Friend Poetry by Poet Neya Puthuraja. Book Day (Website) And Bharathi TV (Youtube) are Branches of Bharathi Puthakalayam.

நண்பன் – நேயா புதுராஜா



நண்பன்
—————–

எங்கு போனாலும்
கூடவே வருகிறாய்…
என் நினைவு தெரிந்து
நமது முதல் சந்திப்பு
இன்னும் பசுமையாய்….

பக்கத்து வீட்டு
பாலாஜியின் பந்து
எங்கள் வீட்டு
மொட்டை மாடியில் கிடந்தது…
அவன் வந்து கேட்டபோது
நான் அதைப் பார்க்கவில்லை
என்று சொன்ன நொடி முதலாக
நீ என்னிடம்-
பேசத் தொடங்கினாய்…
அடுத்த நாள் அதே பந்தோடு
பாலாஜி விளையாடினான்…
கேட்பாரற்று அழகிய
வண்ண பேனா ஒன்று
வகுப்பறைக்குச் சற்றே தள்ளி…
உன் பேச்சு தாங்கமுடியாமல்
உடனே ஒப்படைத்து விட்டேன்…
அடியிலிருந்து காப்பாற்றியதற்காய்
நன்றி சொன்ன நவீன்
இன்று வரை நல்ல நண்பனாக…

பிட்டு எழுதிப் போன பேப்பரை
எடுக்கவே விடவில்லை நீ…

அப்பாவிடம்
கல்லூரி கட்டணத்தையாவது
கூட்டிச் சொல்ல விட்டாயா…

ஓரிரு முறை
திருட்டு தம் அடித்ததற்கு
நீ போட்ட சத்தத்தில்
புகை என் பகையானது…

எந்த இடத்திற்குப் போனாலும்
யாரிடம் பேசினாலும்…
எது செய்ய வேண்டுமென
நினைத்தாலும்…
முன் வந்து நிற்கிறாய்
முணுமுணுக்கிறாய்…

கால ஓட்டத்தின்
கடைசிப் படிக்கட்டில் நிற்கிறேன்…
நான் வாழ்ந்த வாழ்க்கையை
திரும்பிப் பார்க்கும் போது…

அத்தனை இடங்களிலும்
உன் கைப்பிடித்தே
கடந்து வந்திருக்கிறேன்…
உன்னோடான நட்பினால்
கிடைத்த பலன்கள் பல
கண்முன்னே காட்சிகளாக…

என் இனிய நண்பனே…
உன்னோடான பல முரண்களால்…
உன்னை வேதனைப்படுத்திய
அத்தகைய தருணங்களுக்காக
மன்னிப்பு…
வா உன்னை கடைசியாக
ஒருமுறை வாரி அணைத்து கொள்கிறேன்…

இப்படிக்கு…நான்…
பெறுநர்…என் மனசாட்சி…


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 11 Comments

11 Comments

  1. சாந்தி சரவணன்

    மனசாட்சியையே நம் நண்பன். சிறப்பு தோழர் ‌‌மனமார்ந்த வாழ்த்துகள்.

  2. சாந்தி சரவணன்

    மனசாட்சியையே நம் நண்பன். சிறப்பு தோழர் ‌‌மனமார்ந்த வாழ்த்துகள். Keep rocking

    • Rathika vijayababu

      சிறப்பு தோழர் வாழ்த்துகள்

  3. இரா. ஜெயலக்ஷ்மி

    எளிய நடையில் மனதை கவந்தது கவிதை. நாம் தடுமாறும் போது நம்மை நேர்வழி படுத்தும் நண்பன் நம் மனசாட்சியே …. அருமை தோழர். வாழ்த்துகள் நேயா தோழர்…

  4. கீதா சுந்தர்

    நல்ல நண்பன் …பலரும் மதிக்காத நண்பன் … உடனே வருவான்…..அருமை பா…

  5. கமல் யாழி

    நம்மிடம் உள்ள ஆத்ம நண்பன் மனசாட்சி குறித்த தங்களின் கவிதை மிக எளிய வரிகளில் அருமையாக அமைந்துள்ளது தோழர்.

    பொதுவாக இந்த மனசாட்சி, தாயின் அரவணைப்பின் மறு உருவம். மனசாட்சி = உயிரற்ற தாய், தாய் = உயிருள்ள மனசாட்சி.

    எப்போதுமே நம்மோடே இருந்து கவனித்துக் கொள்ளும் ஒரு Trick!! தனித்திருக்கையில் இதன் தொனதொனப்பும் நல்லாத்தான் இருக்கும்..

    வாழ்த்தி மகிழ்கிறேன் தோழர். தொடர்ந்து எழுதுங்கள்.. 💐💐👏

  6. மூ.ஜெயபால்

    அருமை.
    எத்தனை முனுமுனுப்பு எவ்வளவு சத்தம்- தவறு செய்கையில் மனசாட்சியே உற்ற நண்பன் .

  7. ஜெயஸ்ரீ பாலாஜி

    மனசாட்சியிடம் பழக தெரிந்தால் பல பிரச்சனைக்களுக்கு முற்றுப்புள்ளி வந்து விடும். அழகிய வரிகளுக்கு வாழ்த்துக்கள் தோழர்

  8. Senthilkumar

    தவறு செய்யும் போது சட்டி காட்டும் மனசாட்சி, நாம் எந்த தவறும் செய்யாமல் தடுத்து நல்வழி படுத்துவதை, நம்முடன் இறுதி வரை பயணிக்கும் உற்ற தோழன், சிறப்பு மிகுந்த ஆழமான கருத்து தோழர். வாழ்த்துகள்

  9. M Senthil Kumar

    தவறு செய்யும் போது சுட்டி காட்டும் மனசாட்சி, நாம் எந்த தவறும் செய்யாமல் தடுத்து நல்வழி படுத்துவதை, நம்முடன் இறுதி வரை பயணிக்கும் உற்ற தோழன், சிறப்பு மிகுந்த ஆழமான கருத்து தோழர். வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *