எழுத்துகளைப் பற்றி சில வார்த்தைகள் (Ezhuthugalaipattri Sila Varthaigal) – நூல் அறிமுகம்
“சபாஷ் அன்பு! தொடர்ந்து எழுது, இன்னும் கொஞ்சம் புதுப்புது வார்த்தைகளைத் தேடி அலை… உன்னை அவஜ்தைக்குள் சிக்கி வைத்துக் கொள்… எதையும் நேரடியாக சொல்ல வராதே… வாசித்த எதுவும் உனக்குள் அமைதியாக இருக்காது… எண்ணங்களைக் கீறி சின்னச் சின்ன ஊற்றின் கசிவுகளை உன்னக்குள் அடையாளம் காட்டும்… நிஜங்களும், உனக்கான மனிதர்கள் சிலரும் தென்படுவார்கள், அங்கு பல புதிய சொற்களை சுமந்துகொண்டு. உன் அனுபங்களையும் அவர்களையும் இணைந்து எழுதுவதற்கு முயற்சி செய்… எழுதாமல் மட்டும் விட்டுவிடாதே” என்று கருப்புக்கருணா சொன்ன வார்த்தையின் மூலம் முகநூலில் புத்தக விமர்சனங்கள் செய்த எழுத்தாளர். அன்பரசன் ” எழுத்துகளைப் பற்றி சில வார்த்தைகள்” என்ற புத்தகமாக வந்ததாக கூறுகிறார்.
சிறுகதை,கவிதை, நாவல் மற்றும் கட்டுரைகள் இருப்பதை புத்தகங்களில் இருப்பதை நாம் அறிய முடியும். ஆனால் முதல் முறையாக புத்தகங்களின் விமர்சனங்களை வைத்துப் புத்தகமாக இருப்பதை இப்பதான் நான் பார்க்கிறேன். இப்படி ஒரு புத்தகத்தை கொடுக்க வேண்டும் என்று நினைத்த பாரதி புத்தகாலயத்திற்கு பாராட்டுகளும், நன்றியும் சொல்கிறேன். ஏனென்றால் என்னைப் போன்ற புத்தக வாசிப்பில் இருக்கும் தோழர்களுக்கு எந்தப் புத்தகத்தை படித்தால் நன்றாக இருக்கும் என்ற தூண்டுகோளாக இருந்தது என்று நான் கூற முடியும். இதில் நிறைய நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகளை குறித்த கருத்தும் எழுத்தாளர் கருணா அன்பரசு அனுபவமும் புதைந்து கிடக்கிறது.
பீடி என்ற மொழிபெயர்ப்பு நாவலில் இருந்து எழுத்தாளர் தன்னுடைய புத்தகத்தின் கருத்துகளை தொடங்குவதாக இருக்கும். ஒருவர் மட்டும் செல்லும் பாதையில் தடங்கள் அங்கும் இங்குமாக தெரியும். ஆனால் அந்தப்பாதை புதியப்பாதையை ஏற்றுக்கொள்ளும் என்று விரிந்த பார்வையும், சிந்தனையும் ஏற்படும்போது அனைவராலும் தேர்வு செய்து புதிய ராஜபாட்டையாக உருவாகும் என்று சிங்க எழுத்தாளர் தக்ஷீலா ஸ்வர்ணமாலி கூறுகிறார். பெண்களைப் பற்றி கூறும் நாவலாக இருக்கிறது. ஆணாதிக்க சமூகத்தில் இருந்து பெண்ணின் அன்றாட வாழ்க்கையில் நிகழும் பிரச்சனைகள் குறித்து முன்நிறுத்தும் நாவலாக இருப்பதாக எழுத்தாளர் கூறுகிறார்.
சாமிமலை புத்தகத்தை வாசிக்கும்போது மனதில் இருந்த பெரும் நினைவுகள் மீண்டும் வந்ததாக கூறுகிறார். திருவண்ணாமலை இருந்து சென்னை வரை கிளம்பிய மகன்கள் என்னவானார்கள்? என்பது தான் சாமிமலை புத்தகத்தில் இருக்கிறது.
அக்காணி என்ற நாவல் கிளாரா என்ற பெண்ணை மையமாக வைத்து துவங்குவதாகவும், பிரச்சனைகளின் அடிப்படையில் மக்களை அணிதிரட்டுவது, தலைமை தாங்குவது என்று நிறைய அரசியல் பேசும் நாவலாகவும், உழைக்கும் மக்கள் பேசக்கூடிய நாவலாக நூலாசிரியர் வின்சென்ட் கூறுவதாக இருக்கிறது.
கதவுகள் திறக்கப்படும் என்ற நூல் 12 சிறுகதைகளும், 19 கவிதைகளும், 12 ஒவியங்களும் இடம் பெற்றிருக்கும். நாகாலாந்து மக்களின் பிரச்சனைகளும், இனக்குழுக்களுக்கு எதிரான மனப்பான்மையும், மூன்று மனிதர்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்ற அதிகாரம் நிறைந்த அமைப்புக்குப் எதிராக போராடும், எளிய மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் புத்தகமாக இருக்கிறது.
டைரி என்னும் புத்தகத்தில் 14 கதைகள் இருக்கிறது. அனைத்து கதைகளும் சுயசாதிப் பெருமையும், பெண்கள் குடும்ப கவுரமாக நினைத்து, பெண்களுக்கு எதிரான வாழ்வியல் சுழலும் இருப்பதை புத்தகத்தில் இருப்பதாக நூலாசிரியர் அருள்மொழி கூறுவதாக இருக்கிறது. நூலாசிரியரின் முதல் சிறுகதை தொகுப்பு, கொங்கு மண்ணின் எழுத்துகளை பார்க்கலாம் என்று எழுத்தாளர் கூறுகிறார்.
யாத்வஷேம் என்ற நாவலில் ஜெர்மன் இருந்து வெளியேறி ஒரு குடும்பம் ஹிட்லரின் அதிகாரத்தால் நெதர்லாந்து வருகிறார்கள். பின்பு நெதர்லாந்து நாஜிப் படைகள் கைப்பற்றியது. அங்கிருந்து இந்தியாவில் பெங்களூர் வரும் அப்பாவும், மகள் ஹயானவும் வருகிறார்கள். பின்பு அப்பாவும் இறந்துவிடுகிறார். இந்தியாவில் இருக்கும் ஒரு குடும்பத்தோடு இணைந்து வாழும் ஹயானா மீண்டும் அக்கா, தம்பி, அம்மாவை பார்த்தாரா? என்பது தான் நாவலாக இருக்கிறது. படிக்கும்போதே இந்த நாவலை வாங்க வேண்டும் என்று மனதில் எனக்கு தோன்றியது.
உடல் என்ற புத்தகம் ஒன்பது சிறுகதைகள் கொண்ட சிறுகதை தொகுப்பாக இருக்கிறது. ஒவ்வொரு சிறுகதையும் கணவன், மனைவிக்கும் இடையில் இருக்கும் உள்ளார்ந்த சிக்கல்களையும், இன்றைய சூழலில் செல்போனில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும், கணவன், மனைவிக்கு கலவி மட்டும் வாழ்க்கையா? என்று நிறைய கேள்விகளோடு நூலாசிரியர் அரிசங்கர் எழுத்துகள் இருந்ததாக எழுத்தாளர் இந்தப் புத்தகத்தில் கூறுகிறார்.
சட்டைக்காரி
சட்டைக்காரி என்ன சொல்வாள்?
காதலிக்க சொல்வாள்
போராட சொல்வாள்
நேர்மையான
அன்பைச் சொல்வாள்.
என்று நாவல் கருத்துகளை வைத்து புத்தகத்தில் தொடங்குவார். இந்த நாவலில் வடசென்னை பகுதியின் மக்களின் கால்பந்தாட்டம், நகரமயமாக்குதல், 4000 ஏக்கர் 400 ஏக்கர் எப்படி ஆனது? அரசியல்வாதிகள் சுயநலங்கள் விளைவாக எப்படி மாறியது. சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சென்னையின் வாழ்க்கையும், வார்த்தைகளும் இந்த புத்தகத்தில் இருப்பதாக எழுத்தாளர். கருப்பு அன்பரசன் நூலாசிரியர் கரன் கார்க்கியை பாராட்டுகிறார்.
நரையன் என்ற சிறுகதைத் தொகுப்பு 15 கதைகளை வைத்து எழுத்தாளர் தமிழ்கவி என்ற தமயந்தி எழுதிருப்பார். இந்தக் கதைகளில் முக்கியமானதாக தாய்மை என்ற உணர்வை எப்போது ஆண் எப்போது முழுவதுமாக புரிந்து கொள்கிறான் என்ற கற்பெனப்படுவது கதையில் இருப்பதாக ஆசிரியர் கூறுகிறார். இலங்கைவாழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், மொழிகளையும் நூலாசிரியர் எடுத்ததாக புத்தகத்தில் இருக்கிறது.
காட்சிப்பிழை என்ற சிறுகதை எழுதிய நான்சி கோமகன். ஒன்பது கதைகள் கொண்ட சிறிய தொகுப்பாக இருக்கிறது. மனித உயிர்கள் என்று அக்கறை இல்லாமல் படம்பிடிக்கும் மனிதர்கள் பற்றியும், நாய்க்குட்டி உதவி செய்யும் அன்பெனும் நல்லாள் போன்ற மனிதர்களும் இருக்கிறார்கள். பொருளாதாரத்தில் உதவி செய்யும் மனிதர்களின் நிலையை வைத்து முடிவு செய்ய முடியாது என்றும் மனதை மட்டுமே வைத்து உதவிசெய்ய முடியும் என்று காட்சிப்பிழை கூறுகிறது.
தோலீஸ்வரர் என்ற குறுநாவல் அறிவொளி முருகேசன் எழுதிருக்கிறார். கிராமத்தில் வாழும் மனிதர்கள் தங்கள் முன்னோர்களைக் கடவுளாக வழிபடும் வழக்கம் இருக்கிறது. இப்படி 12 குழந்தைகள் பெற்ற தோல் கிழவனின் கதையை மையமாக கொண்ட குறுநாவலாக இருக்கிறது.
அணங்கு என்ற நாவலையை அருண்பாண்டியன் மனோகரன் எழுதியுள்ளார். மிகவும் நெருக்கமான தோழிகள் கவிதா, வள்ளி மீதான நட்புகளை கொண்டு நாவல் செல்கிறது. கிராமங்கள் தான் இந்தியாவின் ஆன்மா என்று அழைக்கப்படுகிறது. ஆனால் கிராமங்களில் மிகப்பெரிய அளவில் சாதிய வேறுபாடுகள் இருந்தாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார் என்று எழுத்தாளர் கருணா அன்பரசு கூறுகிறார்.
சமரசம் என்ற நூல் வங்க மொழியில் இருந்த நாவல் இதை தமிழில் மொழிபெயர்ப்பு செய்தது ரவிச்சந்திரன் அரவிந்தன். இந்நாவல் முழுவதும் தமால் என்னும் ஒரு இளம் இடதுசாரி தோழரின் வாழ்க்கையின் வரலாறு, அவருடைய கட்சியின் பணிகள், ஒடுக்கப்பட்ட மக்களோடு நின்று போராடியதும் இருக்கும். கடைசியாக சுட்டுக் படுகொலை செய்யும்போது கீழே விழுந்து தன் உயிர்மூச்சு நின்று போகும் போது அந்தக் கடைசி நிமிடத்திலும் அவன் கரம் நீட்டி மடக்கி வானத்தை நோக்கி உயருகிறது என்ற புத்தகத்தின் வரிகள் இன்னும் மனதில் தமால் நினைவுகள் ஒலித்துக் கொண்டு இருக்கிறது.
மொத்தம் 18 புத்தகங்களை ஒன்றிணைத்து தன்னுடைய விமர்சனங்களையும், கருத்துகளையும் எழுத்தாளர் கருப்பு அன்பரசன் இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறார். ஒவ்வொரு புத்தகமும், ஒவ்வொரு அனுபவத்தையும் கற்றுக்கொடுக்கும் என்று எழுத்தாளர் கூறியதாக நான் நினைத்துக் கொண்டு என் தொடர் வாசிப்புகளை இன்னும் அதிகமாக வாசிக்க தூண்டும் புத்தகமாக இருந்தது.
எல்லா புத்தகத்தையும் விமர்சனம் செய்யும் உங்கள் புத்தகத்தை விமர்சனம் செய்வதில் பெருமை கொள்கிறேன்.
நன்றி தோழர்.கருப்பு அன்பரசன்.
நூலின் தகவல்கள்
நூல் : “எழுத்துக்களைப் பற்றி சில வார்த்தைகள்”
நூலாசிரியர் : கருப்பு அன்பரசன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
நூலினைப் பெற
தொடர்பு கொள்ளுங்கள்: 44 2433 2924 , 9444960935
விலை : ரூ. 140/-
நூல் அறிமுகம் எழுதியவர்:
சு.வினோத்குமார்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.