நூல் அறிமுகம்: ஆர்.எஸ்.எஸ் அறிய வேண்டிய உண்மைகள் – இரா.சண்முகசாமி 

RSS Facts To Know Book Reviewநூல்: ஆர்.எஸ்.எஸ் அறிய வேண்டிய  உண்மைகள்
ஆசிரியர் : மஞ்சை வசந்தன்
வெளியீடு :  திராவிடர் கழக (இயக்க) வெளியீடு
ஆண்டு : 2019 இரண்டாம் பதிப்பு
விலை : ரூ. 90
பக்கம் : 96
நூலை பெற : 044-26618161
ஆர்.எஸ்.எஸ் உருவான வரலாறு, அது உருவாக்கிய கிளை அமைப்புகள், அதன் நோக்கம், செயல்பாடு, தற்போதைய வளர்ச்சி, அதனால் மக்களுக்கான பாதிப்பு, எதிர்கால செயல்பாடு, இந்தியா முழுவதும் அது எப்படி பரவியது, தமிழகத்தில் முதலில் மண்டைக்காடு கலவரம் 1982 தொடங்கி மெல்ல மெல்ல கன்னியாகுமரி பிறகு கோவை என காலூன்றி தற்போது திருச்சியை நோக்கி தன் காய்களை எப்படி நகர்த்துகிறது, இராமன் என்னும் ஒரே கடவுள், ஒரே மதம், ஒரே இந்து நாடு, மனுவே இந்தியாவின் சட்டமாக்கல் என உணர்ச்சிகளை மூலதனமாக்கி இந்தியாவை எப்படி இந்துராஷ்டிரமாக கட்டமைக்கலாம் என்று ஒரே இந்துமய சிந்தனைப் போக்காக ஆர்.எஸ்.எஸ் வலம் வருகிறது என தனது பதிவை ஆதாரபூர்வமாக ஆசிரியர் இந்நூலில் எடுத்து வைத்துள்ளார்.
அவர் எதையும் தனது கருத்தாக வைக்காமல் ஆர்.எஸ்.எஸ் என்ன கூறுகிறதோ அதையே ஆதாரமாக வைத்து இந்நூலை வடிவமைத்துள்ளார்.

பொதுவாக ஆர்.எஸ்.எஸ் பற்றி நமக்கு தெரியும் கருத்துக்களை விலாவாரியாக தொகுத்து வழங்கியுள்ளார். 1925ல் ஐந்து பேர் கொண்ட ஹெட்கெவார் தலைமையில் விஜயதசமி நாளில்  தொடங்கப்பட்ட அமைப்பு எந்தவித உறுப்பினர் பதிவுமில்லாமல் வளர்ந்து வந்தது. 1927ல் ராமநவமி அன்று ‘ராஷ்ட்டிரீய ஸ்வயம் ஸேவக் ஸங்’ என்று பெயர் வைத்து காவிக் கொடியையும் அறிமுகப்படுத்தினர்.

இராவணனை கொன்ற விஜயதசமி நாளில் தொடங்கப்பட்டு ராமநவமி நாளில் பெயர் சூட்டு விழாவும், கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டது
இராமன் என்னும் ஒரு கடவுள் என்பதை நோக்கியே தனது பயணத்தை தொடங்கியது ஆர்.எஸ்.எஸ் என்று ஆதாரத்துடன் கூறுகிறார்.
மகாத்மா காந்தி அவர்கள் கொல்லப்பட்டது முதல் மூன்று முறை ஆர்.எஸ்.எஸ் தடைசெய்யப்பட்டது. பிறகு அது தொடர்ந்து வளரவேண்டும் என்பதற்காக அரசியல் அமைப்பாக மாற்றமடைகிறது ஜனசங்கம் என்ற பெயரில். அதுவே பின்னர் ஜனதா கட்சியாகவும், தற்போது பா.ஜ.க என பரிணமித்து வந்துள்ளது.
அதன் கோட்பாடு அரசியலை இந்துமயமாக்கு- இந்துமயத்தை இராணுவ மயமாக்கு என்பதே.
அதனடிப்படையில் தான் இப்போது மத்தியில் பா.ஜக அரசு அமைந்து தன் பணிகளை செய்து வருகிறது. பணி என்றால் தன் ஆக்டோபஸ் கரங்களை படுபயங்கரமாக விரித்து வருவதைக் கூறுகிறார்.


வெறுமனே இயக்கம் வளர்க்க முடியாது என்பதால் ஆரம்பத்தில் எளிய பயிற்சியாக 12-15 வயது பிள்ளைகளிடம் கொடுத்து, மக்களுக்கு தொண்டு செய்வதாக விளம்பரம் செய்து (முழுக்க முழுக்க விளம்பரம் மட்டுமே) மெல்ல ‘நாம் இந்து’ என்ற விஷத்தை வளர்க்கிறது. அதற்குத் தேவையான பிரச்சார யுக்தியை நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் மையம் உருவாக்கும். அப்படித்தான் முதல் கலவரத்தை 1927 செப்டம்பரில் நாக்பூரில் வெற்றிகரமாக முடித்து நாக்பூரைச் சுற்றி அது நன்கு வளர முடிந்தது. அதன் அடியொற்றி இந்தியா முழுவதும் விரிவடையச் செய்தது.
சமஸ்கிருதம் ஆட்சி மொழி வரும்வரை ஹிந்தியை ஆட்சிமொழியாக ஏற்றல், அரசியலுக்கு அர்த்தசாஸ்திரத்தையும், சமூக அமைப்பு, பெண்ணடிமைத்தனத்திற்கு மனுவையும் கொள்ளவேண்டும் என்று என ஆர்.எஸ்.எஸை உருவாக்கியவர்கள் விதியை உருவாக்கினர்.
ஆர்.எஸ்.எஸ்ஸின் ரகசிய கடிதம் ஒன்றை விடுதலை ஏட்டில் வெளிக்கொணர்ந்த பதிவு மிகவும் அதிர்ச்சிகரமாக இருக்கிறது தோழர்களே.
ஆம் 1995ல் ஒரு இரகசிய சுற்றறிக்கை விடுதலை நாளேட்டில் 26.3.1995ல் வெளிவந்தது. அவர்களின் உண்மை முகத்தை தோலுரித்தது.
இரகசிய “சுற்றறிக்கை 411/ஆர்.ஓ.3003 11/ஆர்.எஸ்.எஸ். 003
*மருத்துவர்களிடையே இந்துத்துவா கொள்கையை எடுத்துச் சொல்ல வேண்டும். காலாவதியான மருந்துகளையும், போலி மருந்துகளையும் தாழ்த்தப்பட்டோருக்கும், முகமதியர்களுக்கும் கொடுக்கச் சொல்லி மருத்துவர்களைத் தூண்ட வேண்டும். இரத்த தானம் அளிக்கும் சாக்கில் தாழ்த்தப்பட்ட மற்றும் சூத்திரர்களுக்கும் பிறந்த பச்சிளங் குழந்தைகளுக்கு ஊசி மூலம் விஷத்தை ஏற்றி ஊனமாக்க வேண்டும்.
* பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் வாழும் பகுதிகளில் கள், சாராயம், பிராந்தி மற்றும் போதைப் பொருட்களையும் சூதாட்டம் மற்றும் லாட்டரி டிக்கெட் விற்பனையைப் பெருக்க அவற்றை விற்போரைத் தூண்ட வேண்டும்.
*வேசித் தொழிலில் ஈடுபட
*விஷங்கலந்த திண்பண்டங்களை தொண்டர்கள், ஆசிரியர்கள் மூலம் தாழ்த்தப்பட்டோர் குழந்தைகளுக்கு கொடுத்து மனவளர்ச்சி, உடல் வளர்ச்சியை முடமாக்க வேண்டும்.
இதுபோல் ஒன்பது வகையான மிக மோசமான செயல்கள் அடங்கிய சுற்றறிக்கை வெளியானது என்பது மிகவும் அதிர்ச்சிகரமாக இருக்கிறது. இவர்கள் எவ்வளவு கீழ்த்தரமான பேர்வழிகள் என்கிற கோபம் வருகிறது.
இவர்கள் விலாங்கு மீன் போன்றவர்கள். ஒன்று எதிரிகளிடமிருந்து தப்பிப்பது மற்றொன்று எதிரிகளோடு உறவாடி கெடுப்பது என கூறுகிறார்.
இன்னும் மனுவின் கோட்பாடுகள், எங்கெங்கு எப்படி எப்படியெல்லாம் கலவரம் செய்துள்ளனர், சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொள்ளாமல் எப்படி நடந்துகொண்டனர், சிக்கிக்கொண்டால் நான் அவனில்லை என்று காட்டிக்கொள்வது என ஏராளமான ஆதாரபூர்வமாக இந்நூலில் வெளியிட்டுள்ளார்.
உலகம் முன்னோக்கி நடைபோடும் நிலையில் மக்களை பின்னோக்கி சீரழித்து தன் இனம் மட்டுமே முன்னேற வேண்டும் என்பதற்காக இந்துக்கள் என்கிற போர்வையில் இந்திய ஒன்றியத்தை கேன்சராக வலம் வரும் ஆர்.எஸ்.எஸ்ஸை எல்லோரும் வாசிக்க வேண்டும். விஞ்ஞான உலகத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டும் நண்பர்களே! அதற்கு

வாசிப்போம்! விவாதிப்போம்!!

இரா. சண்முகசாமி 
9443534321