இன்று நிலவும் கொரோனா தொற்று நோயினால் உலகம் முழூவதும் தத்தளித்து கொண்டிருக்கின்றது. இதற்கு ஒரு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை இந்த பிரச்சனையை நாம் சமாளித்துதான் ஆகவேண்டும்.
இதனிடையே வீட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம், நாட்டு மருத்துவம் என்று பலர் பலதை சொல்லி வருகிறார்கள்.
பிரச்சனை என்னவென்றால் மாட்டு மூத்திரம், கொக்கெய்ன், சானிடைசர் இவைகளெல்லாம் உதவும் என்கிறார்கள். அதுவும் அமெரிக்க அதிபர் இதனை சொல்வது எதனை காட்டுகிறது என்றால் அறிவியல் முறையில் பிரச்சனையை அனுகாமல் அவசரத்திற்கு ஏதோ ஒரு வழி என்பது போல் அறிவியலுக்கு புறம்பாக பேசுவதுதான் மனவருத்தத்தினை அளிக்கிறது.
இதில் பிரச்சனையை விட தீர்வு மிக மோசமானதாக உள்ளது என சொல்லியிருப்பது சரியானதே. இது போன்று அரசியல் தலைவர்களே அறிவியலுக்கு புறம்பாக பேசுவது இந்த காலகட்டதில் அதிகமாகியுள்ளது.
ஆக இம்மாதிரி தகவல்கள் அதிவேகமாக பரப்புவது தடுக்கப்பட்டு அறிவியல் பூர்வமான தகவல் மக்களிடம் செல்வதை அரசுகள் உறுதிபடுத்த வேண்டும். இந்த அறிவியலை ஒட்டிய வாழ்க்கையினை மக்கள் தழுவ விரும்பும் இயக்கங்கள் இந்த அறிவியலுக்கு எதிரான கருத்துக்களை பரப்பப்படுவதை எதிர்த்து பிரச்சாரம் செய்ய வேண்டும் எது அறிவியல் வாழ்கை என்பதையும் மக்களிடம் விளக்க வேண்டும்.
முதலில் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். இந்த கொரோனா வைரஸ் என்பது இப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு எப்படி பல ஆண்டுகளுக்கு முன்பே மருந்து இருக்க முடியும். இந்த வைரசுக்கு மருந்தாக சொல்லப்படுபவை எல்லாம் வைரஸ் என்று ஒன்று உள்ளது என்பதை அறியாத காலம். அப்படி இந்த கொரோனாவுக்கே மருந்து இருக்கிறது என்றால் எப்படி தட்டம்மை, மீசல்ஸ், டிப்தீரியா, பிளேக் போன்றவைகளுக்கு அவைகள் பயன்படவில்லை. அதற்கும் மருந்துகள் இருந்திருக்க வேண்டும் அல்லவா?
2. கேட்கப்படுபவை கொரானா வைரசுக்கான மருந்து. சொல்லப்படுபவை அந்த கொரோனா தொற்று நோயின் போது ஏற்படும் இதர இருமல் காய்ச்சல் போன்ற இதர பிரச்சனைகளுக்கான மருந்துகளாகும். ஆனால் சொல்லப்படுவதோ கொரோனாவுக்கான மருந்து என்பதால் எதிர்ப்புகள் எழுகின்றன. கனடா இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளிலேயே இவ்வாறு ஓமியோபதியில் மருந்துகள் உள்ளது என்று சொல்லப்படுவது வேதனையினை அளிக்கிறது.
ஒமியோபதியில் மூலக்கூறு ஆற்றலை அதிகமாக்குவது அல்லது குறைப்பது என்பதன் அடிப்படையில் மருத்துவம் செய்யப்படுகிறது. ஆனால் மேலை நாடுகளில் அது குவாண்டம் அடிப்படையில் வேலை செய்வதால் கொரோனாவுக்கு தீர்வு காணமுடியும் என்கிறார்கள். குவாண்டம் என்பது அணுவைவிட சிறியதை பற்றி அறிவது. இது ஒமியோபதியின் அடிப்படையினையே மாற்றுகிறது. அதேபோல் வர்ம மருத்துவம், மூலிகை வைத்தியம், இயற்கை வைத்தியம், மற்றும் இதர வைத்தியங்கள் என்று அவரவர்கள் புதிதுபுதிதாக கிளம்புகிறார்கள்.
ஒரு பயன்பாட்டின் மீது நம்பிக்கை இருக்கலாம். ஆனால் நம்பிக்கையே அறிவியலாகிவிடாது. எனவே இம்மாதிரியான ஆதாரமற்ற அறிவியலுக்கு புறம்பான பிரச்சாரங்களை மருத்துவ அமைப்புகள் எதிர்க்க வேண்டும். இல்லை எனில் ஒரு புறம் இதனை ஆதரிப்பதாகவும் அதே சமயம் இதனை கண்டுகொள்ளாததாகவும் அமையும். இது மக்களிடையே பதட்டத்தை உருவாக்கும்.
இந்த கொரோனா வைரசுக்கு மருந்து ஒரு தடுப்பு ஊசி என்று தற்போது முடிவுக்கு வந்துவிட்டது அறிவியல் உலகம். அதை தயாரிக்கும் பணியில் இறங்கிவிட்டது. எந்த நாடு அதனை கண்டுபிடிக்க போகுது என்பதெல்லாம் வேறு. மனித குலத்திற்கு அறிவியல் பூர்வமான தீர்வுதான் சிரியாக இருக்கும். உண்மையில் இந்த மாற்று மருத்துவ முறைகளில் பயன் இருக்கலாம். ஆனால் எவ்விதத்திலும் மக்கள் ஏமாற்றப்படக்கூடாது.
அறிவியலாளர்களும் ஆராய்ச்சியாளர்களும் மருத்துவர்களும் இத்தகைய போலி கருத்துக்களை எதிர்க்க வேண்டும். இத்தகையவை அறிவியல் பூர்வமானதாக
3. நிரூபிக்கப்படவில்லை என்பதால் இவற்றை எதிர்க்க வேண்டும். இத்தகையவை அறிவியல் திரிபுகள் என்று சொல்லலாம். ஓமியோபதி, எனர்ஜி தெரபி என்று சொல்லும் போது அவர்கள் குவாண்டம் கோட்பாட்டினை பயன்படுத்துவதாக சொல்கிறார்கள். அதே போன்று நவீன மருத்துவர்களும் குடலில் எனிமா போன்று கொடுத்தால் சரியாகும் என்கிறார்கள். மேலும் நுண்ணுயிர் அதாக்வது மைக்ரோபையோம் என்று சொல்லி மரபு மாற்றத்தின் மூலம் கொரோனாவுக்கு மருத்துவம் என்று நியாயப்படுத்துகிறார்கள். நோய் எதிர்ப்பு சக்திக்கு ஸ்டெம்செல் தெரெபி என்றும் வாதிடுகிறார்கள். இவைகளெல்லாம் அறிவியலுக்கு புறம்பானதே. மரபனு, ஸ்டெம்செல் ஆகியவைகளில் மாற்றத்தை கொண்டு வருவதில் பல சிக்கல்கள் உள்ளன.
எனவே இன்று இம்யூனாலஜிஸ்ட் என்னும் நோய் தடுப்பு முறை நிபுணர்களும், குடல் அறுவை நிபுணர்களும், நுண்னுயிரியல் நிபுணர்களும், இதர நிபுணர்களும் ஆராய்ச்சியாளர்களும் உண்மையான ஆராய்ச்சியின் அடிப்படையில் இல்லாமல் அறிவியலை கடத்தி கருத்துக்களை சொல்வது நடைபெறுவதை அம்பலப்படுத்த வேண்டும். இம்மாதிரி தவறான செய்திகளெல்லாம் அமெரிக்கா இங்கிலாந்து கனடா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளிலேயே பரப்பப்படுகிறது.
ஒருபுறம் புவி வெப்பமாதல் மறுப்பாளர்கள், நோய்தடுப்பு மருந்து எதிர்ப்பாளர்கள், மறுபுறம் சமூக ஊடகங்களின் லாப கணக்கும் அதில் அரங்கேறும் அறிவியலுக்கு எதிரான தகவல்களும் அதிகரித்துள்ளது. குவாண்டம் மெகானிக்ஸ் கொண்டு ஓமியோபதி செயல்படுகிறது என்பது தவறு என்பதை ஒரு பொளதீக நிபுணர் மட்டும் எதிர்த்துள்ளார்.
இந்த தறான விஞ்ஞானத்திற்கு புறம்பான செய்திகளை விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் இருட்டடிப்பு செய்ய வேண்டும்.. அறிவியல் தகவல்கள் பரப்பப்பட வேண்டும். அறிவியல் வாழ்வினை விரும்புவோர் இதில் தலையிட்டு சரிசெய்ய வேண்டும்.
நேட்சர் (Nature-27.042020) இதழில் ஆசிரியர் திமோதி கால்ஃபீல்டு (Timothy Caulfield) எழுதிய கட்டுரையின் சுருக்கம்.
தமிழில் : எஸ்.சுகுமார்