பிரகாஷ் கண்ணனின் கவிதைகள் | பிரகாஷ் கண்ணன் எழுதிய ஐந்து புதிய தமிழ் கவிதைகள் | Tamil Kavithai | www.bookday.in

பிரகாஷ் கண்ணனின் கவிதைகள்

பிரகாஷ் கண்ணனின் கவிதைகள்

*********************************

திருடிய மலரின்
நறுமணம்
செடியோடு சிறைபிடிக்கப்பட்டதா?
என்ற சந்தேகம்
அவள்
தலையில் சூடிய பின்னும்.

*********************************

மீன் பிடிக்க வரும்
படகுகளை
மீன்களுக்கு
அடையாளம் காட்டுகிறது
வெகுளி கொக்கு.

*********************************

வெயிலுக்கு
குடை பிடித்தபோது
காற்றடிக்க
குடை பறந்தது
பின்
மழை வந்தது.

*********************************

ஓட மறந்த
மானைக் கண்டு
விலகிச் சென்றது சிங்கம்.

*********************************

அம்மன் கோவில்
திருவிழாவில்
ஆசிர்வாதம் செய்யும்
பவுடர் பூசிய அழகிகள்.

*********************************

எழுதியவர் : 

✍🏻 பிரகாஷ் கண்ணன்
ரெங்கையன்பட்டி,
விருதுநகர்.

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 5 Comments

5 Comments

  1. Navin nishanthan

    நண்பா, நீங்கள் இன்னும் புதிர் போடுவதை விடவில்லை.

  2. Prakash Kannan

    எமது வரிகளை உங்களது தளத்தில் வெளியிட்டமைக்கு Book day தளத்திற்கு, தளத்தின் ஆசிரியருக்கு நன்றியும் பாராட்டுக்களும்

  3. எண்ணங்கள் எல்லாம் உயர்வு எழுத்துக்கள் எல்லாம் அதிர்வு கொண்டு உள்ளது மச்சான் ❤️

  4. Midhun Kannan

    அருமையான வரிகள் பிரகாஷ் 😭❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *