ச.பாரதி பிரகாஷ் கவிதைகள் | ஐந்து புதிய தமிழ் கவிதைகள் | அழகிய சிறந்த தமிழ் கவிதைகள் PDF | Bharathi Prakash Tamil Kavithaikal | www.bookday.in

ச.பாரதி பிரகாஷ் கவிதைகள்

ச.பாரதி பிரகாஷ் கவிதைகள்

*********************************************************

1.

தலை துண்டாகி
கீழே விழுந்து கிடக்கும்
புத்தரின் தலை
தன் மீது
படுத்து இருக்கும்
புலி
தன்னை
கடித்து விடக் கூடாது
என
ஆசைப் படுகிறது.

*********************************************************

2.

புலி என்று தெரியாமல் புத்தனும்
புத்தன் என்று தெரியாமல்
புலியும்
கண்மூடிக் கிடக்கின்றன
ஆசையற்ற கனவில்.

*********************************************************

3.

புத்தகங்களுக்கு இடையே
தொலைந்து போன
புத்தரைக்
கண்டுபிடிக்க
எல்லோரும்
ஆசைப்படுகின்றனர்.

*********************************************************

4.

காலடியில் தலை
விழுந்த
புத்தன்
கழுத்தோடு தலை ஒட்டிக்கொள்ள ஆசைப்படுகிறார்.

*********************************************************

5.

சில
புன்னகை நினைவுகளை
இதயத்திற்கும்
அதன்
மிச்சத்தை
கண்ணீர் நிறைந்த
கண்களுக்கும்
கொடுத்துவிட்டு
கடந்து போகிறது

காலமும்
கவிதையும்…

*********************************************************

எழுதியவர் : 

✍🏻 – ச. பாரதி பிரகாஷ்,
சின்னத்தடாகம்,
பெரியநாயக்கன்பாளையம்,
கோயம்புத்தூர்.

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *