Friedrich Engels (ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ்) : Immortal Symbol of Communist Brotherhood (கம்யூனிச சகோதரத்துவத்தின் அழியாத அடையாளம்) | ஏங்கல்ஸ் என்பவர் யார்? | ஏங்கல்ஸ் வரலாறு - https://bookday.in/

ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ்: கம்யூனிச சகோதரத்துவத்தின் அழியாத அடையாளம்

 

குளிர்காலத்தில் ஒரு நாள் 1852 நவம்பர் 18ஆம் தேதி மத்திய லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் நகரத்தில் உள்ள ட்டரபல் கார் ஸ்கொயர் பகுதிகள் முழுக்க ஓயாத மக்கள் கூட்டம் பெருக்கெடுத்து வந்து கொண்டிருந்தது. பிரதமராக இருந்த வெல்லிங்டன் பிரபுவின் இறுதி ஊர்வலம் நீண்ட நேரம் நடந்து கொண்டிருந்தது. காரல் மார்க்சின் மகள்களான ஜென்னியையும், லோரையும் இரு கைகளால் இறுக்கிப்பிடித்தபடி ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ் கூட்டத்துக்கு இடையில் நுழைந்து மெதுமெதுவாக நகர்ந்து சாலையின் மறுபக்கம் கடந்து கொண்டிருந்தார்.

அந்த ஊர்வலத்தில் மக்கள் ஆற்றின் வெள்ளம் போல பெருக்கெடுத்து தொடர்ந்து மிகபெரிய எண்ணிகையில் வந்து கொண்டிருந்தார்கள். இந்த மக்கள் பெரு வெள்ளத்தில் குழந்தைகளை தொலைத்த மனம் வருத்தத்துடன் குழந்தைகளை தேடிக் கொண்டிருந்தார் ஏங்கல்ஸ். எப்போதும் மார்க்ஸ் வீட்டிற்கு சென்றாலும் குழந்தைகளை வெளியில் சுற்றிக்காட்ட அழைத்து செல்வது வழக்கம், அதுபோல அன்றைய தினமும் மார்க்ஸின் இல்லத்திற்குப் போய் குழந்தைகளை அழைத்து சந்தையை சுற்றி பார்ப்பதற்காக தான் மூவரும் வந்திருந்தார்கள். தவறவிட்ட குழந்தைகளை நினைத்து, என்ன செய்வது என்று அறியாமல் நின்று கொண்டிருந்த பொழுது தெருவின் ஓரத்தில் இருந்த ஒரு கடையிலிருந்து லைப்ரரி என்ற ஒரு கூக்குரல் தொலைவிலிருந்து கேட்டது. குழந்தைகள் இருவரும் இருந்துள்ள பகுதியிலிருந்து வந்த அந்த கூக்குரல் கேட்டு அவர் அங்கே விரைந்து, அவர்களை அன்போடு சேர்த்தணைத்து மூவருமாக வீடு திரும்பினார்கள்.

உடலும் நிழலும் போல பிரிக்க இயலாத வண்ணம் இருந்தார்கள் ஏங்கல்சும்,  மார்க்சும். ஏங்கல்ஸ் மார்க்ஸின் இல்லத்தில் எப்போது வருகை தந்தாலும்  மார்க்ஸின் குழந்தைகளுக்கு குதூகலமாகவும், கொண்டாட்டமாகவும் இருக்கும். ஏங்கல்ஸ் குழந்தைகளுக்கு நிறைய கதைகள் சொல்லிக் கொடுப்பார். குழந்தைகள் ஏங்கல்சை “லைப்ரரி” என்றுதான் கிண்டலாக அழைப்பார்கள். ஒரு குடும்ப நண்பன் எப்படி இருக்க வேண்டும் என்றும், சக மனிதர்களின் மீதான காதலும் ஏங்கல்ஸ் தன் வாழ்க்கையில் இருந்து நமக்கு கற்பிக்கிறார்.

மார்க்சையும், ஏங்கல்சையும் சரித்திரம் ஒன்றிணைத்த காலம் முதல் அவர்களின் இறுதி காலம் வரை அவர்கள் தங்களை பொதுப்பணியில் ஈடுபடுத்திக்கொண்டார்கள். மானுடப் பிறவிகளை துன்புறுத்துகின்ற தீமைகளிலிருந்து தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலை போராட்டங்கள் பிறக்கின்றது என்பதில் உறுதியாக இருந்தார்கள்.

1820 ஆம் ஆண்டில் நவம்பர் 28ஆம் தேதி ஜெர்மனியில் உள்ள பார்பன் பட்டணத்தில் ஒரு பணக்கார பஞ்சாலை தொழில் செய்யும் குடும்பத்தில்தான் ஏங்கல்ஸ் பிறந்தார். இவரின் தந்தையின் பெயரும் பெடரிக் ஏங்கல்ஸ் என்றுதான் இருந்தது. இவரின் தாயாரின் பெயர் எலிசெபத். உயர்கல்வி முடிவதற்கு முன்பே தந்தையின் நிபந்தனைக் ஏற்று தந்தையின் நிறுவனத்தில் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டு வேலை செய்ய ஆரம்பித்தார். ஜெர்மன் தத்துவஞானியான ஹெகலின் ஆதரவாளர்கள்  நடத்தி வந்த இளம் ஹெகலிகளின் கிளப்பில் சேர்ந்து பிரபலம் அடைந்தார். சிறுவயதினிலே அசாத்தியமான திறமைகள் இருந்த ஏங்கல்ஸ் கலை, சங்கீதம், மொழிக்கல்வி, தத்துவசிந்தனை, கவிதை மற்றும் கார்ட்டூன் வரைவதிலும் மிக வல்லுனராக இருந்தார்.

மேலும் வாள் பயிற்சி செய்வது, குதிர சவாரி, நீச்சல் என இவைகள் எல்லாம் இவரின் பிடித்த பொழுது போக்குகளாக இருந்தது. வாழ்க்கை முழுக்க விளையாட்டிலும் உடற்பயிற்சியிலும் ஈடுபட்டிருந்தார். சிறுவயதில் ஜெர்மன் டெலிக்ராப் என்ற நாளிதழில் கூர்மையான சிந்தனைகளை பிரதிபலிக்கும் கட்டுரைகளை தொடர்ந்து எழுதினார். 1841 ஆம் ஆண்டில் ராணுவத்தில்  சேர்ந்து பணி செய்தார். ஓய்வு நேரங்களில் பர்லின் பல்கலைக்கழகத்தில் பகுதி நேரமாக தத்துவ சாஸ்திரம் பயின்று வந்தார். ஜெர்மனியை ஆளும் கட்சிகளின் பிற்போக்கான நடவடிக்கைகளுக்கு எதிராக இவரின் கூர்மையான பேனா முனைகள் இயங்கிக் கொண்டிருந்தது.

1842 ஆம் ஆண்டு ராணுவ சேவை முழுமை அடைந்த பிறகு பர்லினுக்கு திரும்பி வந்த பொழுது மான்செஸ்டரில் உள்ள ஏர்மன் அண்ட் ஏங்கல்ஸ் துணி மில்லின் தொழில் பயிற்சி நடத்துவதற்காக இங்கிலாந்திற்கு போக நிர்பந்தித்தார் இவரின் தந்தை. வியாபார முதலாளித்த நாடாக மாறிக் கொண்டிருந்த இங்கிலாந்திலேயும், விவசாய நாடாக இருந்த ஜெர்மனிக்கும் இடையிலான வித்தியாசங்களை இவர் முழுமையாக படித்தார். இதன் பிறகு இங்கிலாந்திலே தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை என்ற ஒரு கட்டுரையும் எழுதி வெளியிட்டார்.

ஒரு நாள் ஏங்கல்ஸிடம் ஒருவர் இங்கிலாந்தை ஆண்டு கொண்டிருப்பவர் யார்..? என்று கேட்டபோது, சொத்துதான் ஆள்கிறது என்பதுதான் அவரிடமிருந்து வந்த பதில். இவர் சார்டிஸ்ட் இயக்கத்தின் விழாக்களிலும், மாநாடுகளிலும் தன்னை ஈடுபட்டிருந்தார். பின்னர் நாளிதழ்களில் கட்டுரைகள் எழுதுவதின் மூலம் இந்த சார்டிஸ்ட் இயக்கத்திலுள்ள இடதுசாரி தலைவர்களிடம் நல்ல ஒரு நட்பை உருவாக்கினர். கற்பனை வாத சோசியலிஸ்ட்டாக இருந்த ரோபோட் ஓவனை பின் தொடர்ந்தவர்களுடன் அறிமுகமும் ஏற்பட்டது. பின்பு தி நியூ மாரல் வேர்ல்ட் என்ற நாளிதழில் கட்டுரைகளை எழுதத் தொடங்கினார்.

1844ல் இவர் வணிகம் படித்ததற்கு பிறகு  ஜெர்மனி வந்தடைந்தபோது பாரிஸில் காரல் மார்க்சுடன் 10 நாட்கள் மார்க்ஸுடன் தங்கினார். இந்த நிகழ்வை லெனின் சொல்கிற போது, “நட்பில் நம் இதயங்களை தொடுகின்ற பல புராணக்கதைகள் நிறைய இருக்கிறது. ஆனால் எல்லாத்தையும் தாண்டி ஆச்சரியபடுத்தும் வகையில் ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்த இரண்டு அறிஞர்களும் போராட்ட குணம் கொண்டவர்கள் தான் தத்துவங்களை உருவாக்கியது என்று உலக தொழிலாளி வர்க்கத்தால் மார்கட்டி சொல்ல இயலும் .

1845 முதல் 46 வரை மார்க்ஸும் எங்கல்சும் சேர்ந்து ‘தி ஹோலி ஃபேமிலி’ மற்றும் ‘ஜெர்மன் சித்தாந்தம்’ ஆகிய இரண்டு நூல்களை எழுதினார்கள். 1847 ஆம் ஆண்டில் சீர்திருத்தவாதிகளுடன் சேர்ந்து ‘லீக் ஆஃப் தி ஜஸ்டிஸ்’ (நேர்மையாளர்களின் கழகம்’) லண்டனில் நடந்த காங்கிரஸில் பங்கேற்றார். ‘நேர்மையாளர்களின் கழகம்’ பின்னர் ‘கம்யூனிஸ்ட் லீக்’ ஆக மாற்றப்பட்டது.

1847-ல் லண்டனில் இணைந்த கம்யூனிஸ்ட் லீக்கின் இரண்டாம் மாநாட்டிற்காக  மார்க்ஸும், எங்கல்சும் திட்டங்களை உருவாக்கும்  பொறுப்புகள் வழங்கப்பட்டது. இவர்கள் இருவரும் இணைந்து திட்டங்களை உருவாக்கினார்கள்… அதுதான் பின்னாளில் புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் அறிக்கையானது. மார்க்ஸின் தந்தையின் சொத்துக்களை விற்று கிடைத்த பணத்தால் தான் கட்சியின் அடையாளமாக இருக்கிற பத்திரிகையை தொடங்கினார்கள். இந்த நாளிதழின் இணை ஆசிரியராக ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ் இருந்தார். 20 மொழிகளில் வல்லுனராக இருந்தார் ஏங்கல்ஸ்.

ஏங்கல்ஸ் மார்க்சுக்கும் அவரின் குடும்பத்திற்கும் உதவி செய்வதில் மிக கவனமாக இருந்தார். மார்க்சுக்கும் ஜென்னியும் குழந்தைகளும் பட்டினியால் நோய்வாய்ப்பட்டு அவதிப்படும் போதெல்லாம் ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உதவி தவறாமல் வந்து கொண்டிருக்கும். 1883 மார்ச் 14 மார்க்ஸ் இயற்கை எய்தினார். மார்ச் 17ல் லண்டனில் உள்ள ஹைகேட் மயானத்தில் உடல் அடக்கம் நடந்தது. அந்த நேரத்தில் ஏங்கெல்ஸ்  இறுதி அஞ்சலி கூட்டத்தில் மார்க்ஸின் பணியை புகழ்ந்து உரை நிகழ்த்தினார்.

மூலதனத்தின் முதலாம் தொகுதி மார்க்ஸ் வாழும் போது வெளியிட்டு இருந்தாலும் இரண்டு மற்றும் மூன்றாம் தொகுதிகளை மார்க்ஸின் இறப்புக்குப் பின்பு ஏங்கல்ஸ் தான் திருத்தம் செய்து வெளியிட்டார். இது தலைமுறைகள் கடந்தாலும் காலத்தால் அழியாதவை என்று ஏங்கல்ஸ் சொல் மிகச்சரியானது. 1895 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ல் ஏங்கல்ஸ் நம்மை விட்டுப் பிரிந்தார்.

பூமியில் இருக்கின்ற எல்லா வளங்களும் வரும் தலைமுறைகளுக்கானது என்று மார்க்சும், இயற்கையின் மீது மனிதன் செலுத்தும் ஆதிக்கத்திற்கு தக்க  பதிலடி இயற்கை தரும் என்று ஏங்கல்ஸ் நம்மிடம் கூறிச் சென்றது இன்று மிகச்சரியானவை என்று இந்த காலகட்டத்தில் நிகழ்ந்துள்ள சம்பவங்களால் உறுதியாய் இருக்கிறது. ஏங்கல்ஸ் தனது இயற்கையின் இயங்கியலில் (டயலிடிக்ஸ் ஆப் நேச்சர்) மனித-இயற்கை மோதலை விவரித்தார். காலநிலை மாற்றத்தின் காரணமாக பூமியின் வெப்பம் அதிகரித்து வருகிறது. தொழிற்புரட்சிக்குப் பிறகு வளிமண்டல வெப்பநிலையில் ஏற்பட்ட மாற்றம் கணிக்க முடியாதது.

வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைட்டின் அளவை 2040 ஆம் ஆண்டுக்குள் 1.5 டிகிரியாக வைத்திருக்க வேண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது . இன்றைய வாழ்க்கை முறைகளுக்கேற்றவாறு இது சாத்தியம் ஆகுமா என்பது கேள்விக்குறிதான். இது நடந்தால் பூமியின் இருப்புக்கே ஆபத்து ஏற்படும் என பருவநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச குழுவின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கார்பன் வாயுக்கள் அதிகரிக்கும் போது, ​​பசுமைக்குடில் விளைவுக்கான சாத்தியக்கூறுகளும் அதிகரிக்கும். கடுமையான வெப்பமும் வெள்ளமும் உலகையே மாற்றிவிட்டது. அதன் விளைவுகளை இந்தியாவும் கேரளாவும் சந்தித்து வருகின்றன. நமது மாநிலம் கண்டிராத மிகப்பெரிய இயற்கை பேரிடர் ஜூலை 30 அதிகாலை வயநாட்டில் நடந்த கோர சம்பவம். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை. உலகம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய மீட்புப் பணி கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்று வருகிறது. பல நாட்களாக பெய்த கனமழையால் மண் வலுவிழந்து மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.

எந்த நெருக்கடியையும் சமாளிக்கும் வலிமை தான் மார்க்சியம். 200 ஆண்டுகளாக, முதலாளித்துவ மற்றும் வகுப்புவாத சக்திகள், பொய்கள் மற்றும் துஷ்பிரயோகம் மூலம் மார்க்சிய சித்தாந்தத்தை அழிக்க ரகசியமாக முயற்சி செய்து வருகின்றனர். இன்று உலகம் இதற்கெதிராக தீவிரமான  கவனிப்பும் விழிப்பும் தேவைப்படுகிறது.

கட்டுரையாளர்:

No photo description available.

K.J.தாமஸ்
மாநில செயற்குழு உறுப்பினர் – சிபிஐ(எம்), கேரளா.
முதன்மை மேலாளர் – தேசாபிமானி நாளிதழ்

தமிழாக்கம்: டயானா சுரேஷ்

நன்றி: 05.08.2024 தேசாபிமானி நாளிதழ்

https://www.deshabhimani.com/articles/friedrich-engels/1129782

 நூல்கள் :

கம்யூனிசத்தின் கோட்பாடுகள்

வரலாறும் வர்க்க உணர்வும்-ஜார்ஜ் லூகாஸ் –

நண்பர்களின் பார்வையில் எங்கெல்ஸ்

தொழிலாளர் குடும்பம்

மார்க்சிய லெனினிய தத்துவம்

நினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில் thamizhbook.com

 



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Show 1 Comment

1 Comment

  1. மகாலிங்கம் இரெத்தினவேலு

    மிகச் சிறப்பான கட்டுரை. எழுத்துப் பிழைகளைக் களைந்து வெளியிட்டால் இந்தத் தளத்தின் தரத்திற்கும் மதிப்பு. ஏங்கல்சும் மாரக்சும் எவ்வாறு ஒற்றிணைந்து பணியாற்றினார்கள்? இவர்கள் இந்த உலகத்தில் முதலாளித்துவத்திற்கு எதிராக எவ்வாறு ஒரு இயக்கமாக மாறினார்கள்? மார்க்சியத்தின் வலிமை ஆகியவற்றை அறிமுக நிலை வாசகர்களுக்கு எளிதாக புரியும் வகையில் சொல்லியிருப்பதற்கு வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *