இயற்கை இடர்கள் தவிர்க்க இயலுமா? – சுற்றுச்சூழல் மீதுள்ள அதீத ஆசையால் நிலம், நீர், காற்று, உணவு, பூச்சி, பறவை என அத்தனை காரணிகளையும் உளமாற காதலித்து, உணர்வாய் எழுதியுள்ளார் நூலாசிரியர் முனைவர் பா.ராம்மனோகர் அவர்கள்.
உயிரியல் கள ஆய்வாளராக மும்பை இயற்கை வரலாற்று சங்க ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிந்தவர்.
பரத்பூர் பறவைகள் சரணாலயம், JRF விலங்கியல் துறை ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர். தஞ்சாவூர் மாவட்ட சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டவர்.
உயரப் பறந்த இந்தியக் குருவி, இந்திய பறவை மனிதர் Dr.சலீம் அலி அவர்களின் மாணவர் என்பதோடு, பூமியின் மேல் கொண்டுள்ள அக்கறை அனைத்து கட்டுரைகளிலும் வெளிச்சமிடுகிறது.
இயற்கை இடர்கள் தவிர்க்க இயலுமா? என்ற புத்தகத்தில் சுற்றுச்சூழல் பற்றிய 50 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
பறவைகள் ஓர் வாழிடத்திலிருந்து மற்ற வாழிடத்திற்கு செல்வதை
வலசைப் போதல் என்பது போல இடம்பெயரும் மனித இனமும் தங்கள் தேவைக்காக வேறொரு வாழிடம் செல்லும் பொழுது ஏற்படும் பிரச்சனைகளையும் கருத்தில் கொள்ள வேண்டுமாய் கட்டுரை பேசுகிறது.
பாசிப் பூக்களும் பாதுகாப்பற்ற நன்னீர் நிலைகளும், காற்றினில் நச்சு நாதம், ஆழ்கடல் அரிய உயிரின கடத்தல் குற்றங்கள்,
உலக நீர் பிரச்சனை ஓயுமா? என்ற தலைப்பிலெல்லாம் புள்ளி விவரங்களுடன் பல திட்டங்களை பற்றி விவரித்துள்ளார்.
மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் மனித குலத்திற்கு ஒரு வகையில் மேம்பாடு இருந்தாலும் மற்றொரு புறம் சுற்றுச்சூழல் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் அவற்றை சமாளிக்கும் உத்திகளையும் உற்று நோக்க வேண்டும்.
நகர் மயமாக்கம், நில- நீர் மாசுபாடு, பறவையினங்கள் அழிதல் என அனைத்து வகைகளும் சுற்றுச்சூழலை பாதுகாக்க நாம் அனைவரும் செயல்பட வேண்டும். சாயப்பட்டறை, காகித ஆலை, தோல் பதனிடும் தொழிற்சாலை, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையென வெளியேறும் அனைத்து கழிவுகளும் நிலத்தடி நீர்நிலையை எவ்வாறு பாதிக்கிறதென பதிந்துள்ளார்.
2014 ஆம் ஆண்டு 60 மில்லியன் திறன் பேசி உற்பத்தி 2019ல் 330 மில்லியன் ஆக மாறியது .
இது செல்போனின் வளர்ச்சி என்றாலும் அவற்றில் பழுதுபட்டவை மின்னணு கழிவுகளாக (eWaste) மாறி மண்ணின் வளத்தை பாதிப்பதை நினைவில் கொண்டிராத அவசர உலகம் தான் .
தேவைக்கேற்ப வாங்கும் பொருள்களை விட அதிக இருத்தலுடன் பல பொருட்களை வாங்கி குவிக்கிறோம்.
இதனால் ஏற்படும் கழிவுகளை நாம் என்ன செய்யப் போகிறோம்? என சிந்திக்க வைத்துள்ளார்.
மேலும் கார் ,பைக் உற்பத்தியை பற்றியும் மருத்துவக் கழிவு பற்றியும் அவை நீரிலும் மண்ணிலும் ஏற்படுத்தும் தீங்குகளை காட்டியுள்ளார்.
மண்ணில் மாசு
நீக்குவோம் ,
மறுசுழற்சி செய்வோம் !
நமது கழிவு
நம் பொறுப்பு
என்ற உணர்வினை
பெறுவோம்!
திட்டமிட்டு பழுதாக்குதல்,
தினம் ஒரு புதிய பொருள் தேடல்
என்ற தலைப்பில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் புதிது புதிதாய் வாங்கும் பொருட்களால் நமது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பினை தெரிந்து கொள்ள இயலுவதில்லை.
பழைய கழிதலும் புதியன புகுதலும் என்ற சொற்றொடர்கள் தற்போதைய முறைக்கு *இன்று புதிதாய் வாங்குவோம்* என மருவி இருக்கிறது மனக்கசப்பான உண்மைதான்.
தூய்மை தூதுவர் வாழ்வில் துயரங்கள் தொடர வேண்டுமா? என ஆதங்கத்துடன் ஒரு கட்டுரை இருந்தது.
துப்புரவு பணியில் ஈடுபட்டு வரும் மக்களில் பலர் குப்பைக்கிடங்கு அருகிலேயே வசித்து வருகின்றனர்.
அவர்களுக்கு ஏற்படும் நோய்கள் குறித்தும் மும்பை நகரில் நடந்த இறப்பு குறித்தும் பதிவிட்டுள்ளார்.
உணவுப் பழக்கங்களும் உலக வெப்பநிலை உயர்வும் என்ற தலைப்பு ஆர்வமாய் இருந்தது.
நாம் உண்ணும் உணவு , பயிரிடும் முறை, பதப்படுத்துதல், சந்தைப்படுத்துதல், பயன்பாடு மற்றும் கழிவு வெளியேற்றம் ஆகியவற்றை மையமாகக் கொண்டுதான் உலக வெப்பநிலையும் உயர்கிறது .
முக்கிய வளிமண்டல கார்பன் உறிஞ்சு பகுதியாக அலையாத்தி காடுகள் உள்ளதை பற்றி கட்டுரை நன்றாக இருந்தது .
உள்ளூர் மரங்களினப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு என்ற தலைப்பில் கூறப்படும் அனைத்து கருத்துகளும் வட்டார இன தாவரங்களையும் நலம் மயக்கும் மரங்களைப் பற்றியும் சிறப்பாய் இருந்தது.
பூமியின் உயிர் குழுமமாக விளங்குவது மரங்களே என்பதில் மிகையல்ல!
50 கட்டுரைகளையும் வாசித்த பிறகு அணிந்துரையில் சொல்லப்பட்ட
_Some books are to be read_
_Some books are to be tasted_
_Others to be swallowed_
And
_few to be chewed and digested_
Francis bacon வரிகள் போல் இயற்கை இடர்கள் தவிர்க்க இயலுமா? என்ற கேள்விக்குறி வளர்ந்து வரும் சமுதாயம் நினைத்தால் தவிர்க்கலாம் என புத்தகம் நிச்சயமளிக்கிறது.
நூலின் விவரம் குறித்த தகவல்கள்:
நூல்: இயற்கை இடர்கள் தவிர்க்க இயலுமா?
வகை: சுற்றுச்சூழல் கட்டுரைகள்
நூலாசிரியர்: முனைவர் பா. ராம் மனோகர் அவர்கள்.
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
பக்கம்: 192
விலை: ₹ 200
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
நூல் அறிமுகம் எழுதியவர்:
யாழ்.மாரியப்பன்
கும்பகோணம்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.