உலகம் போற்றும் இந்திய உலோகவியல் நிபுணத்துவ விஞ்ஞானி தீபங்கர் பானர்ஜி (Expert in Indian Metallurgy Scientist Prof. Dipankar Banerjee)

உலகம் போற்றும் இந்திய உலோகவியல் நிபுணத்துவ விஞ்ஞானி தீபங்கர் பானர்ஜி!

உலகம் போற்றும் இந்திய உலோகவியல் நிபுணத்துவ விஞ்ஞானி தீபங்கர் பானர்ஜி (Prof. Dipankar Banerjee)
தொடர் 88: இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100

இந்தியாவின் பாதுகாப்புக்கு உரிய தளவாடங்களை உற்பத்தி செய்கின்ற பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் 1958 ல் அமைக்கப்பட்ட DRDO என பெருமையாக குறிப்பிடப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சிமற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் அர்ப்பணிப்பு மிக்க அற்புத விஞ்ஞானிகளில் ஒருவர்தான் தீபங்கர் பானர்ஜி.. இன்று உலகஅளவில் உலோகவியலில் குறிப்பாக டைட்டானியம் கலவைகள் குறித்த ஆய்வுகள் மூலம் சிறந்த விஞ்ஞானியாக போற்றப்படுகிறார்.

விஞ்ஞானி தீபங்கர் பானர்ஜி (Prof. Dipankar Banerjee) இந்திய தொழில்நுட்பக் கழகம் IIT மெட்ராஸ் என்கிற நம்முடைய சென்னை கல்வி நிறுவனத்தில் உலோகவியல் பொறியியல் பட் டத்தை 1974 ஆம் ஆண்டு பெற்றார். பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் கழகத்தில் முதுகலை பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றவர். இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் DRDO ஏரோ நாட்டிக்கல் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் துறையில் ஒரு ஆராய்ச்சியாளராக இணைந்தார்.

உலகம் போற்றும் இந்திய உலோகவியல் நிபுணத்துவ விஞ்ஞானி தீபங்கர் பானர்ஜி (Expert in Indian Metallurgy Scientist Prof. Dipankar Banerjee)

 

தீபாங்கர் பானர்ஜி சார்ந்திருக்கும் துறை உலோக கலவைகளை ஆய்வு செய்யும் துறையாகும் மனிதர்களால் எளிதில் சுமக்க முடிந்த கனமில்லாத டைட்டானியம் அலுமினைடு சார்ந்த இயற்பியல் உலோகவியல் துறையில் குறிப்பிட்ட பங்களிப்புகளை செய்தவர் அவர். இந்திய ராணுவத்திற்கு பல்வேறு பாதுகாப்பு உபகரணங்களை புதிதாக கண்டுபிடித்து வழங்கியதில் பெரும் பங்கு வகித்தவர்.

டைட்டானியம் அலுமினைடு என்பது காமா டைட்டானியம் என்று அழைக்கப்படுகிறது இது ஒரு இடைப்பட்ட உலோக வேதி கலவையாகும். இது இலகுரக மற்றும் ஆக்ஸிஜனேற்றம் இவற்றோடு வெப்பத்தை எதிர்க்கும் குறைந்த அளவிலான நீர்த்துப் போகும் தன்மை கொண்டது. இந்த வகையிலான உலோக கலவைகளை நாம் விமான ஜெட் என்ஜின்கள், சில விளையாட்டு உபகரணங்கள், ஆயுதங்கள் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கப் பயன்படுத்துகிறோம். இந்தியாவிலேயே தயாரிக்க முடிந்த இந்த வகை உலோக கலவையை ஆய்வுசெய்து வெற்றி கண்டு நம் நாட்டிற்கு குறைந்த விலையில் ராணுவ தளவாட உற்பத்தியில் இருந்து விமான உற்பத்தி வரை அனைத்திற்கும் பயன்படும் வகையில் கண்டுபிடித்து கொடுத்தவர் விஞ்ஞானி தீபங்கர் பானர்ஜி (Prof. Dipankar Banerjee) ஆவார்.

உலகம் போற்றும் இந்திய உலோகவியல் நிபுணத்துவ விஞ்ஞானி தீபங்கர் பானர்ஜி (Expert in Indian Metallurgy Scientist Prof. Dipankar Banerjee)

காமா TiAL சிறந்த இயந்திர பண்புகள் மற்றும் உயர்ந்த வெப்பநிலையிலும் தாங்க கூடிய அரிப்புத் தன்மையற்ற பண்புகளை கொண்டுள்ளது. டைட்டானிக்த்தின் அலுமினைடு வகையைச் சேர்ந்த காமா TiAL அடிப்படையிலான உலோகக் கலவைகள் விமான எந்திரங்களில் உந்துதல் எடைவிகிதத்தை அதிகரிக்கும் திறனைக் கொண்டுள்ளன. இது குறிப்பாக நம் நாட்டில் ராணுவ கப்பல்களில் இருந்து புறப்படுகிற தாக்குதல் விமானங்களை தயாரிப்பதற்கு அவற்றின் என்ஜினின் குறைந்த அழுத்த விசையாழி சக்திகள் மற்றும் உயர் அழுத்த அமுக்கி சக்திகள் போன்றவற்றில் எளிமையான எடை குறைந்த தன்மையை வழங்குகின்றன. இவை பாரம்பரியமாக தயாரிக்கப்பட்டு வந்த சூப்பர் அலாய்ங்களுக்கு மாற்றாக இன்று பயன்படுத்தப்படுகிறது. 1000 டிகிரி செல்சியஸ் தாங்கும் அளவிற்கான உலோகக் கலவையாக டைட்டானியம் அலுமினைடு விளங்குகிறது.

விஞ்ஞானி தீபங்கர் பானர்ஜியின் அடுத்த முக்கிய பங்களிப்பு விமானம் தாங்கி கப்பல்களில் பயன்படுத்துவதற்கான சிறப்பு கடற்படை உலோக கலவைகளை வழங்கியது ஆகும். நம் நாட்டில் கப்பல் கட்டுமானம் என்பது விசாகப்பட்டினத்தில் ராணுவ தளவாட அமைப்பினால் செயல்பட்டு வருகிறது இங்கு DRDO வின் முக்கிய ஆய்வு தளம் ஆகிய எரிவாயு விசையாழி இயந்திரங்கள் தயாரிக்கும் ஆலையில் பெரிய அளவில் தன்னுடைய விஞ்ஞான பங்களிப்பை வழங்கியவர் தீபங்கர் பானர்ஜி. எரிவாயு விசையாழி அல்லது எரிவாயு விசையாழி இயந்திரம் என்பது தடையற்ற தொடர்ச்சியான ஓட்டம் காணத்தக்க ஒரு உள் எரிப்பு இயந்திரம் ஆகும். அனைத்து எரிவாயு விசையாழி எந்திரங்களுக்கும் பொதுவான முக்கிய உதிரி பாகங்களை தயாரிக்கும் பங்களிப்பு என்பது இயந்திரவியல் துறையில் அதிநவீன விஞ்ஞானமாக போற்றப்படுகிறது.

உலகம் போற்றும் இந்திய உலோகவியல் நிபுணத்துவ விஞ்ஞானி தீபங்கர் பானர்ஜி (Expert in Indian Metallurgy Scientist Prof. Dipankar Banerjee)

வாயு விசையாழி என்று அழைக்கப்படும் விமான உதிரி பாகத்தின் மிகவும் அடிப்படையான செயல்பாடுகளில் பிரிட்டன் சுழற்சி என்பதை அவர் அறிமுகம் செய்தார். வளி மண்டல காற்று அமுக்கும் விசை இவற்றை அதிக அழுத்தத்திற்கு கொண்டு வருகின்ற வேலை செய்யும் திரவமாக இந்த பிரிட்டன் சுழற்சி பயன்படுகிறது. எரிபொருளை காற்றில் தெளித்து அதை பற்ற வைப்பதன் மூலம் ஆற்றல் சேமிக்கப்படுகின்ற முறை மிக மிக அற்புதமானது ஆகும். இதனால் எரிப்புத்தன்மை அதிகமாகி வெப்பநிலை ஓட்டத்தை உருவாக்கி உயர் வெப்பநிலை அழுத்த வாயு ஒரு எதிர் சக்தியாக மாறி விட முடிகிறது. இதன்மூலம் ஏராளமான எரிபொருள் மிச்சமாகிறது. இதைத்தான் நாம் டர்போஜெட் என்று அழைக்கின்றோம். நேரடி உந்துதல் என்பது இதன் பொருள்.

விஞ்ஞானி தீபங்கர் பானர்ஜி (Prof. Dipankar Banerjee) கண்டுபிடித்து வழங்கிய எரி வாயு விசையாழிகள் இன்று விமானம் அதிவேக ரயில்கள் கப்பல் போக்குவரத்து இவற்றோடு மின்சார ஜெனரேட்டர்கள் இந்தியாவிலேயே உற்பத்தியாகும் பம்புகள் என பலவற்றில் பயன்படுகிறது. இதற்காக கணக்கிட்டு திரவ இயக்கவியல் எனும் துறையில் உருப்பு பகுப்பாய்வு எனும் துணைத்துறையை அறிமுகம் செய்தவர் பானர்ஜி. ஒற்றை படிக சூப்பர் கலவைகள் எனும் வகையான உலோகங்களை இதற்காக பயன்படுத்துகிறார்கள். சிக்கலான பிசுபிசுப்பு ஓட்டம் மற்றும் வெப்ப பரிமாற்ற நிகழ்வுகள் பற்றிய மேம்பட்ட புரிதல் எரிவாயு விசையாழி எந்திரக் கூறுகளின் செயல் திறனில் கணிசமான மேம்பாடுகளுக்கு துணை புரிந்தவர் பானர்ஜி அவர்கள்.

இதன்மூலம் நம்முடைய நாட்டின் ராணுவம் அயல் நாட்டினுடைய இயந்திரங்களை நம்பி இருக்காமல் நாமே தயாரிக்கும் பாதுகாப்பு இயந்திரங்களை, விமானங்களை கப்பல் கட்டுமானங்களை உருவாக்கிக் கொள்ள முடிந்தது. நீர்மூழ்கி கப்பல்கள் குறித்த இவருடைய பங்களிப்பு மகத்தானது ஆகும்.

தற்போது இந்திய ராணுவத்தில் நான்கு முக்கிய நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. அவற்றில் இரண்டை வழங்கிய பெருமை பானர்ஜியை சேரும். இவை இரண்டுமே அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்கள் ஆகும். பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கி கப்பல்கள் என்று இவற்றை அழைக்கிறார்கள். INS அரிஹந்த், INS அரிகாட் ஆகியவை அவை. இரண்டும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை. இதற்கான எடை குறைந்த டைட்டன் உலோகத்தை வழங்கிய பெருமை பானர்ஜியை சாரும்.

உலகம் போற்றும் இந்திய உலோகவியல் நிபுணத்துவ விஞ்ஞானி தீபங்கர் பானர்ஜி (Expert in Indian Metallurgy Scientist Prof. Dipankar Banerjee)

விஞ்ஞானி தீபங்கர் பானர்ஜி (Prof. Dipankar Banerjee) 1952 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 அன்று வங்காளத்தில் பிறந்தார்.. தனது DRDO ஆரம்ப ஆண்டுகளுக்கு பிறகு நான் முனைவர் பட்டம் முடித்த பெங்களூரின் இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நிறுவனத்திற்கு ஒரு பேராசிரியராக திரும்பினார். ஆனால் அதற்கு முன்பாக DRDO அமைப்பின் உலோகவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராக பணிபுரிந்தவர் அவர். வானூர்தி மற்றும் மறு பொருட்களின் திட்டமிடல் கண்டுபிடித்தல் ஆகியவற்றின் மேற்பார்வை விஞ்ஞானியாகவும் அவர் இருந்திருக்கிறார். அமெரிக்காவின் கார்னகி மெலன் என்னும் பல்கலைக்கழகத்தில் லாஸ் அலமோஸ் தேசிய ஆய்வகம் மற்றும் ஜெனரல் எலெக்ட்ரிக் ரிசர்ச் லெபாரட்ரி ஆகிய ஆய்வகங்கள் உள்ளன. இந்த ஆய்வகங்களில் உலோகவியல் குறித்த தீவிரமான ஆய்வுகளை அவர் மேற்கொண்டார்.

இந்தியாவிற்கு வந்து அதற்கு இணையான ஆய்வகங்களை இங்கு கட்டுமானம் செய்து நம் நாட்டிற்கு அர்ப்பணித்திருக்கிறார். CSIR மற்றும் ரெகொர்ட்ஸ் ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மத்திய கண்ணாடி மற்றும் மண்பாண்ட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வுத் துறையில் தற்போதைய தலைவராக அவர் இருக்கிறார். ஒரு மத்திய அரசின் நிறுவனமாக செயல்பட்டு வரும் மிஷ்ரா தாது நிகாம் லிமிடெட் என்கிற பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆளுநர் குழுவில் அவர் இடம் பெற்றுள்ளார்.

உலகம் போற்றும் இந்திய உலோகவியல் நிபுணத்துவ விஞ்ஞானி தீபங்கர் பானர்ஜி (Expert in Indian Metallurgy Scientist Prof. Dipankar Banerjee)

உலக அளவில் உலோக இயந்திர துறையில் மிகவும் குறிப்பிடத்தக்க விஞ்ஞானிகளில் இவரும் ஒருவர். அடிப்படை உலோகவியல் மற்றும் நானோ இயந்திரவியல் குறித்த 141 முக்கிய ஆய்வுக் கட்டுரைகளின் ஆசிரியர் அவர். அதில் 109 ஆய்வு கட்டுரைகள் இந்த துறையை சேர்ந்த மாணவர்களுக்கு இயந்திரவியல் பொறியியல் கற்று கொடுப்பதற்கான பாடங்களில் குறிப்பாணைகள் ஆக சேர்க்கப்பட்டுள்ளன என்பது பெரிய சாதனையாகும். DRDO என்கிற நம்முடைய இந்தியாவின் பாதுகாப்பு ஆய்வகத்தில் ஆராய்ச்சி மேம்பாட்டு பிரிவில் வான்வழி எலெக்ட்ரானிக் போர், ஆளில்லா விமானம் மற்றும் வான்வழி முன்னறிவிப்பு அமைப்புகளின் திட்டங்களை அறிமுகப்படுத்துவதில் இன்றைக்கும் அயராது அவர் உழைத்து வருகிறார்.

மாபெரும் இந்திய ராணுவ தளவாட விஞ்ஞானியான தீபங்கர் பானர்ஜி பல்வேறு விருதுகளின் சொந்தக்காரர். இந்தியாவின் உயரிய அறிவியல் விருதான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதை தனது நீர்மூழ்கி கப்பல்கள் குறித்த தளவாட அறிவியல் கண்டுபிடிப்புகளுக்காக 1993 பெற்றார். தேசிய பொறியியல் அகாடமி இந்திய அறிவியல் அகாடமி உட்பட பல்வேறு உயர் அமைப்புகளில் நிரந்தர கௌரவ உறுப்பினராக இவர் இணைக்கப்பட்டிருக்கிறார். இந்திய அரசு இவருக்கு 2005ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுரையாளர்:

கோட்பாட்டு இயற்பியலாளர் வெங்கட்ராமன் பாலகிருஷ்ணன் - V.BalakrishnanIndian theoretical physicis - ayesha era natarasan - https://bookday.in/

ஆயிஷா இரா. நடராசன்

தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: உலகம் அறிந்த இந்திய இயற்பியலாளர் அர்ச்சனா பட்டாச்சார்யா (Prof. Archana Bhattacharyya)


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *