இர்விங் ஃபிஷர் (Irving Fisher) பிப்ரவரி 27, 1867இல் பிறந்து ஏப்ரல் 29, 1947இல் மறைந்த மூலதனக் கோட்பாட்டினை வழங்கிய ஒரு புகழ்பெற்ற அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார். நவீன பணவியல் கோட்பாட்டின் வளர்ச்சிக்கும் அவருடைய பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். அவரது அனைத்து கோட்பாடுகளிலும் அடிப்படையில் கணிதத்தை பயன்படுத்தியிருந்தார். ஃபிஷரின் பணவியல் கோட்பாட்டில் பணம் மற்றும் விலையினைப் பற்றிய கொள்கைகள் வெளிப்படுத்தியுள்ளார். அவர் தனது கோட்பாட்டை MV = PT என்ற பரிமாற்ற சமன்பாட்டின் அடிப்படையில் வகுத்தார்.
The Purchasing Power of Money (1911) என்ற தனது புத்தகத்தில், பண அளிப்பில் ஏற்படும் மாற்றங்களுக்கும் பொதுவான விலை மட்டத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கும் இடையிலான உறவின் நவீன கருத்தை அவர் உருவாக்கினார். அவர் தனது ஆர்வக் கோட்பாட்டை Impatience and Opportunity (பொறுமையின்மை மற்றும் வாய்ப்பு) கோட்பாடு என்று பெயரிட்டார். வட்டி விகிதமானது மக்கள் கைகளில் இருக்கும் மூலதனத்திற்கும் முதலீட்டு வாய்ப்பிற்கும் (தற்போது செய்யப்படும் முதலீடானது எதிர்காலத்தில் அதிக அளவில் வருமானத்தை உருவாக்கும்) உள்ள தொடர்புகளிலிருந்து விளைவதாகும் என்று ஃபிஷர் குறிப்பிடுகிறார். ஃபிஷர், மூலதனம் என்பது ஒரு சொத்து என்றும் அது காலப்போக்கில் வருமான ஓட்டத்தை உருவாக்கும் என்றார். வருமான ஓட்டம் என்பது மூலதன இருப்பிலிருந்து வேறுபட்டது என்கிறார். இருப்பினும் வட்டி விகிதம் இரண்டையும் இணைக்கிறது.
குறியீட்டு எண்கள், கோட்பாடுகள் மற்றும் புள்ளிவிவரங்களைக் கையாள்வது போன்றவற்றில் எப்பொழுதும் சிறந்த நிபுணராக அறியப்படுகிறார், பல நாடுகளிலும், அனைத்து காலங்களிலும் இதனபை் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 1923 முதல் 1936 வரை, அவரது சொந்த குறியீட்டு எண் நிறுவனம் உலகம் முழுவதும் தரவுகள் சேகரிக்கப்பட்டு பல்வேறு வகையான விலைக் குறியீடுகளை உருவாக்கி வெளியிட்டது. ஃபிஷர் தொடர்புக் கெழு, ஒட்டுறவு, பிற புள்ளிவிவர முறைகள், பொருளாதார அளவியல் போன்றவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தார், பின்னர் இது தொடர்ந்து பரவலாக இன்றும் பயன்படுத்துவது வழக்கமாகிவிட்டது.
உண்மையான மற்றும் பெயரளவு வட்டி விகிதங்களைத் தெளிவாக வேறுபடுத்திய முதல் பொருளாதார நிபுணரும் ஃபிஷர் ஆவார். உண்மையான வட்டி விகிதம் பெயரளவு வட்டி விகிதத்திலிருந்து எதிர்பார்க்கப்படும் பணவீக்க விகிதத்தைக் கழிப்பதன் மூலம் சமம் என்று அவர் சுட்டிக்காட்டினார். அவர் 1930இல் பொருளாதார அளவியல் சங்கத்தின் நிறுவனர் மற்றும் 1918இல் அமெரிக்கப் பொருளாதார சங்கத்தின் தலைவராக இருந்தார். அவரது பொருளாதார ஆய்வு முடிவுகள், கோட்பாடுகள் மற்றும் தரவுகளின் அடிப்படையிலான பரிந்துரைகள் உலகத்தை எவ்வாறு மேம்படுத்துவது அல்லது உலகின் நிலை குறித்த ஆய்வுத் தளத்தில் தொடர்ந்து ஈடுபட்டார். அவருடைய வாழ்நாள்களுக்கு பின் ஃபிஷர் சமன்பாடு, ஃபிஷர் அனுமானம், ஃபிஷர் பிரிப்பு தேற்றம் உள்ளிட்ட பல சொற்கள் ஆய்வுத் தளங்கள், கல்வியலில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆதாரம்: www.britannica.com; www.econlib.org; www.carleton.ca; www.hetwebsite.net; www.newworldencyclopedia.org
📚 எழுதியவர்:

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
