மு.பிரபு எழுதிய நான்கு புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

மு.பிரபு கவிதைகள்

மு.பிரபு கவிதைகள்

*****************************************************************

1.

மரங்களில்லா
சாலையில் பயணம்
இளைபாற
நிழல் தரும் இடமாய்
தேநீர்க் கடைகள்.
………….

2.

பாலாற்றில்
இருபுறமும்
கரைபுரண்டோடும்
வெள்ளம்

குழந்தைகள்
துள்ளி விளையாட
சிறு ஓடையாய்
காத்திருக்கும்
கொட்டாறு.
……………….

3.

பசியாற வந்த
பறவைகளை
பயமுறுத்தி
பட்டினிபோடுது
சோளக்காட்டு
பொம்மை.
………………

4.

கூட்டத்தைக்
கலைக்க
கண்ணீர்ப் புகை
கண்ணீருடன் ஓடின
தேனீக்கள்.

*****************************************************************

📚 எழுதியவர் : 

✍🏻 மு.பிரபு, வேலூர்.

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *