சமூக மாற்றத்தின் கருவியாக சினிமாவை திறமையாகப் பயன்படுத்திய திரைப்பட இயக்குனர் ஷியாம் பெனகல் (Shyam Benegal) - Indian film director -https://bookday.in/

சமூக மாற்றத்தின் கருவியாக சினிமாவை திறமையாகப் பயன்படுத்திய ஷியாம் பெனகல்

சமூக மாற்றத்தின் கருவியாக சினிமாவை திறமையாகப் பயன்படுத்திய ஷியாம் பெனகல்

 

ஷியாம் பெனகல் மறைவையொட்டி ப்ரன்ட்லைன் இணையத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையை தழுவி எழுதப்பட்டது
தமிழில்:மோசஸ் பிரபு

ஷியாம் பெனகல் இந்திய சினிமா வரலாற்றில் முக்கியமான பங்களிப்புகளை செய்தவர் 1970கள் மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் அங்கூர், மண்டி மற்றும் மந்தன் போன்ற கிளாசிக் படங்களை இயக்கியதன் மூலம் இந்தி சினிமாவில் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கியவர். இந்திய சினிமாவின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவராக போற்றப்படுபவர். பல ஆண்டுகளாக சிறுநீரக பாதிப்பால் (CHRONIC KIDNEY DISEASE) அவதிப்பட்டு வந்தார் பாதிப்பு தீவிரமடைந்த நிலையில் மும்பையின் வொக்கார்ட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் டிசம்பர்-23 மாலை 6.38 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார், இத்தகவலை அவரது மகள் பியா பெனகல்  ஊடகங்களுக்கு தெரிவித்தார். அவரது மனைவியும் உடன் இருந்தார்.

ஒன்பது நாட்களுக்கு முன்பு தான், அவரது 90 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அவருடன் பல ஆண்டுகளாக இணைந்து பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அவரை வாழ்த்துவதற்காக ஒன்றுகூடினர், இந்நிகழ்வில் நடிகை ஷபானா ஆஸ்மியும் இருந்தார், அவர் 1973 இல் அங்கூர் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமானவர். நசீருதீன் ஷா, ரஜித் கபூர், குல்பூஷன் கர்பண்டா, திவ்யா தத்தா மற்றும் குணால் கபூர் என பல கலைஞர்கள் அவரது பிறந்தநாள் நிகழ்வில் கலந்துகொண்டனர் இவர்களை சந்தித்த ஷியாம் பெனகலின் மகிழ்ச்சியான தருணங்கள் புகைப்படங்களாக ஊடகங்களில் வெளியாகியிருந்தது. அவரது சினிமாவில் சிறந்த பாத்திரங்களை வழங்கிய தங்களது இயக்குனருக்கு கொடுக்கும் இறுதி நன்றி கூறும் நிகழ்வாக இது மாறிவிட்டது.

சமூக மாற்றத்தின் கருவியாக சினிமாவை திறமையாகப் பயன்படுத்திய திரைப்பட இயக்குனர் ஷியாம் பெனகல் (Shyam Benegal) - Indian film director -https://bookday.in/

தனிப்பட்ட விவரங்கள்:

தற்போது தெலுங்கானா எல்லைப்பகுதியில் உள்ள திருமலகிரியில் பிறந்த பெனகல், சிறு வயதிலிருந்து சினிமாவின் தாக்கத்தோடு வளர்ந்தவர். அவரது தந்தை ஒரு புகைப்படக் கலைஞர், குறும்படங்களை எடுத்துள்ளார். திரைப்பட ஜாம்பவான் குரு தத்தின் உறவினரும் ஆவார். பெனகல் ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்பு அவர் ஆசிரியர் தொழிலில் ஈடுபட திட்டமிட்டார், ஆனால் அதற்கு எதிராக முடிவு எடுத்தார். இளைஞனாக இருக்கும் போது பெனகல் (Shyam Benegal) வேலை தேடி மும்பைக்கு குடிபெயர்ந்தார், ஆரம்பத்தில் குரு தத்திற்கு உதவுவது பற்றி யோசித்தார், ஆனால் அவருக்கு வேறு சில யோசனைகள் இருந்ததால் அதை கைவிட்டார். அடுத்து, ஒரு விளம்பர நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். சிறிது காலத்திற்குப் பிறகு, அவரது நிறுவனம் அவரை திரைப்படத் துறையில் பணியாற்றும் சூழலை உருவாக்கி கொடுத்தது. அவர் முழுநேர திரைப்பட இயக்குநராக மாறும் வரை விளம்பரப் படங்களை இயக்கத் தொடங்கினார். அங்கூர் திரைப்படத்தில் அறிமுகமாகும் முன் இந்திய அரசின் திரைப்பட துறைக்காக சில ஆவணப்படங்களையும் இயக்கியிருந்தார்.

பன்முக வடிவங்களில் அவரது திரைப்பயனம்

ஏறக்குறைய ஏழுபது ஆண்டுகால வாழ்க்கையில், பெனகல் (Shyam Benegal) கிராமப்புறத்தில் நிலவும் பிரச்சனைகள், ஒடுக்குமுறையை சந்திக்கும் பெண்கள் மீதான அக்கறைகள் நல்ல நகைச்சுவை சார்ந்த படைப்புகள் மற்றும் காந்தி, நேரு,நேதாஜி உள்ளிட்ட சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் ஆவணப்படங்கள் என பலதரப்பட்ட பிரச்சனைகளை பல்வேறு வடிவங்களில் தனது படைப்பின் வழியாக ஆவணப்படுத்தியுள்ளார்.

அங்கூர்: அவர் இயக்கிய முதல் திரைப்படம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த அங்கூர் திரைப்படம். 1950களில் ஐதராபாத்தில் உண்மையாக நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. ஒரு நிலவுடமையாளர் தலித் பெண்னோடு இணைவது பற்றிய கதை இதை அக்கிராமத்தில் பலரும் எதிர்ப்பார்கள்.

சமூக மாற்றத்தின் கருவியாக சினிமாவை திறமையாகப் பயன்படுத்திய திரைப்பட இயக்குனர் ஷியாம் பெனகல் (Shyam Benegal) - Indian film director -https://bookday.in/

நிலவும் ஜாதிய பாகுபாடுகளை அப்பட்டமாக படம் பிடித்தது இத்திரைப்படம். சினிமா உலகில் மிகவும் பாரட்டப்பட்ட இத்திரைப்படம் மூன்று தேசிய விருதுகளையும் பெற்றது. பிறகு 1975 ஆம் ஆண்டு நிஷாந்த் என்ற படத்தை இயக்கினார் இதுவும் ஜமிந்தாரின் அராஜகத்தை பதிவு செய்யும் படம். தொடர்ந்து அடுத்தடுத்து சமூக பிரச்சனைகளை மையப்படுத்தி திரைப்படங்களை இயக்கினார்.

ஜவஹர்லால் நேருவின் டிஸ்கவரி ஆஃப் இந்தியா (DISCOVERY OF INDIA) என்ற புத்தகத்தை தழுவி “ பாரத் ஏக் கோஜ் “ என்ற படைப்பை 53 பகுதிகளாக எடுத்துள்ளார்.

அரசியலமைப்பை உருவாக்குவது குறித்து தயாரிக்கப்பட்ட “சம்விதான்” (SAMVIDHAAN) என்ற படைப்பை 10 பகுதியாக இயக்கியுள்ளார்.

THE MAKING OF MAHATMA என்று மகாத்மா காந்தி பற்றியும் மற்றும் UNFORGETTEN STORY என்று சுபாஷ் சந்திரபோஸ் பற்றியும் வாழ்க்கை வரலாற்று படங்களையும் எடுத்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு முஜிப் THE MAKING OF A NATION என்ற வாழ்க்கை வரலாற்று படத்தையும் சமீபத்தில் இயக்கியிருந்தார். இரண்டாம் உலக்ப்போரின் போது ரகசிய உளவாளியாக இருந்த நூர் இனாயத் கானின் கதையை படமாக எடுக்க இருந்தார் ஆனால் அது நிறைவேறவில்லை.

சமூக மாற்றத்தின் கருவியாக சினிமாவை திறமையாகப் பயன்படுத்திய திரைப்பட இயக்குனர் ஷியாம் பெனகல் (Shyam Benegal) - Indian film director -https://bookday.in/

1976 ஆம் ஆண்டு வெளிவந்த மந்தன் என்ற சினிமா விஞ்ஞானி வர்கீஸ் குரியன் மூலமாக குஜராத்தில் நடந்த பால் கூட்டுறவு இயக்கத்தில் ஏற்பட்ட நல்ல மாற்றங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இந்த படம் சமீபத்தில் மே மாதம் பிரான்சில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது, இதில் ஸ்மீதா பட்டீல், நசுரதீன் ஷா, கிரிஷ் கர்னாட் ஆகியோர் நடித்திருந்தார்கள். அவர் இயக்கிய பூமிகா, ஜூனூன், சூரஜ் கா சத்வான் கோடா, மம்மோ, சர்தாரி பேகம் மற்றும் ஜுபேதா ஆகியவை இந்தி சினிமாவில் கிளாசிக் படங்களாகக் இன்றும் போற்றப்படுகின்றன பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை உள்ளடக்கியதாக அவரது படைப்புகள் பன்முக வடிவங்களில் இருந்துள்ளது. மேலும் வயதாயிருந்தாலும் தனது திரைப்பயனத்திலிருந்து வெளியேறவில்லை தனது 90 வது பிறந்தநாளில் அவர் கூறியது “நான் தற்போது இரண்டு மூன்று வேலை செய்துகொண்டிருக்கிறேன் அவை அனைத்தும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை. நான் எதை முதலில் உருவாக்குவேன் என்று சொல்வது இப்போதைக்கு கடினம்.

அவை அனைத்தும் பெரிய திரைக்கானவை, ”என்று கூறியிருந்தார் அவர் அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்வதாகவும், டயாலிசிஸ் செய்து வருவதாகவும் கூறினார். “நாம் அனைவரும் வயதாகி விடுகிறோம். நான் பெரிதாக எதையும் செய்யவில்லை. இது ஒரு சிறப்பு நாளாக இருக்கலாம், ஆனால் நான் இதை எனக்காக கொண்டாடவில்லை. இதன் மூலம் உங்களை சந்திக்கும் வாய்ப்பை பெற்றுக்கொள்கிறேன் நான் என் குழுவுடன் அலுவலகத்தில் கேக் மட்டும் வெட்டினேன் என்றார்.

பெனகலின் திரைப்படங்கள் முற்போக்கு அரசியல் சார்பை கொண்டது. வர்க்க வேறுபாடுகள் மற்றும் சாதியப் போராட்டங்கள் பற்றியும், பெண்ணியம் சார்ந்த கருத்துகளை வலியுறுத்தியும், கிராமப்புற மக்களின் பிரச்சனைகள் மற்றும் சமூக இயக்கவியல் பற்றிய கதைகளைச் சொல்வதாகவும் இருந்தது, அவரது படைப்புகளில் சமூகம் அக்கறை கூர்மையாகவும் தீவிரமாகவும் சொல்லப்பட்டிருக்கும் சில படங்களில் நகைச்சுவையாகவும் சொல்லப்பட்டுள்ளது.

1981 ஆம் ஆண்டு கலியுக்(KALIYUG) என்ற படத்தை இயக்கியுள்ளார் இது மகாபாரதத்தின் நவீன கால மறுவடிவம் என்று அழைக்கப்பட்டது, 1977 ஆம் ஆண்டு ஸ்மிதா பாட்டீல் நடித்தி வெளிவந்த பூமிகா என்ற திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. தேவதாசி சமூகத்திலிருந்து வரும் ஒரு பெண் திரைப்பட நட்சத்திரமாக மாறுகிறார் அவள் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றி விவரிக்கும் கதை இது ஏற்கனவே மராத்தியில் புகழ்பெற்ற நாடகமாக வெளிவந்துள்ளது, இந்தப்படம் இரண்டு தேசிய விருதுகளையும் பெற்றது.

சமூக மாற்றத்தின் கருவியாக சினிமாவை திறமையாகப் பயன்படுத்திய திரைப்பட இயக்குனர் ஷியாம் பெனகல் (Shyam Benegal) - Indian film director -https://bookday.in/

1983 ஆம் ஆண்டு வெளிவந்த மண்டி (MANDI) என்ற திரைப்படம் பாலியல் தொழில் விடுதி நடத்தும் ஒரு பெண்ணை மையப்படுத்தியக் கதை அதில் பங்கேற்கும் பெண்களில் பலர் ஆண்களால் அத்தொழிலுக்கு தள்ளப்பட்டவர்கள் அவர்களை அக்கறையோடு கவனித்துக்கொள்ளும் ருக்மணி கதாபாத்திரத்தில் ஷாபான ஆஸ்மி நடித்திருப்பார்.பாலியல் தொழிலாளிகளின் பிரச்சனைகளை பேசிய படங்களில் இது முக்கியமான படம்.

சமூக மாற்றத்தின் கருவியாக சினிமாவை திறமையாகப் பயன்படுத்திய திரைப்பட இயக்குனர் ஷியாம் பெனகல் (Shyam Benegal) - Indian film director -https://bookday.in/

 

2008 ஆம் ஆண்டு ”சஜ்ஜன்பூருக்கு வரவேற்கிறோம்”(welcome to sajjanpur) என்ற படம் நாவல் எழுத்தாளராக விரும்பும் ஒருவர் சந்தர்ப்ப சூழ்நிலையால் கிராமத்தில் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு கடிதம் எழுத துவங்குகிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது கதை இது நகைச்சுவை படமாக எடுத்திருப்பார்..
பெனகல் தனது திரைப்படங்களை “நடுத்தர மக்களின் சினிமா” என்று அழைப்பார்கள் . அப்படி அழைப்பதை அவர் விரும்பவில்லை, மேலும் அவரது படைப்புகளை “புதிய அல்லது மாற்று சினிமா” என்று அழைக்க விரும்பினார். ‘உங்கள் ஒவ்வொரு சமூகச் செயலும் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அது ஒரு அரசியல் செயல்பாடு’,” என்ற கூற்றை அவர் 2022 ஆம் ஆண்டு ஒரு ஊடகத்தின் நேர்காணலின் போது தெரிவித்திருந்தார்.

இந்திய திரை உலகில் ஜாம்பவானாக கருதப்படும் பலர் அவரோடு இணைந்து பணியாற்றியுள்ளனர் மறைந்த நாடக ஆசிரியர் விஜய் டெண்டுல்கர் மந்தன் மற்றும் நிஷாந்த் ஆகிய திரைப்படங்களை எழுதியுள்ளார். மறைந்த இசையமைப்பாளர் வனராஜ் பாட்டியா, ஒளிப்பதிவாளர் கோவிந்த் நிஹலானி மற்றும் சிறந்த நாடக இயக்குனர் சத்யதேவ் துபே ஆகியோர் அவருடன் பல படங்களில் பணியாற்றியுள்ளனர். கிரீஷ் கர்னாட் பூமிகாவுக்கும், ரஸ்கின் பாண்டுக்கு ஜூனூனுக்கும் திரைக்கதை எழுதியுள்ளார்.

பெனகல் தனது சாதனைகளைப் பற்றி பெரிதாக குறிப்பிடமாட்டார். “அற்புதமான காரியங்களைச் செய்தவர்கள் இருக்கிறார்கள். ஒருவர் செய்ததில் தனித்தன்மை என்று எதுவும் இல்லை. நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதைச் செய்கிறீர்கள். இது தனித்துவமானது அல்ல. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதுதான் தனித்தன்மை வாய்ந்தது ” என்பார்.

அஞ்சலிகள்:

ஷியாம் பெனகலின் மறைவையொட்டி இந்திய சினிமா மற்றும் தொலைக்காட்சியின் முக்கிய அத்தியாத்தின் முடிவை குறிக்கிறது என்றும் ஷியாம் பெனகல் ஒரு புதிய வகையான சினிமாவைத் தொடங்கி, பல கிளாசிக் படங்களை உருவாக்கியவர் என்றும், அவர் பல நடிகர்கள் மற்றும் கலைஞர்களை வளர்த்தவர்.

தாதாசாகேப் பால்கே விருது மற்றும் பத்ம பூஷன் உட்பட பல விருதுகளின் வடிவத்தில் அவரது அசாதாரண பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவரது எண்ணற்ற அபிமானிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று ஜனாதிபதி திரௌபதி முர்மு X தள பதிவில் கூறியுள்ளார்.

பெனகலின் மறைவுக்கு காங்கிரஸ் கட்சி இரங்கல் தெரிவித்தது, கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சிந்தனையைத் தூண்டும் வகையில் அவரது படைப்புகள் மகத்தான பங்களிப்பைச் செய்ததாகக் கூறினார்.

இயக்குநர் ஷேகர் கபூர் கதைசொல்லல் மற்றும் சமூகப் பிரச்சினைகளில் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு, ஒரு அழியாத முத்திரையை பதித்துள்ளார் அங்கூர், மந்தன் போன்ற படங்களின் மூலம் இந்தி சினிமாவின் திசையை மாற்றியவர் என்று நினைவுகூரப்பட வேண்டும். அவர் ஷபானா ஆஸ்மி மற்றும் ஸ்மிதா பாட்டீல் போன்ற சிறந்த நடிகர்களை உருவாக்கினார் எனது நண்பரும் எனது வழிகாட்டியுமான ஷியாம் பெனகல் (Shyam Benegal) அவர்களே விடைபெறுங்கள்,” என்று ஹேகர் கபூர் உருக்கமாக தனது அஞ்சலியை கூறினார்.

சமூக மாற்றத்தின் கருவியாக சினிமாவை திறமையாகப் பயன்படுத்திய திரைப்பட இயக்குனர் ஷியாம் பெனகல் (Shyam Benegal) - Indian film director -https://bookday.in/

“ஷ்யாம் பெனகல் படைப்புகளில் சிறப்பாக வெளிப்படுத்திய ஒன்று என்னவெனில் சாதாரண மக்களின் முகங்களையும் மற்றும் அவர்களின் சாதாரண வாழ்க்கையையும் கவிதையாக காட்சிப்படுத்திய விதம்தான் ” என்று இயக்குனர் சுதிர் மிஸ்ரா கூறினார். “ஷ்யாம் பெனகலைப் பற்றி நிறைய எழுதப்படும், ஆனால் என்னைப் பொறுத்தவரை, அவரது படங்களில் ஒருவிதமான சமூக அக்கறை இருக்கும் மற்றும் மக்கள் இன்னும் ஒரு நிம்மதியான வாழ்க்கையை வாழவில்லை என்ற உண்மையான வருத்தமும் அவரது படைப்புகளில் இருப்பதைப்பற்றி யாரும் குறிப்பிடல்லை” என்று அவர் மேலும் கூறினார்.

இயக்குனர் சந்தீப் ரே கூறும் போது பெனகலின் மரணம் எங்கள் ரே குடும்பத்திற்கு ஒரு தனிப்பட்ட இழப்பு என்று கூறினார், பெனகல் (Shyam Benegal) மாணிக்-டா என்று அழைக்கப்படும் பிரபல இயக்குநர் சத்யஜித் ரே பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்துள்ளார், திரைப்படத் இயக்குநராக அங்கூரை உருவாக்கிய பிறகு சத்யஜித்ரே மற்றும் பெனகலுக்கு இடையே ஆழமான, தனிப்பட்ட பிணைப்பு இருவருக்கும் உருவானதாக சந்தீப் தெரிவித்தார் தனது தந்தையின் வாழ்க்கையைப் பற்றிய ஆவணப்படத்தை மிக சிறந்த படைப்புகளில் ஒன்றாக உருவாக்கியதையும் அவர் நினைவு கூர்ந்தார். பெனகல் ஒருமுறை “ஒரே ஒரு சத்யஜித் ரே தான்” அவருக்கு இணையாக யாருமில்லை என்று குறிப்பிட்டார்.

இந்திய சினிமாவில் நல்லதொரு மாற்றங்களை ஏற்படுத்திய ஷியாம் பெனகல் (Shyam Benegal) இன்றைய இளம் இயக்குநர்களுக்கு சிறந்த முன்னுதாரனம். அவருக்கு சிரம் தாழ்ந்த நமது அஞ்சலிகள்.

தமிழில் : மோசஸ் பிரபு

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *