பிப்ரவரி 10 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- எர்னஸ்ட் ஹென்றி பெல்ப்ஸ் பிரவுன் (Economist Sir Ernest Henry Phelps Brown Article in Tamil) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

பிப்ரவரி 10 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- எர்னஸ்ட் ஹென்றி பெல்ப்ஸ் பிரவுன் – பேராசிரியர் பு.அன்பழகன்

எர்னஸ்ட் ஹென்றி பெல்ப்ஸ் பிரவுன் (Sir Ernest Henry Phelps Brown) பிப்ரவரி 10, 1906இல் பிறந்து டிசம்பர் 15, 1994இல் மறைந்த புகழ்மிக்க பிரித்தானியப் பொருளாதார அறிஞர் ஆவார். அவரது முக்கிய ஆய்வு, பொருளாதாரம் மற்றும் வருமானம் போன்றவற்றைச் சார்ந்ததாகும், கூலி, விலை, உற்பத்தித் திறன், வருமானப் பகிர்வு ஆகியவற்றை தரவுகளைக் கொண்டு வரலாற்று அடிப்படையில் ஆய்விட்டுள்ளார். 1947முதல் 1968வரை தொழிலாளர் போராசிரியாராக லண்டன் பொருளாதார பள்ளியில் பணியாற்றினார். பிரித்தானிய அரசில் Council on Prices, Productivity, and Income (1959), the National Economic Development Council (1962) மற்றும் the Royal Commission on Distribution of Income and Wealth (1974-1978) ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தார்.

பெல்ப்ஸ் பிரவுன் பொருளாதார வரலாறு பற்றி பல்வேறு தலைப்புகளில் விரிவாக எழுதியுள்ளார். பிரவுன் புகழ்பெற்ற தொழிலாளர் பொருளாதார வல்லுநராக அறியப்படுகிறார். பொருளாதார வல்லுநர்கள் தொழிலாளர்களின் பண்புகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தவர், பிரிட்டிஷ் தொழிற்சங்கங்களின் வளர்ச்சி மற்றும் தொழில்துறை உறவுகளின் அமைப்பில் அவற்றின் பங்கை ஆராய்ந்து வெளியிட்டார். பணக் கூலி மற்றும் தொழிலாளர் உற்பத்தித்திறன் உட்பட பல்வேறு வரலாற்றுத் தொடர்களையும் வெளியிட்டார்.

விலை மற்றும் சமனற்ற நிலைபற்றி வரலாற்று குறித்த ஆய்வினை கலப்பு குறியீடு வழியாக மேற்கொண்டார். பணவீக்கம் பற்றி பிலிப்ஸ் வழங்கிய புகழ்பெற்ற பிலிப்ஸ் வளைகோட்டிற்கு முன்னோடியாக பிரவுன், பணவீக்க கோட்பாட்டினை அளித்து கூலிக்கும் வேலையின்மைக்குமான உறவினைப் பற்றியும், செலவு உந்து பணவீக்கம் பற்றியும் விளக்கியுள்ளார். ஹென்றி பெல்ப்ஸ் பிரவுன் ஒரு பயன்பாட்டுப் பொருளாதார நிபுணராகத் தனது கல்வி வாழ்க்கையினைக் கழித்தார்.

அவரது முக்கிய வெளியீடுகள்: The Framework of the Pricing System (1936), The Growth of British Industrial Relations (1959), A Course in Applied Economics (1959), The Economics of Labour (1962), A century of Pay (1968), The Inequality of Pay (1977), The Origins of Trade Union Power (1983).

ஆதாரம்: www.archives.lse.ac.uk; www.ideas.repec.org; www.independent.co.uk

📚 எழுதியவர்:

பேராசிரியர் பு.அன்பழகன்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *