ஜோசப் இ. ஸ்டிக்லிட்ஸ் (Joseph E. Stiglitz) (பிப்ரவரி 9, 1943இல் பிறந்தவர்) அமெரிக்காவைச் சார்ந்த அண்மைக்கால புகழ்மிக்க பொருளியல் அறிஞர் ஆவார். இவர் ஏ. மைக்கேல் ஸ்பென்ஸ் மற்றும் ஜார்ஜ் ஏ. அகெர்லோஃப் ஆகியோருடன் சேர்ந்து, சமனற்ற தகவல்களுடன் (asymmetric information) சந்தைகளின் கோட்பாட்டிற்கான அடித்தளத்தை அமைத்ததற்காக 2001ஆம் ஆண்டில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை பெற்றார். அமெரிக்காவில் கிளிண்டன் நிர்வாகத்தின் போது, 1993 முதல் 1995 வரை பொருளாதார ஆலோசகர்கள் குழுவில் ஸ்டிக்லிட்ஸ் உறுப்பினராக இருந்தார். பின்னர் 1997 முதல் 2000வரை உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணராகவும் மூத்த துணைத் தலைவராகவும் பணியாற்றினார். பிரின்ஸ்டன், ஸ்டான்போர்ட், எம்ஐடி, ஆக்ஸ்போர்டு மற்றும் கொலம்பியா போன்ற பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணிபுரிந்துள்ளார்.
ஸ்டிக்லிட்ஸ், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (OECD)பில் பொருளாதார செயல்திறன் மற்றும் சமூக முன்னேற்றத்தை அளவிடுவதற்கான உயர் மட்ட நிபுணர் குழுவின் இணைத் தலைவராகவும், ரூஸ்வெல்ட் நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணராகவும் உள்ளார். ஸ்டிக்லிட்ஸுக்கு 1979இல் ஜான் பேட்ஸ் கிளார்க் பதக்கம் வழங்கப்பட்டது. 2000ஆம் ஆண்டில், கொலம்பியா பல்கலைக்கழகத்தைத் தளமாகக் கொண்ட சர்வதேச வளர்ச்சி குறித்த சிந்தனைக் குழுவான கொள்கைகள் விவாதத்திற்கான முன்முயற்சியை ஸ்டிக்லிட்ஸ் நிறுவினார். 2011ஆம் ஆண்டில், உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க பொருளாதார அறிஞர்கள் 100 நபர்களில் ஒருவராக டைம் பத்திரிகையால் ஸ்டிக்லிட்ஸ் பட்டியலிடப்பட்டார். சமச்சீரற்ற தகவல்களில் அவர் மேற்கொண்ட ஆய்வுகள் இதற்கான முன்னோடிப் பங்களிப்பாளராக அவர் அறியப்படுகிறார். ஸ்டிக்லிட்ஸின் ஆராய்ச்சியானது, வருமான பகிர்வு, காலநிலை மாற்றம், பெருநிறுவன நிர்வாகம், பொதுக் கொள்கை, பேரியல் பொருளாதாரம் மற்றும் உலகமயமாக்கல் ஆகியவற்றைச் சார்ந்ததாக உள்ளது.
2009ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைத் தலைவரால் பன்னாட்டு நிதியம் மற்றும் பணவியல் முறை சீர்திருத்தம் குறித்த நிபுணர்கள் ஆணையத்தின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். இவ் ஆணையம் செப்டம்பர் 2009இல் அதன் அறிக்கையையும் வெளியிட்டது, இதனை தி ஸ்டிக்லிட்ஸ் அறிக்கை என்று அழைக்கப்பட்டது. 2008ஆம் ஆண்டில் ஏற்பட்ட உலக அளவிலான பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, அவர் புதிய பொருளாதார சிந்தனை நிறுவனத்தை (INET) நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்துள்ளார், இது பல்வேறு பொருளாதாரத்தின் உட்பிரிவுகளை சீர்திருத்துவதை நோக்கமாகக் கொண்டது, இந்த அடிப்படையில் 21ஆம் நூற்றாண்டின் எதிர்கொள்ள வேண்டிய பெரும் சவால்களை எதிர்கொள்ள ஆயுத்தமாக உதவுகிறது.
“தகவல் பொருளாதாரம்” என்று அழைக்கப்படும் ஒரு புதிய பொருளாதாரப் பிரிவை உருவாக்க ஸ்டிக்லிட்ஸ் அடித்தளம் அமைத்தார், இது தகவல் சமச்சீரற்ற தன்மையின் விளைவுகளைப் பற்றி ஆராய்கிறது மற்றும் தவரான தேர்வு (adverse selection) மற்றும் அறமுறை (moral hazard) போன்ற முக்கிய கருத்துக்களை முன்னோடியாகக் கொண்டுள்ளது. இந்தக் கருத்துக்கள் இப்போது கோட்பாட்டாளர்களுக்கு மட்டுமல்ல, கொள்கை ஆய்வாளர்களுக்கும் நிலையான கருவி மாறியுள்ளன. பேரியல் பொருளாதாரம், பணவியல் கோட்பாடு, வளர்ச்சி பொருளாதாரம், வர்த்தகக் கோட்பாடு, பொது மற்றும் நிறுவன நிதி, தொழில்துறை அமைப்பு கோட்பாடு, கிராமப்புற அமைப்பு மற்றும் நலப் பொருளாதாரம் மற்றும் வருமானம் மற்றும் செல்வ பகிர்வு ஆகியவற்றின் ஆய்விற்கு அவர் குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளைச் செய்துள்ளார்.
“செயல்திறன் ஊதியங்கள்” குறித்து கார்ல் ஷாபிரோவுடன் ஸ்டிக்லிட்ஸின் ஆய்வானது சமச்சீரற்ற தகவல்களின் பொருளாதாரத்திற்கு மற்றொரு குறிப்பிடத்தக்கப் பங்களிப்பாகும். இதன் அடிப்படைக் கருத்து என்னவென்றால், தொழிலாளர்கள் புறக்கணிக்கப்படாமல் இருக்கவும் ஊக்கமளிக்கமளிக்வும் நிறுவனங்கள் உயர் ஊதியம் தவிற்று வேறு வகையில் ஊக்கம் அளிக்கும் வகையில் பல்வேறு நிலையினை செயல்படுத்துவதாகும். வேலையின்மை ஏற்படாத வகையில் வகையில் நிறுவனங்கள் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டால், வேலையை விட்டு வெளியேறியதற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட ஒரு தொழிலாளி வேறு இடத்தில் அதே ஊதியத்தில் வேலை பெறலாம் என்ற நிலை உருவாகும். அதிக ஊதியத்தில், ஒவ்வொரு நிறுவனமும் குறைவான மக்களை வேலைக்கு அமர்த்த விரும்புகின்றன, ஆனால் அதிகமான தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்தை விட அதிக ஊதியத்தில் வேலை செய்ய விரும்புகிறார்கள். இதன் விளைவு வேலையின்மையானது நீண்ட காலத்திற்கும் உருவாகும் என்பதாகும்.
உகந்த வரிவிதிப்பு கோட்பாட்டிற்கும் ஸ்டிக்லிட்ஸ் பங்களித்துள்ளார். தகுந்த அனுமானங்களின் கீழ், ஒரு எஸ்டேட் வரி வருமானத்தை அதிகமாகவோ, குறைவாகவோ அல்லது சமமற்றதாகவோ மாற்றும் என்று அவர் சுட்டிக்காட்டினார். எஸ்டேட் வரியானது சேமிப்பைக் குறைக்கக்கூடும், மேலும் சேமிப்பு மற்றும் மூலதனக் குவிப்பு குறைவது மூலதனத்திற்கும் உழைப்புக்கும் இடையிலான குறைந்த விகிதத்திற்கு வழிவகுக்கும் என்பது அவரது அடிப்படை வாதம். மூலதனத்தின் இந்த மிகுந்த பற்றாக்குறை மூலதனத்திற்கான திரும்பப் பெறும் வருவாயை அதிகரிக்கும் மற்றும் சில அனுமானங்களின் அடிப்படையில், வருமானத்திலிருந்து மூலதனத்திற்குச் செல்லும் பங்கானது அதிகரிக்கும். மூலதனம் உழைப்பை விடச் சமமற்ற முறையில் விநியோகிக்கப்படுகிறது என்று கருதினால், இதன் விளைவாக அதிக வருமான சமத்துவமின்மை இருக்கும் என்கிறார் ஸ்டிக்லிட்ஸ்.
அவரது புகழ்பெற்ற புத்தகங்கள் The Roaring Nineties: A New History of the World’s Most Prosperous Decade (2013). The Three Trillion Dollar War: The True Cost of the Iraq Conflict (2008), The Price of Inequality (2012), Rewriting the Rules of the American Economy: An Agenda for Growth and Sared Prosperty (2016), The Euro: How a Common Currency Treatens and Future of Europe (2016), and People. Power, and Profits: Progressive Capitalism for an Age of Discountent (2019).
ஆதாரம்: www.britannica.com; www.nobelprize.org; www.live.worldbank.org; www.econlib.org
📚 எழுதியவர்:

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
