ஜே. பிரோஸ்கான் கவிதைகள்விடுபடுதல்

நீ கர்வத்திலிருந்து முழுமையாக
விடுபடவென
ஒரு நேர்பாதை சமைக்கப்படுள்ளது.
அது மெல்லிய நூலுடையதென
சொல்லி வைக்கிறேன்.
ஆனால் ஒன்று
நீ கர்வத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பின்பு
கர்வம்,நேர்பாதை என்பதன்
அர்த்தம்தான் என்ன.?

..ஒழுக்கம் பேணு

சுயஒழுக்கமற்று திசைமாறிய பறவையாய் சதாவும் றெக்கையடித்து றெக்கையடித்து அலைகிறாய்
தோழனே
எல்லாமுமாக அவனே இருக்கிறான்
உனக்கான இருத்தலென்பது
ஒழுக்கமற்றதும் தீயதுமானது.
போதும் உன் தாண்டோன்டித்தனத்தை விடுவி.
ஒரு கணம் போதும்.
மனம் வருந்து.
நரகை இழக்கலாம்.
அவன் அன்புக்குள்ளேயே
சர்வமும்.
..தெரியாதவற்றின் மீதான நேசம்.

உன் அன்பே
நிரந்தரமானதும்
நிரந்தரமற்றதுமாய்
தினம் உனை அங்குமிங்கும்
அலைய வைக்கிறது.
அது மேலும்
பேரன்பின் மீதான கவனிப்பையும்
தவறிவிடச்செய்துவிடுகிறது.
கடைசியாய் நம்பிக்கை என்பது
இவற்றையெல்லாம் அறிந்திடாதது.
தெளிவான இருப்பென்பது
தெரியாதவற்றின் மீதான
இருக்கமான நேசமே.
..வெட்கித்தல்

தன் சொற்களால் எழுதத்தெறிந்தவையை
தன் வாயினால் மொழிந்துவிடுவது
புறமெனின்
அகத்தின் மாயத்தோற்றம்
புறச்சிரிப்பில் எதுவுமற்றது
எந்த வாயாலும் சொல்லமுடியாத
அன்பேனே உன் ரகசித்தை.
சொல் வீச்சென்பது
உன் அகத்தை மறைக்கும்
வெற்றுப் புன்னகை மட்டுமே.
புறத்தை காட்டிடவே முடிந்த உன்னால்
அகத்தை புரிந்திட்ட அவனிடம்
நீ தோற்றவனே.
..

ஜே.பிரோஸ்கான்

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)