ரிச்சர்ட் வான் ஸ்ட்ரிக்ல் (Richard von Strigl) (பிப்ரவரி 7, 1891இல் பிறந்து நவம்பர் 11, 1942இல் மறைந்தார்) ஒரு ஆஸ்திரிய பொருளாதார அறிஞர் ஆவார். பொருளாதாரக் கோட்பாடு, பயன்முறைப் பொருளாதாரம், மூலதனக் கோட்பாடு மற்றும் மெய்யியல் சார்பு மற்றும் வரலாற்று ஆராய்ச்சிக்கு இடையிலான உறவு குறித்த முன்னோடி ஆய்வாளராக ஸ்ட்ரிக்ல் காணப்படுகிறார். அவரது படைப்பான Capital and Production (மூலதனம் மற்றும் உற்பத்தி) தொழில்நுட்ப பொருளாதாரக் கோட்பாட்டிற்கு ஒரு முக்கிய பங்களிப்பாகும். உற்பத்தி செயல்முறைகள் மற்றும் பெரும் மந்தநிலைக்கான பகுப்பாய்வில் ஸ்ட்ரிக்லின் பணி தனித்து நிற்கிறது. மூலதனத் துறையை உருவாக்குவதில் காலம் மற்றும் உற்பத்தித் திட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை அவர் சந்தேகத்திற்கு இடமின்றி விளக்கியுள்ளார்.
ஆஸ்திரிய மூலதனக் கோட்பாட்டில் ஸ்ட்ரிகலின் முக்கிய பங்களிப்பானது முதல் முறையாக ஆங்கிலம் பேசும் உலகிற்குக் கொண்டு செல்லப்பட்டது. அவருடைய உற்பத்திக் கோட்பாடு, வணிகச் சுழற்சிக் கோட்பாட்டு உற்பத்தி கட்டமைப்பிற்குள் நுகர்வோர் பொருட்களின் பங்கைப் பற்றிய முன்னோடி கணக்கினை தருகிறது என்ற வழியினை முன்மொழிந்தார். ஸ்ட்ரிகலின் கூற்றுப்படி, பொருளாதார அறிவியலானது பற்றாக்குறை பற்றிய தனித்தன்மையின் தொடர்பினை பற்றியது என்பதாகும். இத் தொடர்புகள் அனைத்தும் அரசின் எல்லைக்கு உட்பட்டதாகும், இதனை நான்கு அடிப்படை பொருளாதார கருத்துக்களாக விவரிக்க முடியும் என்கிறார்
(1) பொருளாதார தொடர்புடைய விடையங்கள்,
(2) உடைமையாளர்,
(3) பொருளின் வாய்ப்பு பயன்பாடுகள்
(4) மதிப்பு அளவுகள்.
இந்தக் கருத்துக்கள் பொதுவான வடிவங்களின் தன்மையைக் கொண்டுள்ளன, இதனைக் கொண்டு பலவேறு உள்ளடக்கங்களை வகைப்படுத்தலாம். இது வரலாற்றுத் தொடர்பு ஆராய்ச்சிக்கு வழிவகுக்கிறது. இம்முறையானது ஆஸ்திரிய மற்றும் ஜெர்மன் பொருளாதாரத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ட்ரிகல் ஒரு அடக்கமான, மனிதாபிமான, பண்பட்ட மற்றும் மிகவும் புத்திசாலித்தனமான மனிதர், அவர் தனது மாணவர்கள் மற்றும் சக ஊழியர்கள் அனைவரையும் கவர்ந்தார்.
ஆதாரம்: www.mises.org; www.fee.org
📚 எழுதியவர்:

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

