ரவி அல்லது கவிதைகள்
முயன்றதன் தேறாமை
இரக்கத்தின் எல்லாப் புரிதல்களும்
அறியாமையை உறுதிகள் செய்ய
கவலைகள் சூழ்வதைத் தவிர
யாதொன்றும்
செய்ய முடியவில்லை.
மெல்லப் போகும்
ஊர் வாயின்
அசௌகரியத்தால்
அனுசரித்த
அத்தனையும்
அற்பப் புறந்தள்ளலாக வாய்த்திட்டப்பொழுது
பாரம்பரிய சரடொன்று
இதயத்தை சுருக்கி
வழிய விடுகிறது
கண்ணீரை
விதி வலியது
வேண்டிய மட்டும்
எவைகள் செய்தாலும்
அறுவடை காலத்தில்
ஆவதொன்றுமில்லையென
********************************
குத்துக்கோடினாலொரு பொசுங்கள்.
குனிந்து பொறுக்கிய
சுள்ளிகள் அறியும்
தொட்ட கைகளின் தூரம்
வெகுவென.
அத்தனைக்குமாக
நிமிர்ந்ததில்
எரிந்து
விழுகிறது
கடிவாளங்கள்.
********************************
உருகித் திளைத்து.
கணக்கற்றக் கடத்தலின் பொழுதுகளில்
கவனம் பெறாத
இருத்தல்
எனக்கானதெனவானபோது
மிளிரும்
யாவின்
ஈர்ப்புகள்
அற்ப தூரப் பயணத்திற்கு ஆளாத் துயரத்தில்
ஆழ்த்துகிறது
சொட்டுச் சொட்டாக
உயிர் கசிந்து.
********************************
ருசிக்கும் ஸ்மரனைகள்
அவரிடம் பேசுவதற்கு
எனக்கொரு கவிதை வேண்டும்.
அது அவர் மனம் கவரும் விதமாக அமைய வேண்டும்.
வாகனத்தின் பயணம்
வெகு தூரம் வந்தாலும்
வார்த்தைகள் எதுவும்
வருவதாக இல்லை.
வைராக்கியம் உடைத்து பேசிவிடலாமென நினைத்தாலும்
வாலைச் சுருட்ட மறுக்கிறது
பழகிய குரங்கு.
களைப்பின் வாடலில்
அருந்திய தேநீர் பாதியானாலும் சொல்லொன்றெடுக்க
இத்தனைப் பிரயத்தனமாவென்ற
வினாவும் விடாது துரத்தியது.
சூடாறுமுன் உறுஞ்சிவிடும் பாங்கில் விழுந்த
ஈ
தற்கொலை செய்ய முயன்றதாவெனத் தெரியவில்லை.
விரல் விட்டு எடுத்தபோது தேநீர் குளியல் கண்ட
ஈ
திட்டியுமிருக்கலாம்
நன்றியுமாற்றியிருக்கலாம்.
தேநீரைக் குடிக்காமல்
குரங்கை குதூகலிக்க விட்டிருக்கலாம்
தெரியாமல் விழுந்த தேரையை அது நினைவுக்கு கொண்டு வராமல் இருந்தால்.
யாதொரு
அசூசைகளற்று
குடித்த
எஞ்சியத் தேநீர்
அதன் சுவையில்
அப்படியேதான் இருந்தது.
குமட்டலெடுக்க குரங்கு
அறிவியல் பெயர்கள் அத்தனையும் சொல்லிப் பார்த்தது.
பிறகொருமுறை
கவிதை எழுதி
அவரிடம் பேசி மகிழலாமென
சரிப்படாதச் சலிப்பில்
வந்த வழியே
வாகனத்தில் சென்றபோது
வந்தமர்ந்த
ஈ
காப்பாற்றியதாகத்தான்
இருக்கவேண்டும்.
இடது கையை உதறி
ஈ
இருந்த இடத்தைப் பார்த்தபொழுது
வந்த
நறுமணத்தின்
பூ எதுவென
மனக்குரங்கு தேடிக்கொண்டிருக்கிறது
மடிப்புப் பிராந்தியங்களில்.
ஈயைப் பிடித்து
அதன் கால்களை
முகரத் தெரிந்தால்
இனி
ஈ
விழுந்த தேநீரை
நீங்கள்
இனிமையாக ருசிக்கலாம்
குரங்கின் பிடியில்
சிக்காமல்.
***
📚 எழுதியவர்:
✍️ – ரவி அல்லது
ravialladhu@gmail.com
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
