ஜோடனை செய்யப்பட்ட வழக்குகள் புனைந்து மக்கள் மீது கொடிய சட்டங்கள் திணிக்கப்பட்டிருக்கின்றன: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் கண்டனம் (தமிழில்:ச.வீரமணி)

ஜோடனை செய்யப்பட்ட வழக்குகள் புனைந்து மக்கள் மீது கொடிய சட்டங்கள் திணிக்கப்பட்டிருக்கின்றன: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் கண்டனம் (தமிழில்:ச.வீரமணி)

புதுதில்லி:

தேசியப் பாதுகாப்புச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் போன்ற கொடிய சட்டங்கள், ஜோடனை செய்யப்பட்ட வழக்குகளில் மக்களைப் பிணைத்து, பல மாதங்களுக்கு அவர்களைச் சிறைகளில் அடைத்து வைத்திருக்கின்றன என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி நீதியரசர் மதன் பி. லோகூர் கூறினார்.

ஞாயிறு அன்று இணைய தளம் வழியாக நம் அரசமைப்புச்சட்டத்தின் 21ஆவது பிரிவு அடிப்படை உரிமை அரசால் வனையப்படக்கூடியதல்ல (Our Article 21 Fundamental Right Not To Be Framed By the State) என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் இவ்வாறு அவர் கூறினார். கல்வியாளர் மோகன் கோபால் ஏற்பாடு செய்திருந்த இக்கருத்தரங்கில் முன்னாள் நீதிபதிகள் மற்றும் பிரதானமானவர்கள் பலர் பங்கேற்றனர்.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே. பட்நாயக் உரையாற்றுகையில், இப்போது தாங்களும் பொய்யாக பிணைக்கப்படலாமோ என்கிற அச்ச உணர்வு பலர் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது, என்று தெரிவித்தார்.

அக்சார்தம் தாக்கப்பட்ட வழக்கு

நீதியரசர் பட்நாயக் பேசுகையில், “ஒருவர் மீது குற்றஞ் சுமத்துவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் சட்டங்கள் போதுமான அளவிற்குப் பாதுகாப்புகள் பெற்றிருந்தன. நீதிமன்றம், தங்கள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் வழக்குகள் அனைத்தையும் எந்திரரீதியாக (mechanically) கோப்புக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது.  ஓர் அப்பாவி இதனால் தன் வாழ்க்கையையும் சுதந்திரத்தையும் பறிகொடுக்கக்கூடிய நிலை ஏற்படலாம். 202இல் அக்சார்தம் பயங்கரவாதத் தாக்குதல் வழக்கில் 12 ஆண்டுகள் கழித்து குற்றஞ்சாட்டப்பட்டிருந்த  ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் உச்சநீதிமன்றத்தால் எப்படி விடுதலை செய்யப்பட்டதை நாம் பார்த்தோம்,” என்று கூறினார்.

Dr Kafeel Khan Finally Gets Bail

நீதியரசர் லோகூர் பேசுகையில், “உத்தரப்பிரதேச மாநிலத்தில் டாக்டர் கபீல் கான், தான் ஆற்றிய உரை ஒன்றுக்காக தேசப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் எப்படி அடைத்து வைக்கப்பட்டிருந்தார் என்று நாம் பார்த்தோம். அலகாபாத் உயர்நீதிமன்றம் அவர் அடைத்து வைக்கப்பட்டிருந்ததைத் தள்ளுபடி செய்து, அவரை விடுவித்தது. அந்த தீர்ப்புரையில் உயர்நீதிமன்றம், கபீல்கானின் உரையை முழுமையாகப் படித்துப்பார்க்கும்போது அவர் அதில் வன்முறையைக் கண்டனம் செய்திருந்ததையும், மக்களை நோக்கி தேசிய ஒருமைப்பாட்டுக்காகவும், ஒற்றுமைக்காகவும் அறைகூவல் விடுத்திருந்ததையும் காட்டின. ஒரு நபர், வன்முறையில் ஈடுபடாதீர்கள் என்று கூறுகிறார். இதற்காக அவர், நாட்டின் ஒற்றுமைக்கு அவர் ஆபத்தை விளைவிக்கிறார் என்று கூறி அடைப்புக்காவலில் வைக்கப்படுகிறார். நீங்கள் நாட்டின் பாதுகாப்பு குறித்துப் பேசினீர்கள் என்றால், நீங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிப்பதாக அர்த்தமாகுமா?” என்று கேட்டார்.

(நன்றி: The Hindu, Delhi Edition)

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *