பிப்ரவரி 21 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- அபிஜித் பானர்ஜி (Economist Abhijit Banerjee Article in Tamil) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

பிப்ரவரி 21 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- அபிஜித் பானர்ஜி – பேராசிரியர் பு.அன்பழகன்

அபிஜித் பானர்ஜி (Abhijit Banerjee) பிப்ரவரி 21, 1961இல் பிறந்த இந்திய வம்சாவளி அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார், இவர் எஸ்தர் டுஃப்லோ, மைக்கேல் க்ரீமருடன் சேர்ந்து, உலகளாவிய வறுமையை ஒழிப்பதற்கான ஒரு புதுமையான பரிசோதனை அணுகுமுறையை உருவாக்கியதற்காக 2019ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார்.

பானர்ஜி, டுஃப்லோ, க்ரீமர், ஆகியோர் இணைந்து பணியாற்றி, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உடைய நாடுகளில் வறுமைக்கான காரணங்களில் ஒப்பீட்டளவில் சிறிய மற்றும் குறிப்பிட்ட பிரச்சினைகளை இனம்கண்டு 20 ஆண்டுகளுக்கு மேலுள்ள கள நிலவரத்தின்படி ஆராய்ந்து சோதனைகளை கொண்டு அதற்குரிய தகுந்த தீர்வுகளைக் கண்டறிந்தனர்.

பானர்ஜி, டஃப்லோ மற்றும் கிரெமர் ஆகியோர் கல்வி, சுகாதாரம், மருத்துவம், கடன் அணுகல், புதிய தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவது உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தங்கள் சோதனை அணுகுமுறையைப் பயன்படுத்தியுள்ளனர். பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிப்பதில் குறுங்கடன் (Microcredit) திட்டங்களின் செயல்திறனைச் சோதிக்க பானர்ஜி மற்றும் டஃப்லோ இந்திய நகரமான ஹைதராபாத்தைக் கள சோதனைக்காக பயன்படுத்தினர்.

இவ் ஆய்வில் முடிவுகள் எதிர்பாராததாக இருந்தது, குறுங்கடன் திட்டங்களால் சிறு வணிக முதலீடு அல்லது லாபத்தைக் கணிசமாக அதிகரிக்கவில்லை, தனிநபர் நுகர்வு, சுகாதாரம், குழந்தைகள் கல்வி போன்ற பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டின் பிற குறி காட்டிகளையும் மேம்படுத்தவில்லை என்பதையும் சுட்டிக்காட்டின. பல குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் உள்ள பிற ஆராய்ச்சியாளர்களால் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இந்த முடிவுகளையே உறுதிப்படுத்தின.

2019 ஆம் ஆண்டு வெளியான Good Economics for Hard Times, என்ற புத்தகத்தில், டஃப்லோவும் பானர்ஜியும் உற்பத்தித்திறன் வளர்ச்சியின் ஒரு பகுதியை “பொருளாதார வல்லுநர்கள் அளவிடக்கூடிய விஷயங்களில் ஏற்படும் மாற்றங்களால் விளக்க முடியாது” என்று ஒப்புக்கொள்கிறார்கள். பானர்ஜி, டஃப்லோ, கிரெமர் ஆகியோரின் சோதனை ஆராய்ச்சி முறைகள் வளர்ச்சி பொருளாதாரத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்துகின்றன என்று நோபல் பரிசுத் தேர்வுக் குழு குறிப்பிடுகிறது. இவர்களின் ஆய்வானது, உலகளாவிய வறுமையை ஒழிப்பதற்கான சிறந்த வழி முறைகளை வழங்கியதால் உலகை வளர்ச்சி நோக்கிய பொருளாதாரமாக மாற்றியுள்ளது.

பானர்ஜி உலகின் தலைசிறந்த ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார் தற்போது உலக அளவில் பொருளாதாரத்தில் அதிக நோபல் பரிசை பெற்றவர்கள் படித்த, பணியாற்றிய MIT (மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம்)இல் பேராசிரியராக பணியாற்றி வருகிறார், Abdul Latif Jameel Poverty Action Lab ஆய்வு மையத்தின் நிறுவனர் ஆவார்.

ஆதாரம்: www.britannica.com; www.nobelprize.org; www.imf.org

📚 எழுதியவர்:

பேராசிரியர் பு.அன்பழகன்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *