***********************************************
தேநீர்
கண்ணாடித் தம்ளரில்
ஆவி பறக்கும் தேநீர்
வெறும் பானமல்ல அது!
நேற்றைய கவலைகளை
ஆற்றிக்கொள்ள
நிமிட கால அவகாசம்
***********************************************
பழைய மிதிவண்டி
துருப்பிடித்த சங்கிலியில்
சுற்றிக் கொண்டிருக்கிறது
அப்பா என்னை
பள்ளிக்கு அழைத்துச்
சென்ற
அந்தப் பழைய
ஞாயிற்றுக்கிழமை!
***********************************************
பயணச் சீட்டு
கிழித்துப் போடப்படும்
பேருந்துப் பயணச் சீட்டு
போலத்தான்
பல மனிதர்கள்
பயணம் முடியும் வரை
பத்திரமாய் வைத்திருக்கிறோம்
தேவை முடிந்ததும்
குப்பைத் தொட்டியில்!
***********************************************
அம்மாவின் சமையலறை
மசாலா வாசனைக்கு நடுவே
வேகும் அம்மாவின் வாழ்நாள்
உப்பில்லையென்றால்
உடனே கோபித்துக் கொள்கிறோம்
அவள் வியர்வையின் உப்பை
யாரும் சுவைப்பதில்லை!
***********************************************
📚 எழுதியவர் :
✍🏻 எ.எச்.எம் தில்சாத்
அட்டாளைச்சேனை, இலங்கை.
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

