ஏழாவது விரல் (Ezhavathu Viral) - நூல் அறிமுகம் | 15 சிறுகதைகளைக் கொண்ட நூல் இது. எழுத்தாளர் திரு ச. தமிழ்ச்செல்வன் அவர்களின் வாழ்த்துரை

நூல் அறிமுகம்: ஏழாவது விரல் (Ezhavathu Viral) – வே.இலாவண்யா

நூல் பெயர்: ஏழாவது விரல் (Ezhavathu Viral)
தொகுப்பாசிரியர் பெயர்: மு.சிவகுமார்
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் :144
விலை:₹ 150
ஏழாவது விரல் (Ezhavathu Viral) தொகுப்பாசிரியர் அறிமுகம்:

தொன்மைச் சிறப்பு மிக்க மதுரையில் பிறந்தவர். திருச்சியில் பயின்றவர். முதுகலை ஆசிரியராகப் பணியாற்றித் தேர்வு எழுதி முதன்மை கல்வி அலுவலராகத் திருநெல்வேலியில் தற்போது பணியாற்றும் இவர் வளமான வாசிப்புக்குச் சொந்தக்காரர். ஆசிரியர்களைக் கொண்டாடுவோம்! டெல்டா மிஷன், வாசிப்பை நேசிப்போம் போன்ற புதிய திட்டங்களைத் தான் பணிபுரியும் மாவட்டங்களில் செயல்படுத்தியவர். ஆசிரியர்களின் திறமைகளை அடையாளம் கண்டு, அதை வெளிப்படுத்த வகை செய்து, பாராட்டும் அருஞ் செயலுக்குச் சொந்தக்காரர்.

ஏழாவது விரல் (Ezhavathu Viral) சிறுகதை தொகுப்பின் ஆசிரியர்கள் அறிமுகம்: (அனைவரும் தஞ்சாவூரில் பணிபுரியும் ஆசிரியர்கள்)

1.சே யோகேஸ்வரி- பிரதிலிபி எழுத்தாளர்.
2.வி ராஜகோகிலா- (மகிழ்நதி) கதை சொல்லப் போறேன்- வலைப்பதிவு எழுத்தாளர்.
3. சு. மாரியப்பன்- கவிஞர், விருதாளர்.
4. ச. கதிரேசன்- மாணவர்களிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் ஆர்வலர்.
5. சி.க.வசந்தலெட்சுமி- எழுத்தாளர்.
6. இரா.சங்கீதா- சிறார் இலக்கியம், குழந்தைகள் நலன் சார்ந்த படைப்புகளின் ஆர்வலர்.
7. ந. சங்கீதா இளம் பறவையியல் ஆர்வலர்.
8. தி.தாஜ்தீன்- கவிஞர்.
9. ச.துர்கா தேவி- சமூக அக்கறை மிக்கவர்.
10. ச.பூங்குழலி- எழுத்தாளர்.
11. சே.ஷீபா -பிரதிலிபி- கவிஞர்.
12.எஸ். இந்திராணி ராதாகிருஷ்ணன்- கட்டுரையாளர்.
13. தி.சுமதி- கவிஞர், எழுத்தாளர்.
14. ரெ. வனிதா- துடிப்பு மிகுந்த பெண்ணியவாதி.
15. க. சுமித்ரா சத்தியமூர்த்தி- கவிஞர், கட்டுரையாளர், பேச்சாளர்.

ஏழாவது விரல் (Ezhavathu Viral) நூல் அறிமுகம்:

15 சிறுகதைகளைக் கொண்ட நூல் இது. எழுத்தாளர் திரு ச. தமிழ்ச்செல்வன் அவர்களின் வாழ்த்துரை நூலின் மாண்புக்குச் சான்று. திரு ஆர்.செந்தமிழ்ச் செல்வன் அவர்களது ஓவியம் அழகு. திரு இரா. ராமசாமி த.ஆ., திரு ஆ.அல்லி த.ஆ., திரு தி.இதயராஜா பல.ஆ. திரு. சி.க.வசந்தலெட்சுமி– படைப்பாக்கக் குழுவினரின் சீரிய பணி வெகு சிறப்பு!

கண் தேடும் கனா: செ. யோகேஸ்வரி—- காடமங்கலம் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் கட்டிட சமூக அக்கறை மிகுந்த ஒரு பெண்ணின் போராட்டமும் வெற்றியுமே கதைக்கரு.

மோனெம்வாசியா: வி. ராஜகோகிலா—
1500 ஆண்டுகளுக்கு முன் பண்டைய கிரேக்கம் பூகம்பத்தால் அழிந்து தனித்தனி தீவாக உருப்பெறுகிறது. அதில் ஒரு தீவே மோனெம்வாசியா- வரலாற்றுப் பதிவு.

ஆரஞ்சு மிட்டாய்: சு. மாரியப்பன்—
ஏழை மாணவன் பணக்கார மாணவன் வாழ்வியல் ஏற்றத்தாழ்வுகளை முன்வைக்கும் இக்கதை, நம் மாணவர்களிடம் ஏற்றத்தாழ்வு உணர்வு இல்லை என்பதையும் பதிவு செய்கிறது.

ஸ்டார்ட், கேமரா, ரோலிங் ,ஆக்சன்: ச. கதிரேசன்—
வயதான பணக்காரரின் சினிமாவில் நடிக்கும் ஆசை ,அறிவியல் கதை சொல்லும் இயக்குர் (அவரது உருவமே இந்த இயக்குனராக வரையப்பட்டுள்ளது.) யார் என்று கூறும் நகைச்சுவை உணர்வு சிறப்பு.

நாங்களும் மனுஷங்க தான்:சி.க.வசந்த லெட்சுமி– திருநங்கையின் நேர்மையும், மனிதமும் பேசப்பட்டுள்ளது.

மூன்றாம் உலகப்போர்: இரா.சங்கீதா— இப்போது மாணவர்கள் உண்ணும் தின்பண்டங்களின் கெடுதல் கதையாக்கப்பட்டுள்ளது.

நிலாவின் வேலுநாச்சியார்: ந. சங்கீதா —
பெண் குழந்தை செலவு என்று நினைக்கும் பெற்றோருக்கான, குறிப்பாகத் தந்தையருக்கான சாட்டை.

பெரிய யானை: தி.தாஜ்தீன்— பெற்றோர் நேர்மையான முறையில் எந்தத் தொழில் செய்தாலும் அதை மதிக்கும் எண்ணம் குழந்தைகளுக்குள் வளர வேண்டும் என்ற கருத்துரைக்கும் நல்ல கதை.

பார்வை புதிது: ச. துர்கா தேவி—
உடல் ஊனம் ஊனமல்ல; மன ஊனமே ஊனம் என்று உரக்கச் சொல்லும் கதை.

வீடு: ச. பூங்குழலி–
இயற்கையை அழிக்கும் மனித இனத்தைச் சாடும் கதை.

நினைவு பலித்தது: சே.ஷீபா—
ஆசிரியர் நினைத்தால் சாதனை படைக்கலாம் சரித்திரம் உருவாக்கலாம் என்பது மையக்கரு.

கலைவாணியின் கவலை: சுயமாகச் சம்பாதித்தும், சுயமிழந்து நிற்கும் பெண்களை எண்ணி கவலை கொள்வாள் கலைவாணி( கல்விக் கடவுள்)

அம்மாவின் லட்சுமி: தி.சுமதி —
மனிதர்கள் அதிகமாக பாசம் வைக்கும் உயிரினம் மாடுகள். நமக்குப் பிறப்பிலிருந்து இறப்பு வரை பாலூட்டும் தாய் அல்லவா? லட்சுமி என்ற மாட்டின் இறப்பு அம்மாவின் மனதில் ஏற்படுத்திய துயரங்களைப் பதிவு செய்யும் கதை

மீள் கதிர்: ரெ. வனிதா– வளரிளம் பெண்களின் இயல்புகளும், பெற்றோரின் தடாலடி முடிவுகளும், அவர்களின் படிப்பைத் தொடரச் செய்ய நினைக்கும் ஆசிரியர்களின் போராட்டமுமே இக்கதை.

காகேசிலாய்டுகள்: சுமித்ரா சத்தியமூர்த்தி– காக்கேசியன் மற்றும் மங்கோலாய்டு மக்களின் கலப்பினமே காகேசிலாய்டுகள். பறவைகள் பற்றி ஆராய ஒரு தீவுக்கு வந்த அறிவியலாளர்களை காகேசிலாய்டுகள் தாக்குகிறார்கள். ஆனாலும் அந்த அறிவியலாளர்கள், காகேசிலாய்டுகள் அழியாமல் காக்க நினைக்கும் மனிதமே கதை.

அனைத்துக் கதைகளும் முத்தான கதைகள்! நல்ல எழுத்து நடை, பரந்து பட்ட மன உணர்வுகள், கருத்து வளம் என அருமையாகவும் பாராட்டுக்குரியதாகவும் உள்ளன.

ஆசிரியர்கள் வரலாற்றில் திருப்புமுனை இந்நூல்! இந்நூல் பரவலாகப் பலர் அறியச் செய்யப்பட வேண்டும்.
சிறுகதை ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள்! தொகுப்பாசிரியருக்கும் வாழ்த்துகள்!

நூல் அறிமுகம் எழுதியவர்:

வே.இலாவண்யா ப.ஆ.,
அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி,
அய்யம்பாளையம்,
முசிறி வட்டம்,
திருச்சி மாவட்டம்.

Click to Join WhatsApp Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *