பிப்ரவரி 26 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஆல்பர்ட் வின்செமியஸ் (Economist Albert Winsemius Article in Tamil) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

பிப்ரவரி 26 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஆல்பர்ட் வின்செமியஸ் – பேராசிரியர் பு.அன்பழகன்

ஆல்பர்ட் வின்செமியஸ் (Albert Winsemius) பிப்ரவரி 26, 1910இல் பிறந்து டிசம்பர் 4, 1996இல் மறைந்த டச்சு பொருளாதார அறிஞர் ஆவார். வின்செமியஸ் அக்டோபர் 5, 1960 அன்று ஐக்கிய நாடுகளின் ஆய்வுப் பணிக் குழுவின் தலைவராகச் சிங்கப்பூருக்கு சென்றார். தொழில்துறை விரிவாக்கத்திற்கான சிங்கப்பூர் தீவின் சாத்தியக்கூறுகள் குறித்து மூன்று மாத தங்கி ஆய்வை மேற்கொண்டார்.

1961 மற்றும் 1984க்கு இடைப்பட்ட காலத்தில் சிங்கப்பூர் அரசாங்கத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக வின்செமியஸ் பணியாற்றினார். மலாயாவிலிருந்து சிங்கப்பூர் பிரிந்ததன் விளைவாகவும், இந்தோனேசியாவுடனான மலாயாவின் மோதலாலும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டபோது, சிங்கப்பூர் இந்தோனேசியாவுடனான பண்டமாற்று வர்த்தகத்தை மீண்டும் திறந்து மலேசியாவுடன் ஒரு பொதுவான சந்தையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.

சிங்கப்பூர் அதிக வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க வேண்டும், மேற்குலக நாடுகளுடனான அதன் உறவுகளை வலுப்படுத்த வேண்டும், இதன் மூலம் அவர்களின் சந்தைகளை அணுக வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வரிகளிலிருந்து விடுபட்ட ஒரு சுதந்திர வர்த்தக நாடாகச் சிங்கப்பூர் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளுமாறு வின்செமியஸ் அறிவுறுத்தினார்.

அரசாங்க நிதியைப் பயன்படுத்தி அதிக தொழிற்சாலைகளை உருவாக்குவதற்குப் பதிலாக, ஒரு புதிய பல்கலைக்கழகம் அல்லது தொழில்நுட்ப நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்யுமாறு அவர் அரசாங்கத்திற்கு அறிவுறுத்தினார். இவ்வாறு சிங்கப்பூரின் பொருளாதாரத்திற்கு இவரின் பெரும் பங்களிப்பினை அளித்துள்ளார்.

ஆதாரம்: www.nlb.gov.sg; www.pmo.gov.sg; www.universiteitleiden.nl

📚 எழுதியவர்:

பேராசிரியர் பு.அன்பழகன்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *