From A German War Primer | ஒரு யுத்த பால பாடம் | Poem | Tamil Translation | Bertolt Brecht

ஒரு யுத்த பால பாடம் (From A German War Primer)

 

ஒரு யுத்த பால பாடம்

 

ஓ! மேட்டுக்குடியினரே
உங்களுக்கு
உணவு பற்றி பேசுவது தாழ்ச்சியே!
உங்கள் வயிறுதான் நிரம்பிவிட்டதே!

தரமான உண்டியை
ருசிக்குமுன்னே
‘தாழ்ந்தவர்கள்’ நாங்கள்
இவ்வுலகு விட்டு நீங்கிட வேண்டுமோ?

இளமாலைப் பொழுதுகளில்
எங்கிருந்து வந்தோம்

எங்கே செல்கிறோம்
என்றெல்லாம் சிந்திக்கவும்
இயலா கடும் சோர்வடைகிறோமே?
மலைமுகடுகளையும்
பெருங்கடலையும்
கண்டு ரசிக்குமுன்னே
எங்கள் காலம் முடிந்து விடுகிறதே?
தாழ்வென்பது எது என்று
சிந்திக்காதவரை
நாங்கள் உயர்வது
என்றென்றும் இல்லையே.

***************************

(ஆங்கில மூலத்தில் படர்க்கையில் இருப்பது மொழிபெயர்ப்பில் தன்மையில்
ஆக்கப்பட்டுள்ளது. கவிஞர் அறுதியாக கூறியிருப்பது கேள்வியாக
மாற்றப்பட்டுள்ளது.)

LeMO Bertolt Brecht
                                                    Bertolt Brecht

 

From A German War Primer

AMONGST THE HIGHLY PLACED
It is considered low to talk about food.
The fact is: they have
Already eaten.

The lowly must leave this earth
Without having tasted
Any good meat.

For wondering where they come from and
Where they are going
The fine evenings find them
Too exhausted.

They have not yet seen
The mountains and the great sea
When their time is already up.
If the lowly do not
Think about what’s low
They will never rise.

 

மொழிபெயப்பாளர்

இரா .ரமணன்

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *