ரகுராம் கோவிந்த ராஜன் (Raghuram Govind Rajan) பிப்ரவரி 3, 1963இல் பிறந்த இந்திய பொருளாதார அறிஞர் ஆவார். 2013 முதல் 2016 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும், 2003 முதல் 2006 வரை பன்னாட்டுப் பண நிதியத்தில் தலைமை பொருளாதார நிபுணராகவும் ஆராய்ச்சி இயக்குநராகவும் இருந்தார். அவரது ஆராய்ச்சி ஆர்வங்கள் வங்கியல், பணவியல் கொள்கை, பெருநிறுவன நிதி, அரசியல் பொருளாதாரம், சமூக மேம்பாடு, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை நோக்கியதாக உள்ளது. 2010 ஆம் ஆண்டில், அவரது புத்தகமான Fault Lines: How Hidden Fractures Still Threaten the World Economy என்பதற்கு, Financial Times and McKinsey Business Book of the Year Award விருது வழங்கப்பட்டது. நிதித்துறை பகுப்பாய்வை உள்ளடக்கிய பன்னாட்டுப் பண நிதியத்தின் பொருளாதார நாடு மாதிரிகளுக்கு ராஜன் அடித்தளமிட்டார். சில குறிப்பிட நாடுகள் தங்களின் செலுத்து இருப்புச் சமநிலையின் ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க உதவிய ஆலேசனைக் குழுவினை அவர் வழிநடத்தினார்.
ராஜன், அரசின் உதவியுடன் பொருளாதாரத்தை நிலைநிறுத்தவும் பணவீக்கத்தைக் குறைப்பதன் மூலம் இந்திய ரிசர்வு வங்கியின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்க உதவியுள்ளார். ராஜன், இந்திய ரிசர்வு வங்கியின் ஆளுநராக இருந்தபோது, பணவீக்கத்தைக் குறைப்பதற்கு முன்னுரிமை அளித்தார், செப்டம்பர் 2013இல் 9.8%இருந்து ஜூலை 2015இல் 3.78%ஆகக் கொண்டு வந்தது, இது 1990களுக்குப் பிறகு மிகக் குறைந்த அளவாக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். செப்டம்பர் 2013இல் 6.1%இருந்து ஜூலை 2015இல் -4.05% என்ற வரலாற்றில் குறைந்த அளவிற்கு மொத்த பணவீக்கம் குறைந்தது.
ராஜனின் பதவிக் காலத்தில், பன்னாட்டுப் பண நிதியம் பெரும்பாலும் பழைய மரபுவழியிலேயே பயணித்தது. 1997 தென்கிழக்கு ஆசிய நாடுகளின் நெருக்கடியிலிருந்து ஆசியப் பொருளாதாரங்கள் பாடம் கற்றுக்கொண்டது அவரது மேற்பார்வையில்தான். பன்னாட்டுப் பண நிதியத்தை அல்லது மேற்கத்திய நாடுகளை நம்பி கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்வதைவிட சுயமாக நாடுகள் முன்னேறக் கற்றுக்கொள்ளவேண்டும் என்றார். அரசாங்கத்தின் பங்கு குறித்த ராஜனின் கருத்துக்கள், நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் ஜேம்ஸ் புக்கானனால் உருவாக்கப்பட்ட பொருளாதாரக் கருத்துக்களின் தாக்கம் வெளிப்படுகின்றது. ரகுராம் ராஜன் 2024இல் Breaking the Mold: India’s Untraveled Path to Prosperity என்ற புத்தகத்தை ரோகித் லம்பா என்பவருடன் சேர்ந்து வெளியிட்டுள்ளார். தற்போது ராஜன், சிக்காகே பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
ஆதாரம்: www.chicagobooth.edu; www.live.worldbank.org; www.jagranjosh.com; www.livemint.com
📚 எழுதியவர்:

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

