1987ல் ஒருமுறை ரயிலில் பயணி
ஒருவர் ஈழத்தில் நடக்கும் வேதனைகளைக் கூறினார். ஈழ மண்ணில் கிடைத்த சில கடிதங்களைப் படித்துக் காண்பித்தார்.மிகுந்த வேதனையாக இருந்தது.
அப்போதெல்லாம் கைபேசி வசதி இல்லை. கடிதங்கள்தான்.
இந்த நூலைப் படிக்கையில்..
அந்த ஞாபகம் வந்தமர்ந்தது.
ம்..நூலுக்குள் செல்வோம்.
“உங்களுக்கு வானம், நட்சத்திரம்,
பூக்கள் பிடிக்கும்.
என் அம்மாவிற்கு வள்ளுவன் கம்பன் கண்ணதாசன் எல்லாமே நான்தான்.”
“மாடமாளிகையிலும் போர்களிலும் இல்லை.அன்பால் ஆனந்தமாக ஒரு குடிசைக்குள் வாழ்வதும் வாழ்க்கை என்பதை எனக்கு
புரியவைத்தவள் அம்மா.”
இப்படியிருக்க.. தாயின் கடைசி ஆசையை மகன் நிறைவேற்றினாரா என்பதனைப் பார்ப்போம்
தமிழர் இன அழிப்பு
சிங்களர் அரசியல் வாழ்வு என
கதையின் தொடக்கம் ரணகளம்.
ஈழத்தில் தமிழச்சி இசை
மரணிக்கும் வேதனையைக் கண்ட
வீரத்தமிழன் காளியப்பா, பழிக்குப்பழி வாங்கி அவனும்
மரணிக்கிறான்.
இது கதையின் முடிவல்ல.
முதல் பகுதி மட்டுமே.
இன்னும் பதின்மூன்று பகுதிகள் உள்ளன.
விறுவிறுப்பான நகர்வுகளோடு கதை செல்கின்றது.
“ஒவ்வொரு தமிழனின் அடையாளப் பெயரும் பிரபாகரன் ”
“என் இனம் இன்னும் மொழிப்பற்றோடு வாழ்வதுதான்
உனக்கு பிரச்சனைன்னா எனது
முதல் எதிரி நீதான். இப்பவே ஓடிரு.”
“சிங்கள காவலர்களுக்கு யார் தமிழில் பேசினாலும் முதலில் வருவது கோபம்தான்”
எதிர்பாராத சில காட்சிகளோடு
உணர்வு பூர்வமான எழுத்தாற்றலோடு நிறைவாகக் கொண்டு செல்கிறார் ஆசிரியர்.
கருவில் இருக்கும் குழந்தையிடம்
உறவுகள் பேசும் காட்சி.
குழந்தையின் அசைவு.
சொல்ல வார்த்தை இல்லை.
வாழ்த்துகள் ஆசிரியரே.
தமிழர் வாழ்வியலில் இந்நூல் ஒரு மணிமகுடமாக விளங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
வாங்கி பருகுங்கள் நன்றி.
ஜேபி நீக்கிழார்
நூலின் பெயர்: ஈழ மகள் இடம் கேட்கிறாள்[ நாவல்]
நூலாசிரியர்:எழுத்தாளர் இயலிசம் கண்ணன்.
அமேசான் இன்னில் இதுவரை பண்ணிரெண்டு நூல்கள் வெளியிட்டுள்ளார்.
அச்சுப் பதிப்பில் முதல் நூல்.
நூலின் விலை: ரூ.225/.
வெளியீடு: கேளிர் பதிப்பகம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.