பிப்ரவரி 13 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ராய் ஹாரோட் (Economist Roy Harrod Article in Tamil) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

பிப்ரவரி 13 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ராய் ஹாரோட் – பேராசிரியர் பு.அன்பழகன்

ராய் ஹாரோட் (Roy Harrod) பிப்ரவரி 13 1900இல் பிறந்து மார்ச் 9, 1978இல் மறைந்த பிரித்தானிய பொருளாதார அறிஞரான இவர் பொருளாதார வளர்ச்சி இயக்கம் மற்றும் பேரியல் பொருளாதார ஆய்விற்கான முன்னோடியாக இருந்தார். அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஜான் மேனார்ட் கீன்ஸின் மாணவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹாரோட் நிதி மற்றும் பணம் பற்றிய ஆய்வின் விரிவாக்கத்திற்கு முக்கிய பங்கினை ஆற்றியுள்ளார். அவர் கீன்ஸ் மற்றும் விஸ்கவுண்ட் செர்வெல்லின் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றாசிரியராகவும் இருந்தார்.

1930கள் மற்றும் 1940களில், அவரால் வழங்கிய பொருளாதார வளர்ச்சி இயக்கம் என்பதில் சமநிலை வளர்ச்சி விகிதம் பற்றிய விளக்கத்திற்கு அளவு சார்ந்த ஆய்வினைக் காட்டிலும் அதனைத் தீர்மானிக்கும் காரணிகளை நோக்கியதாக இருந்தது. கீன்ஸின் வருமான நிர்ணயக் கோட்பாட்டினை அடிப்படையில் ஹாரோட் கட்டமைத்தார். எவ்ஸி டோமரும் தன்னிச்சையாக பணியாற்றி உருவாக்கிய மாதிரியுடன் சேர்த்து அதனை ஹாரோட்-டோமர் மாதிரி என்று அழைக்கப்படுகிறது. ஹாரோட்டின் மாதிரியின் முழு விளக்கத்தையும் தனது புத்தகமான An Essay in Dynamic Theory என்பதில் விளக்கியுள்ளார்.

ஹாரோட் உத்தரவாத வளர்ச்சி, இயற்கை வளர்ச்சி மற்றும் உண்மையான வளர்ச்சி ஆகியவற்றின் கருத்துக்களை அறிமுகப்படுத்தினார். உத்தரவாத வளர்ச்சி விகிதம் என்பது அனைத்து சேமிப்புகளும் முதலீட்டில் உறிஞ்சப்படும் வளர்ச்சி விகிதமாகும். இயற்கை வளர்ச்சி விகிதம் என்பது முழு வேலைவாய்ப்பு பராமரிக்கத் தேவையான விகிதமாகும். தொழிலாளர் ஆற்றல் ஆண்டுக்கு 2% வளர்ச்சியடைந்தால், முழு வேலைவாய்ப்பு பராமரிக்க, பொருளாதாரத்தின் ஆண்டு வளர்ச்சி விகிதம் 2% ஆக இருக்க வேண்டும்.

இயற்கை வளர்ச்சி விகிதம் தொழிலாளர் ஆற்றல் வளர்ச்சியால் தீர்மானிக்கப்படுகிறது. இயற்கை வளர்ச்சியும், உண்மையான வளர்ச்சியும் சமமாக இருக்க எந்தவித காரணமும் இல்லை, எனவே பொருளாதாரம் முழு வேலைவாய்ப்பு அடைய எந்த உள்ளார்ந்த போக்கும் இல்லை என்று விளக்குகிறார். பன்னாட்டு வர்த்தகம் மற்றும் நிறைவற்ற போட்டிக்கு அவர் அளித்த பங்களிப்புகளும் பிற்காலத்தில் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. பொருளாதார கொள்கையில் அவரது படைப்புகளும் குறிப்பிடத்தக்கவையாக காணப்படுகிறது.

ஆதாரம்: www.britannica.com; www.econlib.org; www.hetwebsite.net

📚 எழுதியவர்:

பேராசிரியர் பு.அன்பழகன்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *