மஹ்பூப் உல்-ஹக் (Mahbub ul Haq) பிப்ரவரி 22, 1934இல் பிறந்து ஜூலை 16, 1998இல் மறைந்த பாகிஸ்தானியப் பொருளாதார அறிஞரான இவர் சர்வதேச வளர்ச்சி கோட்பாட்டை அளித்தார். மனித வளர்ச்சி என்ற கருத்தை உருவாக்கிய முன்னோடியாக மஹ்பூப் உல் ஹக் கருதப்படுகிறார். பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்குவதற்கான மனித மேம்பாட்டுத் தத்துவத்தை அவர் வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல், மனித வளர்ச்சியுடன் தொடர்புடைய பொருளாதார வளர்ச்சியினை அளவிடுவதற்கான புள்ளிவிவர அளவீட்டையும் உலகிற்கு வழங்கினார்.
ஹக் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (GDP) எதிரான கோட்பாட்டாளராவார். இது எந்த அளவிற்கு சாத்தியமானது என்பதை ஆராய்வது முக்கியமானதாகும். முதலாவதாக, வளர்ச்சியினைப் பற்றி ஒரு குறி காட்டியாக மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பயன்படுத்துவதில் அவர் மிகவும் சந்தேகம் கொண்டிருந்தார். இரண்டாவதாக, மொத்த உள்நாட்டு உற்பத்தி உருவாகும் முறை சரியாக இல்லாமல் இருப்பதால் அதனை அதிகமாக நம்ப முடியாது என ஹக்கின் குறிப்பிடுகிறார்.
நாட்டின் வளர்ச்சி பற்றிய கவனம் தேசிய வருமான வளர்ச்சியிலிருந்து மக்களின் நல்வாழ்வுக்கு நோக்கி மாறியுள்ளது, இதனை மனித மேம்பாட்டுக் குறியீடு (HDI) மூலம் முன்னேற்றம் கணிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தால் 1990 முதல் ஹக்கால் தொடங்கப்பட்ட மனிதவள மேம்பாட்டு அறிக்கைகளின் தொடரானது ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகிறது, கொள்கை வகுப்பாளர்கள், பொது ஊழியர்கள் மற்றும் செய்தி ஊடகங்கள் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் விதத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மனிதவள மேம்பாட்டு அறிக்கைகள் மனித வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்கும் பல்வேறு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் அம்சங்கள் குறித்த பல்வேறு தகவல்களைக் கொண்டுள்ளன.
கடுமையான வேறுபாடுகள் தீர்க்கப்படுதல், வளமான கலாச்சாரம், பழக்கவழக்கம், வர்த்தகம் மற்றும் கருத்துக்களின் சுதந்திரம் ஊக்குவிக்கப்பட்டால், தெற்காசியா ஆசியாவின் அடுத்த பொருளாதார முன்னோடியாக மாறும் என்று ஹக் உறுதியாக நம்பினார். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அமைதிக்காகவும், பாலினம், வருமானம், இருப்பிடம் அல்லது பிற காரணிகளைப் பொருட்படுத்தாமல் அனைத்து மக்களுக்கும் கல்வி மற்றும் சுகாதாரத்தில் முதலீடுகளுக்காகவும் அவர் குரல் தொடர்ந்து ஒலித்திருந்தது. தெற்காசிய உரிமையியல் சமூகங்களைப் பயிற்சி மற்றும் வளங்களுடன் மேம்படுத்தவும், தெற்காசியாவில் ஒருங்கிணைந்த பொருளாதாரத்தை நோக்கிச் செல்லவும் அவர் பணியாற்றினார்.
ஆதாரம்: www.blog.oup.com; www.independent.co.uk
📚 எழுதியவர்:

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

