ஜான் டி வான் கிராஃப் (Jan de Van Graaff) பிப்ரவரி 19, 1928இல் பிறந்து ஜனவரி 6, 2015இல் மறைந்த தென்னாப்பிரிக்க நலப் பொருளாதார அறிஞர் ஆவார். நலன்சார் பொருளாதாரத்தைப் பற்றி தனது 22 வயதில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வறிக்கையில் எழுதினார், சமத்துவத்திற்கும் தேசிய வருமானத்திற்கும் இடையில் பெறப்படும் சமநிலை உறவினைப் பற்றி வெளியிட்ட முதல் பொருளாதார அறிஞராக கிராஃப் திகழ்கிறார். இது சமூக நல சார்பினை நிறுவுவதற்கானதாக உள்ளது, கிராஃபின் கோட்பாடுகள் 1950களிலிருந்து பொருளாதார தளத்தில் முக்கியப் பங்கினை வகிக்கிறது.
பரேட்டோ செயல்திறன் (Pareto efficiency criterion) அளவுகோலுக்கு அப்பாற்பட்ட ஒரு பொருளாதாரத்தின் நல்வாழ்வை மதிப்பிடுவதற்கான ஒரு நடவடிக்கையை அவர் உருவாக்கினார். அதன்படி, இருப்பில் உள்ள கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களையும் பயன்படுத்தும் வகையில் ஒரு பொருளாதாரம் திறமையாக இயங்கினாலும், இது மிகவும் விரும்பப்படும் பகிர்வுடன் ஒத்துப்போகாது என்பதாகும். கிராஃப்பின் ஆராய்ச்சியில், சாத்தியமான மற்றும் திறனான சமூக நலனைத் தெளிவுபடுத்தினார். இதுபோல் தற்போதைய மற்றும் எதிர்கால நுகர்வு மற்றும் முதலீட்டிற்கு இடையே முடிவுகளை எடுத்தல் பற்றியும் விளக்கியுள்ளார். குறியீட்டு எண் கட்டமைப்பதில் ஏற்படும் சிக்கல்களை தீர்ப்பதற்கு சமூக வருமானம், உகந்த வரியினை நிர்ணயித்தல் மற்றும் கட்டண நிலைகள் வழியாக போக்கலாம் என்று தனது ஆய்வின் வழியாக நிரூபித்தார்.
ஆதாரம்: www.kids.kiddle.co; www.res.org.uk; www.timeslive-co-za.cdn
📚 எழுதியவர்:

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

