கெவின் லாங் (Kevin Lang) பிப்ரவரி 16, 1955இல் கனடாவில் பிறந்த அமெரிக்கப் பொருளியல் அறிஞர் ஆவார். அவரது படைப்புகள் தொழிலாளர் ஆராய்ச்சி, கல்வியியல் பொருளாதாரம் பேதம் காட்டல், குடியேற்றம், மொழி சார்ந்த சிக்கல்கள் போன்றவற்றை சார்ந்ததாக உள்ளன. வறுமை மற்றும் பேதம் காட்டுதலில் அவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும், தொழிலாளர் பொருளாதாரத்தில் 100க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.
தொழிலாளர் பொருளாதாரத்தில், தொழிலாளர் சந்தை, குறைந்தபட்ச கூலி, புலம் பெயர்வு, சமத்துவமின்மை, வறுமை, பேதம் காட்டல், கல்விக் கொள்கை போன்றவை உள்ளடக்கங்களாக உள்ளன. 2007இல் அவர் வெளியிட்ட Poverty and Discrimination என்ற புத்தகம் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றது. வறுமையை வரையறுப்பது பொதுவாகவே ஒரு சவாலான பிரச்சனையாகும், லாங் வறுமையைப் பற்றி வரையறை செய்யும்போது, “சமூகத்தில் பங்கேற்பு” என்ற சொற்றொடரை பயன்படுத்துகிறார்.
ஒரு நபருக்கு போதுமான உணவு, உடை, தங்குமிடம் இருக்க முடியும், ஆனால் பெரும்பாலான அமெரிக்காவில் இன்னும் பொருளாதார நோக்கில் இவை முழுமையானதாக உணரவில்லை என்று கூறுகிறார். குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவது வறுமையை ஒழிக்காது என்று சொல்ல முடியாது. ஆனால் இதனைச் செய்தாக வேண்டும் என்றார். வறுமை எதிர்ப்புக் கொள்கைகள் பல “மழுங்கிய கருவிகள்” என்றும், வறுமை ஒப்பீட்டளவில் பலவீனமான அல்லது நிச்சயமற்ற தாக்கங்களைக் கொண்டவை என்றும் லாங்கின் கருதுகிறார். வறுமை மற்றும் பேதம் காட்டுதல் போன்ற முக்கியப் பிரச்சினைகளில் லாங்கின் ஆய்வானது சமூக அறிவியலில் சிறந்தது விளங்குகிறது.
தொழிலாளர் சந்தை குறித்த ஆராய்ச்சியில் லாங், தொழிலாளர்கள் அதிக கூலியுடைய முதன்மைத்துறைக்கும் குறைந்த கூலியுடைய இரண்டாம் நிலைத் துறைக்கும் ஏற்படுகின்ற புலம்பெயர்வினைப் பற்றி விவாதித்துள்ளார். இரண்டாம் நிலைச் சந்தையில் தொழிலாளர்கள் முதன்மைச் சந்தையினை நோக்கிச் செல்ல தடைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்கிறார். பாரம்பரிய கூலி கட்டமைப்பு, ஒழுங்கற்ற தகவல் பரிமாற்றம், திரும்பப் பெறும் வருவாய் போன்றவை தொழிலாளர் சந்தையினைப் பாதிக்கும் காரணிகளாகும்.
லாங் தற்போது பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் பேராசிரியராக உள்ளார், அங்கு அவர் 2005 முதல் 2009 வரை துறைத் தலைவராகப் பணியாற்றினார். அவர் தொழிலாளர்-பொருளாதார வல்லுநர்கள் சங்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக உள்ளார். மேலும் அவர் தேசிய பொருளாதார ஆராய்ச்சி பணியகம் மற்றும் புலம்பெயர்வு ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு மையத்தின் (யுனிவர்சிட்டி கல்லூரி, லண்டன்) ஆராய்ச்சியாளராகவும், தொழிலாளர் ஆய்வு நிறுவனத்தின் (பான்) ஆராய்ச்சி உறுப்பினராகவும், வறுமை மற்றும் சமத்துவமின்மை ஆய்வு மையத்தின் (ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம்) உறுப்பினராகவும் உள்ளார். அவர் பல ஆண்டுகளாகக் கனடாவின் வேலைவாய்ப்பு ஆராய்ச்சி மன்றத்தின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக உள்ளார்.
ஆதாரம்: www.bu.edu; www.iza.org; www.econlib.org
📚 எழுதியவர்:

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
