எதார்த்தத்தை வாசித்தலும் எழுதுதலும்- பாவ்லோ ஃப்ரெய்ரே… ஆசிரியை உமா மகேஸ்வரி

பிரேசில் நாட்டு கல்வியாளரான பாவ்லோ ஃபிரெய்ரே தத்துவ அறிஞர் , கற்பித்தல் நுணுக்கங்களை ஆய்வாகக் கொண்டு பல புத்தகங்களை எழுதியவர் .

ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறை என்கிற இவரது நூல் பற்றி ஒவ்வொரு சந்திப்பிலும் அறிமுகம் செய்யும் தோழர் JK Krishnamoorthy Jayaraman அவர்களது வழியாகத்தான் 12 வருடங்கள் முன்பு, ஈரோடு மாவட்டத்தில் கெத்தேசால் என்ற இடத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய ஒரு புத்தக வாசிப்பு முகாமில் தான் பாவ்லோ ஃபிரெய்ரே என்ற பெயரையே கேள்விப் பட்டேன்.

ஆனால் ஏனோ அவர் பற்றிய செய்திகள் சற்று கடினமான சொற்களால் எனக்கு அறிமுகம் ஆகியிருந்ததால் அவர் புத்தகம் பக்கம் போகாமலேயே இருந்தேன் .

அதன் பிறகு அவ்வப்போது சில சந்திப்புகளில் பலரும் ஃபிரெய்ரேவின் பெயரை பயன்படுத்திக் கேட்டிருக்கிறேன்.

பவுலோ பிரைரே - தமிழ் விக்கிப்பீடியா

தத்துவ அறிஞர் பாவ்லோ ஃப்ரெய்ரே

எதார்த்தத்தை வாசித்தலும் எழுதுதலும் என் கையில் 4 வருடம் முன்பே கிடைத்து படிக்க முயற்சி செய்தேன். அந்தக் கடினப் புரிதலால் மனதிற்குள் ஒட்டவில்லை.

சமீப காலமாக மிகப் பல முறை JK அவர்களது சந்திப்பிலும் , .மாவட்டக் கூட்டங்களிலும் நிறைய கல்வி அரசியல் புரிய ஆரம்பித்த சூழலும் , Dr வசந்தி தேவி , பேரா ச.மாடசாமி ஆகியோர் உட்பட இன்று தமிழகத்தில் நம்மோடு வாழும் நமக்குத் தெரிந்த கல்வியாளர்கள் யாவரும் அவர்களது உரைகளில் ஒரு முறையேனும் பாவ்லோ ஃபிரெய்ரே பற்றி பேசியதை கவனித்த தருணங்களும் தான் ….இப்புத்தகத்தைப் படிக்கும் ஆர்வத்தை எனக்குக் கொடுத்தன.

பதிப்புரை
கண்டிப்பாக இதை அனைவரும் படிக்க வேண்டும். இந்தப் புத்தகம் தமிழில் நமக்குக் கிடைப்பதற்கான காரணத்தையும், இந்நூல் உருவான விதம் பற்றியும் ,அன்றைய தமிழ் நாடு அறிவியல் இயக்க மாநிலத் தலைவரும் எனது குடும்ப நண்பருமான ஈரோட்டைச் சேர்ந்த பேரா. மணி விளக்கியிருப்பது சிறப்பு .

JK வின் வார்த்தைகளே, மூல நூலான இப்புத்தகத்தைத் தேடி (Reading and writing reality) மணி அவர்களை தமிழ் நாட்டிலிருந்து டெல்லி வரை சென்று விஸ்வ யுவகேந்திராவை அடைய வைத்து 32 பக்கங்களுடைய 4.50 ரூபாய் மதிப்புள்ள இப்புத்தகத்தின் ஒரே ஒரு பிரதியை நூலகரிடம் வாங்கிய கதையையே ஒரு புத்தகமாக எழுதலாம்.

ஆம் ….வாங்கி வந்த புத்தகத்தை தமிழாக்கம் செய்யக் கமலாலயன் அவர்களைத் தேர்வு செய்ததும் ,முதல் முறை மொழிபெயர்த்த நூலை 2011 இல் நடந்த மாற்றுக் கல்விக்கான
வாசிப்பு முகாமில் 28 ஆசிரியர்கள் அதைப்படித்து மீண்டும் ஒரு முறை மொழிபெயர்ப்பை செப்பனிட்டு வெளியிடப்பட்ட நூல் இது என்ற மிக முக்கியப் பதிவையும் பதிப்புரையில் தந்துள்ளார் மணி.

இவ்வளவு பின்புலமும் கொண்டு இந்த நூல் உருவாகியிருக்கின்றது என்றால் அதற்கு JK பகிர்ந்த இந்த நூலின்ஒற்றை வரியே காரணம் , அது True Education is a political activity . Education cannot be neutral…..

இந்த வரிகள் தான் இப்புத்தகத்தின் சாரம் ,ஆம் … உண்மையான கல்வி என்பது ஓர் அரசியல் நடவடிக்கை , அது எப்போதும் நடுநிலையாக இருக்க முடியாது என்பது தான் பாவ்லோ ஃபிரெய்ரே நம் முன் வைக்கும் ஆழமான கருத்து .

வாசிப்பு வழிகாட்டி | கமலாலயன் ...

இந்த இடத்தில் ஒரு ஆசிரியராக என்னை நான் பரீட்சித்துக் கொள்கிறேன். ஆம் நான் கற்பித்தலை ஒரு அரசியலாகவே எனது மாணவர்களிடம் சில காலமாக எடுத்துச் செல்கிறேன் என்பதில் சற்றே பெருமை கொள்கிறேன்.

டெல்லி விஷ்வ யுவ கேந்திராவின் இயக்குநர் 1979 இல் இந்நூலுக்குத் தந்திருக்கிறார் என்றால் இந்நூல் வந்து ஏறக்குறைய 40 ஆண்டுகள் ஆகியிருக்கின்றது எனக் கொள்ளலாம்.

புத்தகம் மொத்தமே 48 பக்கங்களை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால் 100 ஆண்டுகளுக்கான அரசியல் சமூக மாற்றங்களை உருவாக்கும் விதையைத் தன்னுள்ளே கொண்டுள்ளது.

உள்ளுணர்வூட்டுதல் என்ற பிரேஸிலியன் மொழிச் சொல் தான் நூலின்ஆரம்பத்திலிருந்து கையாளப்படுகிறது. எதார்த்தத்தை மாற்றியமைத்தலுக்குத் தேவையான வலிமையை நமது உள்ளுணர்விற்கு வழங்க வேண்டியது ஓர் அத்தியாவசியமான தேவை என்கிறார்.

உள்ளுணர்வைக் காட்டிலும் வலிமை மிக்க அழுத்தம் கொடுக்கப்பபட வேண்டிய இன்னுமொரு முக்கிய அம்சம் இருக்கிறது என்று குறிப்பிடும் நிலையில் , புறச்சூழலின் வெற்று நகலாக மட்டுமே இருப்பதால் இந்த உள்ளுணர்வூட்டுதல் வெறும் இயந்தரத் தனமாக இருப்பதாகவே புரிந்து கொள்ள முடியும் என்கிறார். உண்மை தானே , வெறும் உள்ளுணர்வூட்டுதல் மாற்றங்களைக் கொண்டு வரும் என்று நம்பி விட முடியாதே …

கல்வியும் சமுதாயமும் என்ற அடுத்த தலைப்பில் கல்வி என்ற ஒன்று மட்டுமே சமூகத்தை மாற்றியமைக்கும் என்று கூறிவிட முடியாது என்கிறார். சமூகத்தின் கலகத்தன்மை மிக்க உரு மாற்றம் , ஒரு புரட்சியாக அமைந்திருப்பது ஒரு கல்வி சார்ந்த நடவடிக்கை மட்டுமே அன்றி வேறில்லை என்று புரிய வைக்கும் வேளையில் ,

யார் அதிகாரத்தைத் தம் வசம் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடைய நலன்களுக்கு ஏற்ற வகையில் சமூகம் தான் கல்வியின் வடிவத்தைத் தீர்மானித்து உருவாக்குகிறது என்பதையும் ஆராய்ந்து பார்க்கக் கூறுகிறார்.

கல்வி – ஒர் அறிதல் செயற்பாடு
கல்வி என்பதும் புரட்சி என்பதும் அறிவு சார்ந்த செயல்பாடுகளே , அதோடு கல்வி என்பது ஒரு நடுநிலைச் செயல்பாடு அல்ல, அந்த அறிதல் செயல்பாடு யாருக்கு ஆதரவாக அதே போல யாருக்கு எதிராக என்பதும் மிக முக்கியம் என்கிறார் .

இது போன்றவற்றில் அறிவு ஜீவிகள் என்றழைக்கப்படும் நமது அறிஞர்கள் கேள்வி கேட்பதில்லை என்பதும் கூட அவரது எடுத்துக் காட்டுகளுடன் ஒப்பிடும் போது எவ்வளவு உண்மை எனப் புரிகிறது தெரியுமா …

How one venture is changing learning through smart classrooms and ...

அதோடு மிக முக்கியமாக பாவ்லோ கூறுவது , இங்கு மானுட சமூகம் என்று ஒன்று இல்லை , பீட்டர் , மேரி , மக்கள் , வர்க்கங்கள் , குழுக்கள் , நாடுகள் , அதிகாரம் செலுத்துகிறவர் , அதிகாரம் செய்யப்படுவர்கள் என்று தான் இருக்கின்றனர் என்கிறார் .இது தானே எதார்த்தம் ..இதைத்தானே நாம் வாசிக்க வேண்டும் , எழுதவும் வேண்டும் ..

அறிவு பற்றி பேசும் போது , அறிவை உருவாக்கவும் , மீட்டுருவாக்கம் செய்யவும் முடியும் என்கிறார். அதோடு கல்வியாளரும் அரசியல் தலைவரும் எனது பார்வையில் ஒருவரே , அவர்களால் வேண்டுமானால் அறிவை விரிவுபடுத்தக் கூடாததாக இருக்கும் என்கிறார்.

மிக இன்றியமையாத ஒரு கண்ணோட்டத்தைத் தருகிறார். அது இணைந்து கற்றுக் கொள்ளுதல் ,

அதாவது நான் ஆசிரியராக இருந்தால் வெறுமனே ஒரு விஷயத்தை கருத்தாக மாணவருக்குக் கூறுவதை கற்பித்தலாக எடுத்துக் கொள்ளாமல் , அவர்களோடு இணைந்து அதே விஷயத்தை கற்றுக் கொள்ள மாணவராக மாற வேண்டும் , அப்போது தான் எதார்த்தத்தைப் புரிந்து கொள்ள இயலும் என்பதாக நான் புரிந்து கொள்கிறேன்.

வயது வந்தோர் எழுத்தறிவு

இந்தத் தலைப்பில் அவர் , 1972 இல் தான் பார்த்த பம்பாய் தெருக்களின் மக்களின் வாழ்விடங்களான தெருவோரங்களைக் குறிப்பிட்டு , அவர்களுக்கு எழுத்தறிவின் பயன்பாடு என்ன ? என்ற வினாவை நம் முன் வைக்கிறார். இந்த உலகில் நமது இருப்பை நிலை நிறுத்த , நியாயப் படுத்த நம்மால் முடிந்த ஏதோ ஒரு சிலவற்றைச் செய்ய முயலக் கூறுகிறார். எவ்வளவு எதார்த்தமான உண்மை இது .

ஒருவருடைய தேர்வை உருவாக்குவதற்கான தேவை :

இந்தத் தலைப்பில் பேசும் போது,கல்வி ஓர் அரசியல் நிகழ்வு என்றால் , கல்வியாளர்கள் அனைவரும் அரசியல்வாதிகளும் கலைஞர்களுமாவார்கள் என்கிறார், எனில் கல்வியாளர்கள் தங்களுடைய அரசியல் தேர்வு குறித்து தெளிவுடன் இருக்க வேண்டும் என்கிறார். அவர்கள் செயல் உத்திக்கும் (Tactics) கொள்கைத் திட்டத்திற்கும் (Strategy) இடையில் நிலவும் உறவு குறித்து மிகத் தெளிவான அக்கறையுடன் இருக்க வேண்டும் என்கிறார்.

அப்படித் தெளிவுடன் இல்லாமல் மானிப்பு லேட்டிவாக (Manipulative) இருந்தால் கரைந்து போய் விடுவோம் என்கிறார். இது ஒரு முனையிலும் தன்னெழுச்சி ஒரு முனையிலும் இருத்தல் கூடாது என்பதற்கு ஒரு வகுப்பறையையும் ஒரு ஆசிரியர் மாணவர் உரையாடலையும் உதாரணமாக நமக்குத் தருகிறார்.

சில வினாக்களுக்கு பதில் தரும் போது ,
குறிப்பிடும் சில ….

Schools owned by DMK leaders teach Hindi, while party outrages ...

ஆசிரியருக்கு செவிமடுக்கும் போது மாணவரின் மனோபாவம் எவ்வாறு இருக்கும் என்பது , அது கலாச்சாரத்துடனும் தத்துவார்த்தத்துடனும் தொடர்புள்ள அம்சம் , இந்தியா மட்டுமல்ல உலக நாடுகள் எல்லாவற்றிலும் மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் உரையாடலில் ஒரே மாதிரி பிரச்சனை உள்ளது என்கிறார் , நம் வகுப்பறைகளை ஒப்பிட்டு பார்த்தாலும் இது நமக்கும் புரியும் , அது தயவு செய்து எங்களிடம் பேசுங்கள் என்பதாகவே இருக்கும்.

ஒரு புதிய குழுவுடன் சேர்ந்து பணியாற்றத் தொடங்கும் போது , நம்மை 50% ஆசிரியர்களாகவும் 50% மாணவர்களாகவும் நம்மை மாற்றிக் கொண்டு தொடங்குவது மிக நன்றாக இருக்கும் என்கிறார். அப்போது தான் முற்றிலுமாக ஆசிரியர்கள் மட்டுமாயிருப்பதில் இருந்து நாம் மரணித்து , ஆசிரியர் மாணவர் என்று மீள் பிறப்பு எடுப்பதற்கு இது வழி வகுக்கும் எனலாம்.

50% மாணவராகவும் 50% ஆசிரியராகவும் ஒருவர் ஆக வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும் எனவும் சில வழிமுறைகளையும் கூறுகிறார் பாவ்லோ.

நாம் கற்பித்துக் கொண்டு இருக்கும் போதே ஒரு மாணவனாக மாறி வருவதற்கு முயற்சி செய்வது சிறந்தது என்கிறார்.

ஒரே களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பல குழுக்கள் , ஒருவருக்கொருவர் எந்தவிதத் தொடர்பும் இல்லாமல் மற்ற சக பணியாளர்களை அறிந்து கொள்ள மலேதான் பணியாற்றிக் கொண்டு இருக்கிகின்றனர் என்கிறார். அவ்வளவும் எதார்த்தம் அல்லவா ?

எதார்த்தத்தைப் பாதுகாப்பதோ உருமாற்றுவது என்பதே ஒர் அரசியல் நடவடிக்கை தான் ,வரலாறு இலவசமாக உருவாக்கப்பட முடியாத ஒன்று என்றும்உலகத்தை நாம் இலவசமாகக் கடந்து செல்ல முடியாது என்றும் பதிவு செய்கிறார்.ஒடுக்கப் பட்டோருக்கான கல்வி முறை பற்றி ஆங்காங்கே பதிவுகள் செய்துள்ளது சிறப்பு.

Child-centric methodologies improve learning in children - The Hindu

இந்தியாவில் நிலவும் சூழலில் ஆசிரியர்கள் அரசியல்வாதிகளானால் என்னென்னப் பிரச்சனைகள் எழும் ?என்ற கேள்விக்கு ,ஒரு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கணக்குப் பாடத்தில் தரும் பயிற்சியை வைத்து , மிக அழகாக விளக்கி இருக்கிறார்.

உலகில் பல பகுதிகளைச் சேர்ந்த பல மக்களுக்கு , இந்தியாவிலும் கூட கல்வியும் ஓர் அரசியல் தான் என்று வெளிப்படையாகத் தெரிய வில்லை என்கிறார். மேலும் , சுரண்டலுக்கு ஆட்படும் மனித இனம் பற்றிய ஒரு வினாவிற்கு ,அமில்கர் கப்ராலின் கூற்றோடு தொடர்புடைய ஒன்றைக் கூறி பதிலுரைக்கிறார் , மூளைகளில் நாம் அழகான அற்புதச் சிந்தனைகளைக் கொண்டிருக்கிற காரணத்திற்காகவே போராடிவிட மாட்டோம். பேசுவதைக் காட்டிலும் செயல்படுவதை அதிகமாக்கக் கூறுகிறார். உங்களை ஒத்த மற்றவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு ஓர் அமைப்பாகுவது அவசியம் என்ற உணர்வை முக்கியமாகக் கருதுகிறார்.

வன்முறையும் மாற்றமும் என்ற தலைப்பில் ஒவ்வொரு மனித உயிருக்கும் வாழ்வதற்கான அடிப்படை உரிமை இருக்கிறது. அதே போல அந்த உரிமையைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமையும் பெற்றதாக இருக்கிறது என்கிறார்.

இப்படி எல்லாமுமாக எதார்த்தத்தை கண்டறிய , சிந்திக்க ,செயல்பட கற்றுத் தரும் ஒரு களமாக இந்நூலை நான் பார்க்கிறேன் , இதை வாசித்து விட்டு பல நாட்களுக்கு அசை போடும் படி அபரிதமான செய்திகளும் சிந்தனைகளும் உள்ளன.

எதார்த்தத்தை வாசித்தலும் ...

வாசிக்க வாசிக்க , எனது வகுப்பறை அனுபவங்கள் , மாணவர் அணுகுமுறை , வெளி அனுபவங்கள் , கல்வி பற்றிய எனக்கான புரிதல் , உள்ளுணர்வூட்டுதல் , மாணவரை அரசியல் படுத்துதல் , 50% மாணவராக மாறி இருத்தல் இப்படி எல்லாவற்றிலும் சுய பரிசோதனை செய்து பார்த்துக் கொள்கிறேன். அதில் பெரும் பகுதி அடைவு நிலையில் இருப்பதையும் உணர்கிறேன். சரியான புரிதலில் தான் பயணிக்கிறோம் என்பதில் ஒரு நம்பிக்கைப் பிறக்கிறது.

ஆசிரியர்கள் பலரும் எழுத்தாளர்களாக இருக்கும் இன்றைய சூழலில், மாற்றுக் கல்விக்கான சிந்தனையை எடுத்துச் செல்ல வழிகள் அமைக்கும் பல கல்வியாளர்களும் , வாசித்தலை ஆழமாக உணர்ந்து தங்களை வடிவமைத்து முழு வளர்ச்சி பெற்ற ஆசிரியர்களும் தமிழகம் முழுக்க விரவி இருப்பினும், ஏன் இது போன்ற கல்வி சார்ந்த எதார்த்தங்களை எழுதவோ பேசவோ மற்றவரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவோ இல்லை என்பதும் சமீப காலமாக எனக்குள் எழுந்து வரும் ஒரு தேடல் ,சரி இங்குள்ள எதார்த்தத்தையும் ஒரு அரசியலாகவே புரிந்து கொள்கிறேன்.

பெயர் : எதார்த்தத்தை வாசித்தலும் எழுதுதலும் (Reading and writing reality)
ஆசிரியர் : பாவ்லோ ஃபிரெய்ரே
தமிழில் : கமலாலயன்                                                                                                                                    வெளியீடு :பாரதி புத்தகாலயம்                                                                                                                          விலை : ரூ.40                                                                                                                                                       
அன்புடன்
உமா