1. பரேகுன்னல் ஜோசப் தாமஸ் (Parekunnel Joseph Thomas) (பி.ஜே. தாமஸ் என்று அழைக்கப்படுகிறார்), பிப்ரவரி 25, 1895இல் பிறந்து ஆகஸ்ட் 16, 1965இல் மறைந்த இந்தியப் பொருளாதார அறிஞர் ஆவார். அவர் சிலோன் பல்கலைக்கழகம் (1924–1927) மற்றும் சென்னை பல்கலைக்கழகம் (1927–1942) ஆகியவற்றில் பேராசிரியராக பணியாற்றினார். பிரிட்டிஷ் இந்தியா (1942-1947) மற்றும் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான சுதந்திர இந்தியா ஆகிய இரு அரசாங்கங்களிலும் பொருளாதார ஆலோசகராக பணியாற்றினார். 1945இல் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற தொடக்க அமர்வில் ஐக்கிய நாடுகள் சாசனத்தில் கையெழுத்திடுவதில் அவர் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
பொது விற்பனை வரி, மக்கள் தொகை வளர்ச்சி, கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதம், நில சீர்திருத்தங்கள், பசுமைப் புரட்சி, உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கிராமப்புற கடன் போன்ற துறைகளில் அவரது சிறந்த படைப்புகளை வழங்கியுள்ளார். மிகவும் பிரபலமான MGNREGA (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் -100 நாள் வேலைவாய்ப்பு) முதலில் தாமஸின் சிந்தனையில் உருவானது, 1930களின் முற்பகுதியில் தனது படைப்புகளில் ஒன்றில் அதை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தாமஸ், பன்னாட்டு பண நிதியம் (IMF) மற்றும் உலக வங்கி (World Bank) உருப்பெறுவதற்கான பிரிட்டன் வூட்ஸ் கருத்தரங்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அவர் சென்னை சட்டமன்ற உறுப்பினராகவும் பின்னர் இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையின் (மாநிலங்களவை) உறுப்பினராகவும் இருந்தார்.
ஆதாரம்: www.peoplepill.com; www.academicfoundation.org
2. வில்லியம் ஜேம்ஸ் ஆஷ்லே (William James Ashley) பிப்ரவரி 25, 1860இல் பிறந்து ஜூலை 23, 1927இல் மறைந்த பிரித்தானியப் பொருளாதார வரலாற்றாசிரியர் ஆவார். ஆஷ்லே, தொன்மை மற்றும் புதிய தொன்மை கோட்பாடுகளின் வாதங்களைக் கடுமையாக எதிர்த்தார். தலையிடாக் கொள்கைக்கு எதிர்ப்பாளராக இருந்த அவர், ஏகாதிபத்தியம் மற்றும் அரசு-தொழில்-தொழிலாளர் கார்ப்பரேட்டிசத்தின் ஆதரவாளராகவும் இருந்தார். 1892ஆம் ஆண்டில், அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதார வரலாற்றின் முதல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். இங்கிலாந்தின் பொருளாதார அமைப்பு குறித்த அவரது 1914ஆம் ஆண்டு படைப்பு ஒரு உன்னதமான பாடப்புத்தகமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம்: www.hetwebsite.net; www.encyclopedia.com
📚 எழுதியவர்:

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
