பிப்ரவரி 24 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஆண்ட்ரே குண்டர் ஃபிராங்க் (Economist Andre Gunder Frank Article in Tamil) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

பிப்ரவரி 24 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஆண்ட்ரே குண்டர் ஃபிராங்க் – பேராசிரியர் பு.அன்பழகன்

ஆண்ட்ரே குண்டர் ஃபிராங்க் (Andre gunder Frank) பிப்ரவரி 24, 1929இல் பிறந்து ஏப்ரல் 25, 2005இல் மறைந்த ஜெர்மன்-அமெரிக்கச் சமூகவியலாளர் மற்றும் பொருளாதார வரலாற்றாசிரியர் ஆவார். ஆண்ட்ரே குண்டர் ஃபிராங்க் ஒரு இடதுசாரி பொருளாதார நிபுணர் மற்றும் அரசியல் ஆர்வலர் ஆவார், அவர் பொருளாதாரம், சமூக மற்றும் அரசியல் வரலாறு, மேம்பாட்டு ஆய்வுகள், சர்வதேச உறவுகள் ஆகியவற்றைப் பற்றி எழுதினார்.

வளரும் நாடுகள் தொடர்பான அவரது பல பகுப்பாய்வுகள் மற்றும் கணிப்புகள் துல்லியமாக நிரூபிக்கப்பட்டுள்ளன, இதில் வெளிநாட்டு முதலீடு மற்றும் நிர்வகிக்க முடியாத கடன் நிலை காணப்பட்டாலும் வறுமை நிலைத்திருப்பது, அத்துடன் வளரும் நாடுகளில் முதலாளித்துவத்தின் தோல்விகள் ஆகியவை அடங்கும்.

ஃபிராங்கின் முக்கிய பங்களிப்பாக ‘சார்பு கோட்பாடு’ திகழ்கிறது. சார்பு கோட்பாட்டின்படி, குறைந்த வளர்ச்சியுடைய நாடுகளில் சமூகங்கள் வளர்ச்சியடையாததற்குக் காரணம் மேற்கத்திய நாடுகள் வேண்டுமென்றே இந்த நாடுகளின் சரியான வளர்ச்சிக்கான பங்கேற்பினை அளிக்கவில்லை என்று குறிப்பிட்டார். வளர்ந்த நாடுகள் ஏழ்மையான நாடுகளின் மூலப்பொருட்கள் மற்றும் உழைப்பினைச் சுரண்டி அவற்றை பயன்படுத்தி செல்வந்தர்களாகின்றர் என்றார்.

இந்த சுரண்டல் உறவானது வரலாறு முழுவதும் தெளிவாகத் தெரிந்தது என்றும் இருபதாம் நூற்றாண்டு வரை நீடித்தது என்றும், மேற்கத்திய நாடுகள் சர்வதேச வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்துதல், பெரிய பன்னாட்டு நிறுவனங்களின் தோற்றம் மற்றும் மேற்கத்திய உதவியைக் குறைவாக வளர்ந்த நாடுகள் நம்பியிருத்தல் ஆகியவற்றின் மூலம் பராமரிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

மூன்றாம் உலக நாடுகள் உலக பொருளாதார நெருக்கடிக்கான காரணமாக உள்ளது என்று கணித்தார். ஏற்றுமதி அதிகரிப்பதன் வாயிலாகச் சர்வாதிகார ஆட்சி உருவாகும் என்றும் இதனால் உலகளாவிய மந்தம் ஏற்பட்டு கடன் நெருக்கடி உண்டாகும் என்றார். இது தொடர்பாக உலகமயமாக்கலின் போக்கு பற்றி அவர் தொடர்ந்து பகுப்பாய்வு செய்தார்.

இதில் உற்பத்தி முதலீட்டை நிதி ஊகங்களால் மாற்றுவது மற்றும் அதன் விளைவாக உலகப் பொருளாதார அமைப்பிற்குள் பிராந்தியங்களுக்கும் நாடுகளுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வுகள் அதிகரிப்பது ஆகியவை அடங்கும். நெருக்கடிகள் அதிகரித்து வரும் சூழலானது சந்தைப்படுத்தல் மற்றும் தனியார்மயமாக்கல் அடிப்படை வறுமை, சமத்துவமின்மை மற்றும் புறக்கணிக்கப்படுதல் ஆகியவற்றை மேலும் அதிகரிக்கும் என்றும், ஜனநாயக அரசியல் கலாச்சாரத்தின் மீது மிகப்பெரிய அழுத்தங்களுக்கு வழிவகுக்கும் என்றும், தேசிய அரசின் இயலாமை மற்றும் உண்மையான மாற்றத்தை வழங்க விருப்பமின்மையால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப புதிய முற்போக்கான மற்றும் பிற்போக்குத்தனமான சமூக இயக்கங்களின் தவிர்க்க முடியாத எழுச்சிக்கு வழிவகுக்கும் என்றும் அவர் வாதிட்டார். 2004இல் பொருளாதார அரசியல் வார இதழில் (EPW) வெளியிடப்பட்ட “இந்தியாவின் பொருளாதார வரலாறு” பற்றியும் பிராங்க் எழுதியுள்ளார்.

ஆதாரம்: www.ncca.ie; www.theguardian.com; www.rrojasdatabank.info; www.networkideas.org

📚 எழுதியவர்:

பேராசிரியர் பு.அன்பழகன்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *