 2ஆம் வகுப்பு படிக்கும் என் குட்டி கீர்த்தனாவை என்ன சொல்லுது இந்தக் கதை என்னும்போது, அவள் வெகு அநாயசமாக இந்த அப்பர் கேஸ்ட், லோயர் கேஸ்ட் பத்திதானே இந்தப் புத்தகம் சொல்லுது என சொன்னாளே பார்க்கலாம். ஆதி நீங்க ஜெயிச்சுட்டீங்க, பாரதி புத்தகாலயமும் தான். ஆனா, சாதி உயர்வு தாழ்வினை ஆங்கிலேயர் ஒருவரால் எப்படி பேசியிருக்க முடியும். கரெக்ட், நீங்க ஊகிப்பது. வர்ண பேதம் உள்ளிட்ட எந்தப் பேதங்களையும் கேள்விக்குள்ளாக்க உங்களுக்கு உதவ பாரதி புத்தகாலயமும், புக்ஸ் பார் சில்ரனும் தயார். ஆதி வள்ளியப்பன் தோழர் உங்க அடுத்த புக் என்ன? பாரதி புத்தகாலயம் – ஆதி வள்ளியப்பன் என்னும் இந்தக் கூட்டணி தொடரட்டும், அசத்தலாய் புத்தகங்கள் கொடுக்கட்டும்.
இனி என்ன, மக்களே, வெறும் 30 ரூபாக்கு போட்டிருக்காங்க, அவசியம் வாங்கிப் படிங்க. பிள்ளைகளோடு மட்டுமல்ல, அறிவொளி காலம் போல சாதாரண மக்களிடமும். வாசிப்பு விரியட்டும், விவாதம் தொடங்கட்டும், விடியல் பிறக்கட்டும் {அட!}
மீண்டும் தோழர் ஆதி வள்ளியப்பன் அவர்களுக்கும், பாரதி புத்தகாலயம்-புக்ஸ் பார் சில்ரன் நிறுவனத்திற்கும் {நம்மதுதான்} வாழ்த்துகள்.