ஆலன் எச். மெல்ட்ஸர் (Allan H. Meltzer) பிப்ரவரி 6, 1928 பிறந்து மே 8, 2017இல் மறைந்த அமெரிக்க அரசியல் பொருளாதார அறிஞரான இவர் சிகாகோ மற்றும் ஹார்வர்ட் உட்பட உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணியாற்றினார். இருபதாம் நூற்றாண்டின் முன்னணி நிதி பொருளாதார நிபுணராக அறியப்படுகிறார். மெல்ட்ஸரின் ஆய்வுக் கட்டுரைகள் ஏராளமான முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. அவரது 2012ல் வெளியிட்ட “ஏன் முதலாளித்துவம்?” என்பது ஒரு முக்கியமான புத்தகம் ஆகும். இதில் ஆலன், பணவியல் பொருளாதாரம் மற்றும் பொதுக் கொள்கையில் அவர் புதுமைகளை வழங்கியுள்ளார், மைய வங்கி பொருளாதார பேரழிவுகளை எவ்வாறு பாதிக்க முடியும் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
கட்டுப்பாடான பணவியல் கொள்கையுடன் பெரும் பணவீக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர பெடரல் ரிசர்வை வற்புறுத்துவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். “தோல்வி இல்லாத முதலாளித்துவம் பாவம் இல்லாத மதம் போன்றது” என்ற முழக்கத்தை உருவாக்கினார் இது, அவ்வப்போது பல ஆய்வாளர்களால் மேற்கோலிடப்பட்டது. இத்துடன் “திவால் நிலைகள் மற்றும் இழப்புகள் விவேகமான நடத்தையில் மனதை ஒருமுகப்படுத்துகின்றன” போன்றவை பழமொழிகளின் வரிசையில் கூடுதலாகச் சேர்ந்தது.
1999 மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் அவர் காங்கிரஸ் ஆணையத்தின் தலைவராக இருந்தார் இதனை, மெல்ட்ஸர் ஆணையம் என்றும் அழைக்கப்பட்டது. இந்த ஆணையம், பன்னாட்டுப் பண நிதியம் மற்றும் உலக வங்கி 1997-98 நிதி நெருக்கடிக்கு எவ்வாறு பதிலளித்தன என்பதை ஆய்வு செய்தது, பன்னாட்டுப் பண நிதியம் மற்றும் வளர்ச்சி வங்கிகளுக்கான பல்வேறு சீர்திருத்தங்களை பரிந்துரைத்தார். ஜூலை 1997இல் தொடங்கி தென்கிழக்கு ஆசியச் செலாவணிகளின் உடனடி மதிப்புக் குறைப்பு உலகப் பொருளாதாரம் முழுவதும் அலை வீசியது, இது அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் சந்தைகளை பாதித்தது. அரசின் பிணைக் கடன் திட்டத்தினை கடுமையா எதிர்த்தார். அவர் அமெரிக்க ஜனாதிபதியின் பொருளாதாரக் கொள்கை ஆலோசனைக் குழு மற்றும் ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகர்கள் குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார். இந்த நிதி நெருக்கடியினை கடந்து வர முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்.
ஆதாரம்: www.hoover.org; www.nytimes.com; www.bradleyfdn.org
📚 எழுதியவர்:

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
