கிறிஸ்டோபர் ஏ. பிஸ்ஸாரைட்ஸ் (Christopher A.Pissarides) பிப்ரவரி 20, 1948இல் பிறந்த ஒரு பிரித்தானிய-சைப்ரஸ் பொருளாதார நிபுணர் ஆவார், அவர் பீட்டர் ஏ. டயமண்ட் மற்றும் டேல் டி. மோர்டென்சன் ஆகியோருடன் இணைந்து சந்தைகளைப் பகுப்பாய்வு செய்ததற்காக 2010ஆம் ஆண்டு பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசை பெற்றார், கிறிஸ்டோபர் தொழிலாளர் சந்தைகளின் பொருளாதாரம், பணவியல் மற்றும் நிதிக் கொள்கை, பொருளாதார வளர்ச்சி மற்றும் கட்டமைப்பு மாற்றம் போன்றவற்றில் வல்லுநராக அறியப்படுகிறார்.
வேலையில்லாதவர்களின் தேடல் செயல்பாடுகள், நிறுவனங்கள் பணிக்கான ஆளெடுப்பு மற்றும் ஊதியத்தை நிர்ணயிக்கும் முறைகள், பொருளாதாரக் கொள்கைகள், விதிமுறைகளின் விளைவுகள் ஆகியவற்றை மூன்று நபர்களால் (கிறிஸ்டோபர் ஏ. பிஸ்ஸாரைட்ஸ், பீட்டர் ஏ. டயமண்ட், டேல் டி. மோர்டென்சன்) கூட்டாக உருவாக்கப்பட்ட கோட்பாட்டுக் கட்டமைப்பினை, தொழிலாளர் சந்தை பகுப்பாய்வில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.
வேலையின்மை, வேலை காலியிடங்கள், நடைமுறையில் உள்ள உண்மையான ஊதியங்களைப் பற்றிய ஒரு கோட்பாட்டுப் பகுப்பாய்வை பிஸ்ஸாரைட்ஸ் மேற்கொண்டார், இவ் ஆய்வு ஒரு முன்னேடியானதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, வேலையில்லாத நபர்கள் தீவிரமாக வேலை தேடுபவர்களுக்கு நிறுவனங்கள் அதிக அளவிற்கு வேலைகளை வழங்க முன்வரும்போது, வேலைகள் வழங்கப்படுவது எளிதாகிவிடுகிறது என்பதை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
ஆதாரம்: www.britannica.com; www.nobelprize.org; www.iza.org
📚 எழுதியவர்:

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
