ஜி.ஏ கௌதம் கவிதைகள் | G.A.Gowtham Poems

 

ஏனெனில்

யாரேனும் என் கவிதைகளை
வேறு ஒருவர் பெயரிலாவது
அவளிடம் கடத்தி விடுங்கள்.

ஏனெனில்,

நாம் யாருக்காக எழுதுகிறோமோ
அவர்கள் மட்டும்
அதை வாசிப்பதே இல்லை…

சாவி

அதி தீவிரமாக
காதலுக்குள் நுழையும்
எந்த ஆணும்
அக்கதவின் சாவியினை
பத்திரப்படுத்திக் கொள்வதில்லை.

துவங்கும் காதலின்
ஆனந்தக்குளியலில்
நீந்தியபடியே ஏதோ ஒரு நாள்
தொலைத்து விடுகிறார்கள்.

பின்னொரு நாள்,

உறங்கும் தனிமையில்
அவனைப் பூட்டிச்செல்லும் அவளிடம்
அவர்களால் மீட்கவே முடிவதில்லை
அந்தச் சாவியை

தொலைத்து விட்ட விரக்தியில்
பூட்டிய கதவின் அடியில்
தலை சாய்த்தபடியே
உறங்கிக் கிடக்கிறார்கள்

இன்னோர் கரம்
திறக்கும் நாளுக்காக…
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *