ச.சத்தியபானு எழுதிய நான்கு புதிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

ச.சத்தியபானுவின் ஹைக்கூ கவிதைகள்

ச.சத்தியபானுவின் ஹைக்கூ கவிதைகள்

*******************************************

வழியெங்கும் கால்தடம்
தேடி அலைகிறது தாயைப் பிரிந்த
குருவியொன்று

*******************************************

காற்றின் வேகத்தை
கூட்டிக் கொண்டே சென்றது
ஒற்றை பனைக்காற்றாடி

*******************************************
சொல்லத் தவறிய வரிகள்
கிழிந்த புத்தகத்தின் பின்னால்
ஒட்டிக் கொண்டு தான் இருக்கின்றன….

*******************************************

இருள் சூழ்ந்த வானில்
வட்டமிடுகிறது
அன்று வந்த நிலவொன்று….

எழுதியவர் : 

✍️ – ச.சத்தியபானு
சென்னை

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *