டேல் கார்னகி 1888 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த புகழ்பெற்ற ஆசிரியர் மற்றும் எழுத்தாளர்.  அவர் self development என பல புத்தகங்களை எழுதியுள்ளார்.  அவர் எழுதிய புத்தகங்கள் பலவும் இன்றும் மக்களால் விரும்பி படிக்க படுகிறது.

நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவது எப்படி?


நீங்கள் பார்க்கும் அல்லது பழகும் அனைவரையும் நண்பர்களாக்கி கொள்ளவும், மக்களிடம் செல்வாக்குடன் விளங்கவும், உங்கள் தொழில், தனிப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றில் சிறந்து விளங்கவும் டேல் கார்னகி ஆங்கிலத்தில் எழுதிய ‘How to Win Friends and Influence People?’ என்ற புத்தகம் ‘நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி?’ என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புத்தகத்தை படிப்பவர்கள் அவர்களின் மனைவி, கணவர், குழந்தைகள், முதலாளி, தொழிலாளி, நண்பர்கள் மற்றும் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களை எளிதாக கையாளலாம்.  அவர்களிடம் செல்வாக்கு பெறலாம்.  வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.

கவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?


வேலை, தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான கவலைகளில் ஐம்பது சதவீதத்தைக் களைவது எப்படி? · உங்களது தனித்துவத்தை வளர்த்தெடுத்து அதைப் பேணிக்காப்பது எப்படி? என்று வாழ்க்கைத் தேவையானவற்றிற்கான பதில்கள் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. ஒரு நாவலைப் போல, படிக்க சுவாரசியமாகவும், அதே சமயம் வாழ்வில் எளிமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் விதத்திலும் இருக்கும். பதற்றங்களும், பயங்களும், கவலைகளும் நிறைந்த ஒரு வாழ்க்கையை நாம் வாழத் தேவையில்லை என்பதை இந்நூல் எடுத்துரைக்கிறது.
இது போன்ற எழுத்தாளர்களை ஊக்குவிக்க நூல்களை வாங்கிப் படியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *