முட்டாள் தினக் கவிதைகள் – க .புனிதன்முட்டாள் தினக் கவிதைகள்
************************************
நான் ஒரு முட்டாள்
ஜன்னல் கம்பியை
புத்தர் முதுகாய் நினைப்பவன்
….
நான் ஒரு முட்டாள்
ஆற்றில் நீர் இல்லாததால்
கவிழ்ந்திருக்கும் பாத்திரம்
….
நான் ஒரு முட்டாள்
புளித்த திராட்சை ரசத்தை
ஊற்றி வைத்த கோப்பை
….
நான் ஒரு முட்டாள்
கறிவேப்பிலை சக்களத்தியை
பறித்து வருபவன்
….
நான் ஒரு முட்டாள்
முகிலில் மறைந்து இருப்பது
நிலவா சூரியனா
….
நான் ஒரு முட்டாள்
பூ பதில் இலை மேல்
அமர்ந்திருக்கும் வண்ணத்து பூச்சி
…..
நான் ஒரு முட்டாள்
வயல் வெளியில் தலை கவசம்
அணிந்த தட்டான்
….
நான் ஒரு முட்டாள்
பெண் ஈசலின்
உடைந்த றெக்கை
……
நான் ஒரு முட்டாள்
ஆரஞ்சு பழத்தின்
உரித்த தோல்
…..
நான் ஒரு முட்டாள்
இரு பறவைகள் எனை
வேடிக்கை பார்க்கின்றன
…..
நான் ஒரு முட்டாள்
வானவில் நிறம் கொண்ட
ஊசித் தட்டான்
……
நான் ஒரு முட்டாள்
சிங்கத்திற்குப் பதில்
சேவலின் தலையைக் கொய்பவன்
….

க .புனிதன்