க. புனிதன் எழுதிய நான்கு புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

க. புனிதன் கவிதைகள்

க. புனிதன் கவிதைகள்

*********************************
1. பூத்த குவளை 

தெருவோரம் முக்கில்
அழுக்கு சட்டையோடு
நிற்கும் வேலை இல்லாதவன் போல்
உணவு மேசையில்
கழுவாத காவி ஏறிய
தேநீர்க் குவளைகள்
அவள் முன் இருக்கின்றன

மழையில்
நடனமாடும் மனநலமற்றவன் போல்
அழுக்குப் பாத்திரங்களைக்
கழுவி வைக்கிறாள்

அகண்ட அலுமினியக் கூடையில்
கழுவி வைக்கும் சின்ன பாத்திரங்களில்
அவளின் இரக்க இசை கேட்கிறது

வானத்தை இருளச் செய்யும்
மருளி வித்தை
சன்னலோரம் செடிகளுக்கு
அவள் கொட்டும்
தேநீர்த் தூள் கப்பி

என்றோ அவள் தொலைத்த
குவளையொன்று
தினமும்
குவளைப் பூக்களாய்ப் பூக்கின்றன

*********************************

2. பூசணிப் பூவும் தாத்தாவும்

இளமை
கனவைத் துரத்துகிறது
முதுமை
கனவை அருகில் வைத்துப் பார்க்கிறது
குச்சி வீட்டை
மாடி வீடாக்கும்
யோசனை
தாத்தாவிற்கு
முதிய வயதில் தான் வந்தது
தாத்தாவை நினைத்தால்
பூசணிப் பூவிற்கு
மகர்ந்தச் சேர்க்கைச் செய்வது தான்
ஞாபகதிற்கு வரும்
இன்மையும்
முழுமையும் சந்திக்கும்
மய்யம் முதுமை
மழை இல்லா வறட்சி காலத்தில்
மீன்கள் இல்லாக் குளத்தைத்
தேடிப் போகாமல்
மாட்டுண்ணிகளைப் பிடித்து உண்கிறது
கிழட்டுக் கொக்கு
கவிதை
இசையை விட உயர்வானது
அம்மாவின் அமைதி
நேரத்தை விட
முழுமையானது
முதிய எறும்பு

*********************************

3. அன்பில் முயல்

முயல்வது ஆமையாய்
இருந்தாலும்
அன்பில் முயல்வது
முயலாய் இருக்கிறது

பனிக் காலத்தில்
ஆமைக்கும் முயலுக்கும்
நடந்த ஓட்டப்பந்தயத்தில்
அவ்வப்போது
செல்லக் கனா காணும்
முயல் தூங்கி போனது

இரவில் பனிப் புல்
நுனிப்புல் மேயந்த
அசதியில் உறங்கிப் போனது
முயல்

அன்பில் உறைந்த
வெண்பனிக் காலமாகிறது
முயல்
அதை வெறுமனே கடந்து போகிறது
ஆமை

அன்பில் முயலாகிறது
முயல்

*********************************

4. மஞ்சு காலத்தின் மஞ்சள்

மலையை
வாவென்று அழைத்தது
வெட்டுக்கிளி
அதனுள் ஒரு மலை
அசைந்தது
ஒரு மழலையை
வா வென்று அழைக்கும்
செம்பருத்திப் போல
மலையை நோக்கி
அமர்ந்திருக்கும் அதனில்
ஒரு துறவியின் நிறமிருந்தது
ஒரு மலையை காணும்
நிறைவிருந்தது
வான் நீலத்தை நூற்கும்

கவிதை இருந்தது
ஒரு மஞ்சு காலத்தில்
எருக்கு இலை மேல்
மஞ்சள் வெட்டுக்கிளியை
கண்டேன்
ஒரு பீரங்கி போல
பசும் புல் மேல் அமர்ந்திருக்கும்
வெட்டுக்கிளி
ஒரு பறவைக்கு இரையாக
தவமிருக்கிறது

*********************************

எழுதியவர்:

க. புனிதன்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *