சா.சமீமா சிரின் எழுதிய 5 புதிய தமிழ் கவிதைகள் | உருமாற்றம் | எந்திர ஓட்டம் | வசந்த நிகழ்வு | கருப்பு தினம் | வியாபார யுக்தி | www.bookday.in

சா.சமீமா சிரின் எழுதிய கவிதைகள்

சா.சமீமா சிரின் கவிதைகள்

உருமாற்றம்

நாட்டின் வளர்ச்சிக்கு மாற்றம் தேவை
மாறிக்கொண்டு தான் இருக்கிறது
அறுவடை நிலங்கள் ஆலைகளாகவும்
ஆறுகள் அடுக்குமாடிகளாகவும்
ஆங்காங்கே காட்டு விலங்குகள்
அகதிகளாகவும்.

**********************************************

எந்திர ஓட்டம்

ஓட்டத்தால் வாழ்வினை கழிக்கும்
எந்திர மனிதர்கள் சற்றே நிற்கிறனர்
ஒவ்வொரு மகிழுந்தின்
கண்ணாடிகளையும் தட்டியபடி
ஓடத் தொடங்கினர்
பசி தீர்க்கும் வழியறியாத யாசகர்கள்
டிராபிக் சிக்னலில்.

**********************************************

வசந்த நிகழ்வு

ஆனந்தத்தோடு விறகு எரிக்கிறாள்
பசியின் மரணத்திற்கு
நீண்ட நாட்களுக்குப் பின்
சமைக்கும் ஏழைப் பெண்.

**********************************************

கருப்பு தினம்

அமாவாசை நாளில்
துக்கம் அனுசரித்தது
நிலவின் ஒளியை தொலைத்த
ஏழைவீட்டுக் கூரையின் ஓட்டைகள்.

**********************************************

வியாபார யுக்தி

“ஆண் இவன்” என ஏலமிட்டு
எப்படியோ விற்றுவிடுகிறாள்
தன் மகனை
வரதட்சணை சந்தையில் தாய்.

எழுதியவர் : 

– சா.சமீமா சிரின்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *