ஹிந்திக் குறுங்கவிதைகள்
__________________________________
புல்
______
இருள் ஆமை போல
அமர்ந்தது பூமியின் மேல்
ஆமையின் மேல்
அமர்ந்திருக்கிறது நீல ஆகாயம் _
இவ்வளவு மிகுந்த சுமையின்
கீழேயும்
நசுக்கப்படவில்லை
சின்னஞ் சிறு புல் !
🦀
ஹிந்தியில் : ஸ்ரீ காந்த் வர்மா
தமிழில் : வசந்ததீபன்
__________________________________
பெண்
தனது ஏகாந்தத்தில் தான்
பெண்ணாக இருக்கிறாள்
மற்ற நேரங்களில்
அவள் சம்பந்தமாக மட்டும் இருக்கிறாள்.
🦀
ஹிந்தியில்: நரேஷ்மேஹ்தா
தமிழில்: வசந்ததீபன்

__________________________________
நினைவு கொள்
ஒரு குழந்தையின் கொலை
ஒரு பெண்ணின் மரணம்
ஒரு மனிதனின்
தோட்டாக்களால் சிதைந்த உடல்
ஏதேனும் அரசாங்கத்தின் வீழ்ச்சியாக மட்டும் இல்லை
முழு தேசத்தின் அழிவாக இருக்கிறது.
🦀
ஹிந்தியில் : சர்வேஷ்வர் தயாள் சக்சேனா
தமிழில் : வசந்ததீபன்
__________________________________
நான்
நான் ஓடும் பகல் மற்றும் நின்று போன இரவு__
எனக்குத் தெரியாது
நான் தேடிக் கொண்டிருக்கிறேன் எனது மாலை நேரத்தையும் , காலை நேரத்தையும்.
🦀
ஹிந்தியில் : ஸ்ரீகாந்த்வர்மா
தமிழில் : வசந்ததீபன்
__________________________________
” தேகம் மணப்பெண்ணாகஉருவாகுவதில்லை
ஆன்மாவிதவையைக்
கொண்டிருப்பதில்லை. ”
🦀
ஹிந்தியில் : அம்ருதா ப்ரிதம்
தமிழில் : வசந்ததீபன்
__________________________________
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
