முப்பது பக்கங்கள் கொண்ட மிகச்சிறிய நூல். இது குழந்தைகளுக்கான நூல் தான். ஆனால் பெரியவர்கள் வாசிக்கும்போது ‘அடடே இது நம்ம வாழ்விலும் நடந்துகிட்டிருக்கே. இவ்வளவு நாளாக இதை நாம கவனிக்கவில்லையே’ என்று சிந்திக்க வைக்கும் தீப்பொறி இந்நூலில் தெறித்து விழுவதைக் காணலாம். தோழர் ஆதிவள்ளியப்பன் அவர்கள் மிகச்சிறப்பாக மொழிப்பெயர்த்திருப்பார். அவருக்கு மனமார்ந்த நன்றி!
‘நமக்கு எதுக்கு அரசியல் எல்லாம்; நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு போவோம்’ என்பவர்கள் பலர் புலம்புவதைக் கேட்டிருப்போம். அப்படிப்பட்டவர்கள் எப்படி நயவஞ்சக பேர்வழிகளிடம் சிக்குகிறார்கள்; கொஞ்சம் உணர்ச்சிவசப் படுபவர்கள் எப்படி உணர்ச்சியைத் தூண்டுபவர்களிடம் சிக்கிக் கொள்கிறார்கள்; இதில் ஏமாளியாக இருப்பவர்களும் சிக்கிவிடுவர் உணர்ச்சியைத் தூண்டுபவர்களிடம். ஒட்டுமொத்தத்தில் தூண்டிவிட்டு ஆதாயம் அடைந்தவர், அடைந்துகொண்டிருப்பவர், அடைய நினைப்பவர்களுக்கு பெருத்த லாபம் கிடைக்கும் தூண்டலில் சிக்குபவர்களிடமிருந்து. சிக்குபவர்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் தூண்டியவர் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று இறுதியில் தலைதெறிக்க ஓடிவிடுவர் அல்லது ஏமாந்தவர்களிடம் வசமாக சிக்கிக் கொள்வார்கள்.
இன்று நம்மைச்சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு சான்றாதாரமாக விளங்கும் நூல் இது. இந்நூலில் வரும் கதா பாத்திரங்கள் விலங்குகளே. அதுவும் ஒரே இன விலங்கு. அங்கு நடப்பதுதான் சுவாரசியம். வாசியுங்கள் தோழர்களே, குழந்தைகளுக்கு கதையை மட்டும் சொல்லுங்கள் அதன் அர்த்தத்தை அவர்களுக்கு சொல்ல வேண்டாம். தயவுசெய்து நீதி மட்டும் குழந்தைகளுக்கு சொல்லிடாதீங்க அவர்களே புரிந்துகொள்வார்கள்.
அனைவரும் வாசிக்க வேண்டிய மிகச்சிறிய நூல். எடுத்தால் 15 நிமிடத்தில் வாசித்து விடலாம். ஆரம்ப வாசிப்பாளர்கள் இதுபோன்ற நூல்களை முதலில் வாசிக்க வேண்டும்.
வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!!
நூல் தகவல்
நூல் : எத்தனைக் காலம்தான் ஏமாற்ற முடியும்?
ஆசிரியர் : டாக்டர் சூஸ்
தமிழில் : ஆதி வள்ளியப்பன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 44 2433 2924
ஆண்டு : செப்டம்பர் 2019
விலை : ரூ.30
எழுதியவர்



என்னுள்ளே மிகவும் நேர்த்தியாக எழுதிய எழுத்தாளருக்கும், நேர்த்தியாக மொழிபெயர்த்த தோழர் ஆதி வள்ளிப்பன் அவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!
அரசியலற்ற உலகம் இல்லை. எனவே அனைவரும் அரசியல் பழகுவோம். மக்களுக்கான அரசியலை கைக்கொள்வோம்!