தங்கேஸ் கவிதைகள்
*****************************************************************
1. தோற்றம்
ஒரு நெருப்புக்கங்கு போல
பெரியகோவிலுக்கும் மேலே
சொலித்துக்
கொண்டிருக்கிறது
ஒற்றை நட்சத்திரம்
தரிசனம் பார்க்கும் ஆசையா
அல்லது தானுயர்ந்தவன் என்ற
தம்பட்டமா
என்னவென்று தெரியவில்லை
கூடடைந்த பறவைகளுக்கு
மின்மினிப்பூச்சியாகவும்
பொழுது போகாத கவிஞனுக்கு
காற்புள்ளியாகவும்
ஒற்றையடிப்பாதையில் செல்பவனுக்கு
டார்ச் விளக்காகவும் தோன்றலாம்
ஆனால் கருவறையிலிருந்து பார்க்கும்
விக்கிரகங்களுக்கு
அது என்னவாகத் தோன்றும்
என்று தெரியவில்லை
*****************************************************************
2. சருகுகள்
*****************************************************************
3. நதிப் பயணம்
பச்சை முயலாகக் குதித்தோடும் அதிகாலை நதியை
விழிகளை விரித்துப் பார் சகியே
இதே நதியை மீண்டும் தரிசிக்க
எத்தனை கல்ப யுகம் காத்திருக்க வேண்டுமோ?
ஒரு வேளை இந்தப் பிரபஞ்சம் மடிந்து
மீண்டும் தோன்றி
இத்தனை ஆயிரம் வருடங்கள் கடந்திருக்க வேண்டியதிருக்கலாம்
இது போல் ஒரு நீர் பூச்சி வந்து
நதிப் படுகை மீது ஒளி ஓவியம்
தீட்டிக் கொண்டிருக்க வேண்டியதிருக்கலாம்
பார்வைக்கு சருகு போல் தோற்றம் தரும்
பட்டாம் பூச்சி அமர்ந்த நிலையிலேயே
பிரேதமாக மிதந்து வர வேண்டியதிருக்கலாம்
கை விடப்பட்ட ஆயிரமாயிரம் இதயங்கள்
ஒரே நேரத்தில் இதில் அடித்துச் செல்லப்பட வேண்டியதிருக்கலாம்
அதை விட நீயும் நானும் இப்படி
பிணைந்திருக்கும் கைகளை விடுவித்துவிட்டு
எதிரெதிர் திசையில் நதிக்கரையில்
நடந்து போய்க் கொண்டிருக்க வேண்டிய திருக்கலாம்
*****************************************************************
4.
பிரபஞ்சத்தை விழுங்கிவிடும்
பெரியதொரு மீனுக்கு
பூமி உருண்டை என்பது
சிறியதொரு முட்டைதான்
கடைக்கண்கள் பார்க்கும் போது
கச்சிதமாக சுழலும் அதனிடம்
அவள் வெளிப்படுத்தும் வாஞ்சை என்பது
சிறியதொரு புன்னகை தான்
ஆலவாயன் சாட்சியாய்
அம்மை விதம் விதமாக காட்சியா வாள்
நீ நான் ஆண் பெண் வான் கடல்
வாழ்க்கை மரணம்
முப்பத்து முக்கோடி தேவர்கள்
மற்றும் ஈசன் காலம்
யாவரும் எவரும்
என்றும் பெண்மையை சுற்றி வரும்
குருவி குஞ்சுகள் தான்
*****************************************************************
📚 எழுதியவர் :
✍🏻 தங்கேஸ்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

