வளவ. துரையன் கவிதைகள்
**********************************************
நிம்மதி
———–
வாசனை ஒன்றினால்
கவர்ந்திழுக்கப்பட்டு
வரவேண்டிய
பட்டாம்பூச்சி
வண்ணத்தின் வரவேற்பால்
உள்ளே வந்துவிட்டது.
தொலைக்காட்சியைப் போய்
முகர்ந்து பார்த்து
ஆட்டங்கள் பிடிக்காததால்
அது விலகுகிறது.
காதலர்களின் இறுக்கம்போல்
கலந்து பிணைந்திருக்கும்
சுவர்களின் மூலையில்
சுற்றிவந்து சோர்வடைகிறது.
உயர உயரப் பரந்து
திருவிழாவில் பெற்றோரைத்
தொலைத்த சிறுவனாய்த்
திகைக்கிறது.
எப்படியோ சுழலும்
மின்விசிறிதன்னில்
சிக்கிக் கொள்ளாமல்
சன்னல் வழியாய்த்
தப்பித்துச் சென்றபின்தான்
எனக்கு நிம்மதி
வீடுகளின் கதை
————————
எங்கள் தெருவில்
பலவீடுகள் எப்போதும்
காலியாக உள்ளன.
எல்லாமே வாடகைக்கு
எவர் வருவார் என்று
எதிர்பார்த்திருக்கின்றன.
வருகின்ற பெற்றோரின்
பிள்ளைகள் தங்களை மிகவும்
காயபப்டுத்துவதாகவும்
வலிப்பதாகவும் அழுகின்றன.
சில நேரம் அவை
வாசலிலேயே நின்றுகொண்டு
வெவ்வேறு முகமூடிகளுடன்
வழிமறிக்கின்றன.
வருவோர் எண்ணிக்கை
அதிகமானால்
வாசற்கதவைச் சாத்துகின்றன.
பல்வேறு வீடுகளும்
பாழாய்க் கிடப்பதனால்
அவற்றில் பாம்புகளும்
பல்லிகளும் பூரான்களும்
வாசம் செய்கின்றன.
இப்போது அழுது அழுது
என்ன பயன்?
**********************************************
வாய்ச்சொல் வீரர்
—————————
ஆஞ்சநேயருக்கு
வடைமாலை
சாத்தி முடித்ததும்
அவரே மொழிந்தார்
வெளியே நிற்கும்
அவனுக்கும் இரண்டு
வடைகள் கொடுங்கள்;
கொடுத்தார்களா?
கஞ்சிக்கு அழுகிறார்கள்
பாரீர்
நோன்புக் கஞ்சி
அனைவருக்குமானதுதான்;
அவர்களுக்கும் ஊற்றுங்கள்’
குடித்துப் பசியாறி
அகமகிழட்டும்
ஊற்றினார்களா?
கர்த்தரின் அப்பம்
எல்லாருக்கும் பரலோகம்
அளிக்கும் சுவை கொண்டது;
அவனுக்கும் கொடுங்கள் என்றார்;
கொடுத்தார்களா?
இல்லை! இல்லை!
இல்லவே இல்லை!
உத்தரவு போடுவோர்
கீழே இறங்கி உலகைப்
பார்க்க வேண்டும்.
**********************************************
மயானச் சிறை
———————-
மூடி இருக்கும் கதவைத் திறக்க
ஓங்கி உதைப்பது போல
என்னை உதைக்கிறீர்கள்.
என் மனக்குளத்தில்
கல்லெறிந்து விட்டு
மாய அலைகளைக்
காயமாக்கினீர்கள்
என் மௌனத்தையே
சம்மதமென எண்ணி
மயானத்துச் சிறையில்
மாய்க்கப் போகிறீர்கள்.
கூடுகட்டிய மரத்தை
மறந்து விட்டு
மாலையில் தேடியலையும்
மனங்கொத்திப் பறவையாய்
அலைந்து கொண்டுள்ளேன்.
எந்தத் துரும்பு கிடைத்துக்
பிடித்துக் கரையேறலாம்
என எதிர்பார்த்துள்ளேன்.
எட்டுத் திசைகளில்
ஒன்றில் கூட
வெளிச்சமில்லையே!
**********************************************
📚 எழுதியவர்:

வளவ. துரையன்
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

