ஆரிசன் எழுதிய ஐந்து புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

ஆரிசன் கவிதைகள்

ஆரிசன் கவிதைகள்

***********************************************

1

***********************************************

விதி வலியதாம்
வீம்புக்காக பேசி
என்ன பலன்?
கிழிந்த சட்டையில் தெரிந்தது
சண்டையின் வலிமை…!

***********************************************
2

***********************************************

சுவைக்கத் தெரிந்த நாக்கு
மணம் அறிவதில்லை
பிரித்தெரியும் மூக்குக்கு
மணம் கேட்கும் சக்தி இல்லை
கேட்கத் தெரிந்த காதுகளால்
பார்க்க முடிவதில்லை
பிதற்றலில் இறங்கி விடுகிறது
மனதுக்குள் இடி முழக்கம் …!

***********************************************

3

***********************************************

குதிரைகளின் ஓட்டத்தை
வாய்க்கால் நீரோடை
படம் பிடித்தது
குன்றின் மீது இருந்த மயில்
தோகை விரித்து ஆடும் வேகத்தில்
சிற்றோடை தாகம் தீர்த்தது
பாட்டு ஒலித்த காதுகளில்
குறிஞ்சியின் வீரம்
நளினமாய் நையாண்டி செய்கிறது
கொடி மரத்தில் அமர்ந்து
கொள்கைப் பிரகடனத்திற்குத் தயாரானது
காகங்களின் கூட்டறிக்கை அரசியல் ..!

***********************************************

4

***********************************************

திசை தெரியாமல்
பறக்கிறது பல்லி

மரக்கிளை மறந்து
நடக்கிறது பறவை…!

ஓட்டப்பந்தயத்திற்குத்
தயாராகிறது நத்தை…!

பேச்சுப்போட்டிக்கு
மைக்கை சூழ்ந்து கொண்டன
எறும்புகள் …!

உயரம் தாண்டக் காத்திருக்கின்றன
யானைகள்….!

குகைக்குள்ளே ஓட்டப்பந்தயத்தில் தோற்றும்
கம்பீரமாய்த் தூங்குகிறது
சிங்கம் …!

மனித உருவெடுத்து
நடக்க ஆசைப்படுகிறது மண்புழு …!

பொம்மைகளோடு தெருவில் விளையாடும்
குழந்தைகளுக்கு …
விரிந்த உலகத்தின்
மெகா அதிசயங்களைப் பார்க்க
இன்னும் …இன்னும் …நிறைய
கற்றுத் தருகிறது பிரபஞ்சம் …!

***********************************************

5

***********************************************
புயல்.. காற்று …
மழை… சுனாமி ,,,
கொரோனா …விஷக் காய்ச்சல்…
கத்தி.. கடப்பாரை…
வீச்சரிவாள்
சாதி மத இன மொழி அரசியல்
வன்மக் கொலைகள் தாண்டி
காலகாலமாய்…
ஜெயித்து நின்று வாழ்ந்து
மௌனமாய்ப் பேசுகிறது
தலைமுறைகளைத் தாண்டியும்
வாழையடி வாழையான….
காதல் ..!

***********************************************

📚 எழுதியவர் : 

✍🏻 ஆரிசன்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் - ரூ. 10,000 பரிசு புத்தகங்கள் வெல்வோம்..

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *