கோஸ்டாஸ் அஸாரியாடிஸ் (Costas Azariadis) பிப்ரவரி 17, 1943இல் பிறந்த கிரேக்கப் பேரியல் பொருளாதார அறிஞரான இவர் தொழிலாளர் சந்தை, வணிக சுழற்சி, பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாடு உள்ளிட்ட தலைப்புகளில் தனது பங்களிப்பினை அளித்துள்ளார்.
அஸாரியாடிஸ் பல சமநிலை மற்றும் நிலைத்த கொள்கை, பொருளாதார வளர்ச்சியின் இயக்கவியல் மற்றும் இயக்க பொது சமநிலையில் நிறைகுறை நிதி சந்தைகளின் பங்கு ஆகியவற்றில் அவருடைய ஆய்வுப் பணிகள் கவனம் பெற்றிருந்தது. அஸாரியாடிஸின் பிரவுன் பல்கலைக்கழகத்திலும் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
Implicit contract theory (மறைமுக ஒப்பந்தக் கோட்பாட்டின்) கருத்தை அஸாரியாடிஸ் உருவாக்கினார். மறைமுக ஒப்பந்தம் என்பது இரண்டு குழுக்களிடையே எதிர்காலத்தில் பொருள் அல்லது சேவைகள் மாற்றிக் கொள்வது பற்றிய நீண்ட காலத்திற்கான ஒப்பந்தத்தை முன்வந்து, சுயமாக நடைமுறைபடுத்துவதைக் குறிப்பதாகும்.
அஸாரியாடிஸ் வறுமை சுழல் பற்றி விளக்கியுள்ளார், வறுமையானது தொன்றுதொட்டு காணப்படுவதும். தலைமுறையினை அடிப்படையில் வருவதாகும் என்கிறார். வெளிப்புற தலையீட்டினால் மட்டுமே இதனைக் குறைக்கமுடியும் என்கிறார்.
கூலியைப் பற்றிக் குறிப்பிடுகையில், நிறுவனத்தின் ஊதிய இறுக்கத் தன்மையானது (நெகிழ்வற்ற நிலை) தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் இடர்களுக்கு எதிராகக் காப்பீடு செய்யும் ஒரு செய்முறையையே குறிக்கும் என்றார். தொழிலாளர் இடர் காப்பீட்டில் கூலியானது எந்த பங்கையும் வகிக்காது என்பதுடன் முழு வேலைவாய்ப்பினையும் உடன் அடையமுடியாது என்றார்.
ஆதாரம்: www.sites.wustl.edu; www.cambridge.org; www.hellenicaworld.com
📚 எழுதியவர்:

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

